Published:Updated:

சென்னையில் ஐயப்பன் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி!

எஸ்.கதிரேசன்
சென்னையில் ஐயப்பன் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி!
சென்னையில் ஐயப்பன் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி!

சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு பாடும் ஐயப்பன் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, நாளை 28-ம் தேதி (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதற்கு லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினர் இசை அமைக்கின்றனர். இதில் ஐயப்ப பக்தர்கள், பெருமளவில் கலந்துகொள்கின்றனர்.

ஐயப்ப பக்தர்களுக்காக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, 29 ஆண்டுகளாகச் சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னணி பின்னணிப் பாடகர்கள் கலந்துகொண்டு பாடும் இந்த இசை நிகழ்ச்சி ஐயப்ப பக்தர்களுக்காக நடத்தப்படுவதால், இதற்காக எந்தவித டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

இந்த நிகழ்ச்சியில், ஐயப்ப பக்தர்களை மகிழ்விக்கும் வகையில், திரைப் படத்துறையின் பிரபல பாடகர்களும் இசைக் கலைஞர்களும் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சிக்காக, சென்னை காமராஜர் அரங்கில், 'வாழை அம்பல'த்துடன் 'பதினெட்டுப்படி'  அமைக்கப்பட்டு, அதன்மேல் கம்பீரமாக ஐயப்பன் காட்சி தருகிறார். இதையொட்டி நாளை படி பூஜை நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் கலைமாமணி கங்கை அமரன் தலைமை தாங்குகிறார்.

பின்னணிப் பாடகர்கள் முகேஷ், மாலதி லஷ்மன், வேல்முருகன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, செந்தில்தாஸ், ரோஷினி, மகாலிங்கம், ப்ரியா ஹேமேஷ், கர்நாடக இசைப்பாடகி சுசித்ரா, திவாகர், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன், செந்தில் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பக்திப் பாடல்கள் பாடுகின்றனர்.