Published:Updated:

மஹாளய அமாவாசை: 15 நாள்களில் 15 பலன்கள் என்னென்ன?

மஹாளய அமாவாசை
மஹாளய அமாவாசை

'மஹாளயம்' என்றால் `பெரிய கூட்டம் என்று பொருள்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மஹாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர் பித்ருலோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாள்கள் நம்மோடு தங்கும் காலமே மஹாளய பட்சம் ஆகும்.

பொதுவாக புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை தொடங்கி அமாவாசை வரையிலுமான 15 நாள்கள் மஹாளயபட்ச காலமாக அனுஷ்டிக்கப்படும். நிறைவு நாளான அமாவாசை தினமே மஹாளய அமாவசை தினமாகும்.

நிகழும் சார்வரி வருடத்தில் புரட்டாசி மாதம் இரண்டு அமாவாசை தினங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதலில் வரும் அமாவாசையைக் கணக்கில் கொண்டு மஹாயள காலம் தொடங்கி அனுஷ்டிக்கப்படுகிறது.

மஹாளய அமாவாசை
மஹாளய அமாவாசை

அவ்வகையில் வரும் 17.9.2020 (புரட்டாசி - 1) வியாழனறு மஹாளய அமாவாசை வருகிறது. மஹாளய பட்சத்தின் 15 நாள்களும் பித்ரு பூஜை செய்ய உகந்தவை. குறிப்பாக மஹாளயபட்ச காலத்தில் வரும் மஹா பரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீ பாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பு.

மஹாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
  1. முதல்நாள் - பிரதமை: பணம் சேரும்

  2. இரண்டாம் நாள் - துவிதியை: நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

  3. மூன்றாம் நாள் - திரிதியை: நினைத்தது நிறைவேறும்.

  4. நான்காம் நாள் - சதுர்த்தி: சத்ரு பயம் நீங்கும்.

  5. ஐந்தாம் நாள் - பஞ்சமி: செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துகள் பெருகும்.

  6. ஆறாம் நாள் - சஷ்டி: புகழும் கீர்த்தியும் உண்டாகும்.

  7. ஏழாம் நாள் - சப்தமி: பதவி உயர்வுகளில் தடைகள் நீங்கும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும், தலைமைப் பதவி தேடி வரும்.

  8. எட்டாம் நாள் - அஷ்டமி: அறிவாற்றல் கிடைக்கும்.

  9. ஒன்பதாம் நாள் - நவமி: திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.

  10. பத்தாம் நாள் - தசமி: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும், விருப்பங்கள் பூர்த்தியாகும்.

  11. பதினோராம் நாள் - ஏகாதசி: படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி உண்டாகும்.

  12. பன்னிரண்டாம் நாள் - துவாதசி: விலையுயர்ந்த ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

  13. பதிமூன்றாம் நாள் - திரயோதசி: பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், நல்ல வேலை - தொழில் அமையும்.

  14. பதினான்காம் நாள் - சதுர்த்தசி: ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்கும், எதிர்கால தலைமுறைக்கு நன்மை கிடைக்கும்.

  15. பதினைந்தாம் நாள் - மஹாளய அமாவாசை: முன்னோர் ஆசியால் மேற்சொன்ன அனைத்து பலன்களும் ஸித்திக்கும்.

- இத்துடன், மஹாளய அமாவாசை சிறப்புகளையும், மஹாளய பட்ச நாள்களில் கடைப்பிடிக்க வேண்டியவற்றையும் முழுமையாக சக்தி விகடன் இதழில் வாசிக்க > மகத்தான பலன்களைத் தரும் மஹாளய அமாவாசை! https://bit.ly/35ca1DD

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு