Published:Updated:

‘கடைத்தேறியது என் ஜன்மம்!’

‘கடைத்தேறியது என் ஜன்மம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘கடைத்தேறியது என் ஜன்மம்!’

பிரேமா நாராயணன்

‘கடைத்தேறியது என் ஜன்மம்!’

பிரேமா நாராயணன்

Published:Updated:
‘கடைத்தேறியது என் ஜன்மம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘கடைத்தேறியது என் ஜன்மம்!’

காசிக்குச் சென்றால் புண்ணியம்; கங்கையில் நீராடினால் இன்னும் புண்ணியம். காசி விஸ்வநாதரை தரிசித்தால் கோடானுகோடி புண்ணியம்! அதே விஸ்வநாதர் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் கிடைத்தால், அது எத்தகைய புண்ணியம் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா? அத்தகைய பெரும்பாக்கியத்தைப் பெற்றிருப்பவர் ஒரு தமிழர்; சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.சுப்புசுந்தரம்.

வாரணாசியில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலுக்கு, 238 ஆண்டுகள் கழித்து, கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி வெகு சிறப்பாக நடந்தேறியிருக்கிறது மகாகும்பாபிஷேகம். இந்த வைபவம் குறித்து மெய்சிலிர்க்க விவரிக்கிறார் சுப்புசுந்தரம்.

‘‘எங்கள் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டி. நானும் என் மனைவி அன்னபூரணியும் அடிக்கடி காசிக்குச் செல்வோம். அப்படி ஒருமுறை காசிக்குப் போயிருந்தபோது, அன்னபூரணி கோயில் கதவுக்கு வெள்ளிக் கவசம் செய்து கொடுக்கும் வாய்ப்பு முதலில் எனக்குக் கிடைத்து, பிறகு கைநழுவிவிட்டது. அந்த வருத்தமும் உறுத்தலும் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது.

அதன் பிறகு, ஒருமுறை காசிக்குச் சென்றிருந்தபோது, ஸ்ரீவிஸ்வநாதரை தரிசித்துவிட்டு, அவரை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது, அறிமுகம் இல்லாத ஒருவர் என்னை அழைத்தார். இந்தி மொழியில் ஏதோ கேட்டார். எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னேன். உடனே என்னை கோயில் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றவர், மொழிபெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன்  உரையாடினார். அதன்பிறகுதான் தெரிந்தது, என்னை அழைத்த நபர்தான் அந்தக் கோயிலின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்று. அவர் என்னிடம், `விஸ்வநாதர் சந்நிதியின் வடக்கு நுழைவாயிலுக்கு வெள்ளிக் கவசம் செய்து தருகிறீர்களா?’ என்று கேட்டார். ஒரு நொடி, எனக்கு மேனி சிலிர்த்துவிட்டது. என்னே அவன் சித்தம்! என்னே அவன் திருவிளையாடல்!

‘கடைத்தேறியது என் ஜன்மம்!’

‘அன்னபூரணி கோயிலுக் குக் கதவு செய்து தரமுடிய வில்லையே என்று வருத்தப் பட்டாயே... வா... என் கோயில்  வாசலுக்குக் கதவு செய்யும் பொறுப்பையே உன்னிடம் ஒப்படைக்கிறேன். இப்போது மகிழ்ச்சிதானே!’ என்று அந்த ஈசனே சொல்வது போல் இருந்தது. உடனே, சிறிதும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்துவிட்டேன். இறைவன் கொடுத்த பணியாயிற்றே... மிகச் சிறப்பாகச் செய்து கொடுத் தேன். அந்த வெள்ளிக் கவசத்தைக் கோயிலுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வும் நல்லவிதமாக நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, கோயிலில் பல வளர்ச் சிப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டேன். கோயில் நிர்வாக அதிகாரிகளுடன் நல்ல அறிமுகமும், கோயிலை மேம்படுத்தும் வேலைகளை அவர்களுடன் சேர்ந்து செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நம் தென்னிந்தியக் கோயில் களில் பராமரிப்புப் பணிகள் பற்றி எடுத்துச் சொன்னதும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்ட வர்கள், அதேபோல் காசிவிஸ்வநாதர் கோயிலிலும் பராமரிப்புப் பணிகளைத் தொடங்கவேண்டும் என  விரும்பினர்.  அதுதான் கும்பாபிஷேகத்துக்கான பிள்ளையார் சுழி.

பின்னர், பேச்சுவார்த்தை படிப்படியாக முன்னேறி, கும்பாபிஷேகமே செய்துவிடலாம் என்று அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்தபோது, அந்த மாபெரும் திருப்பணியைச் செய்யும் மகத்தான பொறுப்பை இறைவன் எனக்கு வழங்கியதுதான் என் பிறவிப்பேறு! கும்பாபிஷேகம் செய்யும் பொறுப்பை உத்திரப்பிரதேச அரசும் எழுத்துபூர்வமாக எனக்கு வழங்கியது.

இந்தியாவின் தலை சிறந்த புண்ணியத் தலமான காசிக் கோயிலுக்கு கும்பாபி ஷேகம் செய்யும் பொறுப்பு. அதுவும் தமிழனான எனக்கு! என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வாய்ப்பு! நான் அடைந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!

இந்தத் திருப்பணியை மிகச் சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற சங்கல்பத்தை அப்போதே எடுத் துக்கொண்டேன். உரிய பணிகளைத் திட்டமிட்டு, ஒவ்வொன்றுக்கும் தகுந்த அன்பர்களை அணுகி, வேலைகளைத் தொடங்கினோம்.

திருப்பதி கோயிலில் மூலவரை வெளியே எடுக்காமல் செய்யப்படும் ‘புனவர்தன பிரதிஷ்டை’ என்ற வழிமுறைப்படி, கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. பிள்ளையார்பட்டி தலைமை குருக்களும் கற்பக விநாயகர் வேதபாட சாலையின் தலைவருமான பிச்சை குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகத்தை நடத்துவது என்று முடிவு செய்து, அவரிடமும் பேசினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

பிச்சை குருக்கள் வந்து யாக சாலைக்கான இடத்தைத் தேர்வுசெய்தார். குப்பைகள் நிறைந் திருந்த அந்த இடத்தை 24 மணி நேரத்தில் சுத்தம் செய்தோம். மாயவரத்தில் இருந்து அனுபவம் பெற்ற யாகசாலை அமைப்பாளர்கள் வந்து, நம் தமிழகக் கோயில் கும்பாபிஷேகத்தில் அமைப்பது போன்று பிரமாண்டமான முறையில் யாகசாலை அமைத்துக் கொடுத்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கடைத்தேறியது என் ஜன்மம்!’

தினமும் யாக சாலையில் 4 கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. கும்பாபிஷேகப் பணிகள் துவங்கிய நாளிலிருந்து, பிச்சை குருக்கள் எடுத்துக்கொண்ட சிரமங்களையும் முயற்சி களையும் வார்த்தை களால் விவரிக்க முடியாது.

கும்பாபிஷேகத்துக்கு, நம் நாட்டின் பிரசித்தி பெற்ற பல கோயில்களிலிருந்து தலைமை குருக்கள் பலரும், அயல்நாட்டுக் கோயில்களிலிருந்து பண்டிதர்கள் பலரும் வந்திருந்து யாகசாலையையும் குடமுழுக்கையும் நடத்தித் தந்தனர்.

ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலின் தலைமைப் பூசாரி பாண்டாவும் கோயிலின் மற்ற பூசாரி பாண்டாக் கள் 60 பேரும் அனைத்துப் பணிகளிலும் ஆதரவு தந்து, இணைந்து பணியாற்றியதுதான் இந்தக் கும்பாபிஷேகத்தின் மிகப் பெரிய பலம் மற்றும் சிறப்பம்சம்.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம் என்பதால், அதைக் காண பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கங்கை நதியிலிருந்து புனிதத் தீர்த்தம் எடுத்து வந்தபோது, இருபுறமும் மக்கள் நின்று, மலர்தூவி வாழ்த்தினர். யாகசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித நீர், குறித்த நேரத்தில் கும்பத்தில் ஊற்றப்பட்டது. அந்த விநாடியில் உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் நீர் வழிய கைகூப்பி நின்றேனே தவிர, வேறு எந்த சிந்தனையும் மனதில் தோன்றவில்லை. அவன் அருளை நினைத்து ஆனந்தக் கூத்தாடியது என் மனம்!'’ - இன்னும் அந்தப் பிரமிப்பும் சிலிர்ப்பும் சுப்பு சுந்தரத்தின் மனதில் நிறைந்திருப்பது, அவர் வார்த்தைகளிலும் முகத்திலும் தெரிகிறது. 

‘கடைத்தேறியது என் ஜன்மம்!’

இந்தக் குடமுழுக்கு விழா வெற்றியின் பின்ன ணியில் சுப்பு சுந்தரத்துடன் இன்னும் சில அன்பர் களும் சேர்ந்து சேவை புரிந்துள்ளனர். யாகசாலை பூஜைகளுக்கான செலவையும் ஸ்ரீஅன்னபூரணி கோயிலின் மேல் கோபுரம் செப்பனிடும் பணியை யும் சென்னை முருகப்பா குழும அறக்கட்டளை எம்.வி. சுப்பையா ஏற்றுக்கொள்ள, கோயிலுக்குள் மார்பிள் தரை போடும் செலவை ஈரோடு சிவகுமார் குடும்பமும், 4 கோபுரங்கள் சீரமைப்பு மற்றும் கலசங்கள் பொருத்தும் செலவை வி.முத்துக்குமரன் குடும்பமும், குடி தண்ணீர் வசதி, கழிவறைகள் மற்றும் அனைத்து சீரமைப்புப் பணிகளின் செலவை கே.சி.பி. குழுமத்தின் தலைவர் இந்திரா தத் குடும்பமும் ஏற்றுக்கொண்டு, சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளனர்.   

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன், இப்பணிகள் முழுவதிலுமே சுப்புசுந்தரத்துக்கு மிகுந்த ஆதரவும் உற்சாகமும் தந்து வாழ்த்தியதையும் நன்றியுடன் குறிப்பிட்டார் சுப்புசுந்தரம்.

தொடர்ந்து, ‘‘உலகின் தலைசிறந்த புண்ணிய ஸ்தலத்தின் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்யும் திருப்பணி எனக்குக் கிடைத்தது, எந்த ஜன்மத்தில் நானும் என் மனைவியும் செய்த புண்ணியமோ! கடைத்தேறியது... என் ஜன்மம்’’  என்று கண்ணீர்மல்க, காசி நாயகனின் மீதான காதலில் கரைகிறார் சுப்புசுந்தரம்.

படங்கள்: மனீஷ் கட்ரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism