Published:Updated:

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்
பிரீமியம் ஸ்டோரி
முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

Published:Updated:
முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்
பிரீமியம் ஸ்டோரி
முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

பொதுவாக, அருவுருவ வழிபாடு என்றதும் நம் நினைவுக்கு வருவது லிங்கமூர்த்தமே. அருட்பெருஞ் ஜோதியான சிவன், பக்தர்கள் வழிபட ஏதுவாக, லிங்க ரூபம் கொண்டு அருள்பாலிக்கிறார். வைணவ மார்க்கத்தில் பெரும்பாலும் பகவான் மகாவிஷ்ணுவை திவ்யமங்கள விக்கிரக ரூபமாகவே வழிபடுவது வழக்கம். இதில் விதிவிலக்காக, பெருமாள் அருவுருவமாக, ஒரு கம்பத்தின் வடிவு கொண்டு ‘கம்பத்து அடியார்’ என்று திருப்பெயரில் அருள்பாலிக்கும் தலம் கல்லங்குறிச்சி, ஸ்ரீகலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில். 

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

பயிர்களில் நோய் தொற்றிவிட்டது, விளைச்சலுக்கு ஏற்ற விலையில்லை, வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு உடல்நிலைக் கோளாறு, தங்களின் குடும்பத்தில் தகராறு, கிரகக் கோளாறுகள்... இப்படி என்று எந்தப் பிரச்னை என்றாலும், இந்தப் பகுதி மக்கள் நம்பிக்கையுடன் வந்து, கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாளையே வேண்டிக்கொள்கிறார்கள். எளிய  மக்களின் திருப்பதியாக விளங்கும் இந்தத் திருத்தலம் அரியலூரிலிருந்து சுமார் ஆறு கி.மீ தொலைவில் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்“முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ‘மங்கான் படையாட்சி’ என்பவர் ‘கோபாலன் குடிக்காடு’ (கோப்பிலியன் குடிக்காடு) எனும் கிராமத்தில் வசித்துவந்தார். மங்கான், நிறைய பசுக்களை வளர்த்து வந்தார். மந்தையில், நிறைமாதக் கருவுடன்
இருந்த பசு ஒன்று, மேயச்சென்ற இடத்தில் காணாமல் போனது. மங்கானும், பணியாளர்களும் காணாமல் போன பசுவை இரவு, பகலாகத் தேடியும் கிடைக்கவில்லை. கன்றை ஈன்றுவிடும் நிலையில் இருந்த பசு காணாமல் போய்விட்டதால், அனைவரும் வருந்தினர். தங்களின் இறைவனான மாலவனை வேண்டிக்கொண்டனர்.

அன்றிரவு மங்கானின் கனவில், பெருமாள் ஒரு பெரியவரின் உருவம் கொண்டு தோன்றி, “துயரம் வேண்டாம், மகனே! மேற்கே இரண்டு கல் தொலைவில், ஆலமரத்துக்கும் மகாலிங்க மரத்துக்கும் இடையில் உள்ள சங்குப் புதரில்தான் உன் பசு மறைந்திருக்கிறது. வைகறையில் அங்குச் சென்றால் அதைக் காணலாம்” என்று தெரிவித்து மறைந்தார்.

பொழுது புலர்வதற்காகக் காத்திருந்த மங்கான், விடிந்ததுமே கனவில் அவருக்குத் தெரிவிக்கப்பட்ட இடத்துக்கு ஊர்க்காரர்களுடன் சென்றார். நாரணன் வாக்குப் பொய்க்குமா? அந்த இடத்தில், மங்கானின் பசு தான் ஈன்ற கன்றோடு நின்றுகொண்டிருந்தது.

மங்கானைக் கண்டதும் பசு, பாசத்துடன் குரல் எடுத்துக் கத்தியபடியே ஓடிவந்து அவரை நாவால் வருடியது. அங்கு, அவர்களுக்கு வேறோர் ஆச்சர்யமும் காத்திருந்தது. பசு நின்ற இடத்தில் ஒரு கல் கம்பம் கிடந்தது. அதன் மீது பசு பால் சொரிந்த தடம் இருந்தது. அந்தக் கம்பத்தை வணங்கிவிட்டு, பசுவோடு ஊர் திரும்பினார் மங்கான்.  

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

ஏழு தினங்கள் சென்றன. மங்கான், தனது கனவில் பெரியவர் வடிவில் தோன்றிய பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்தார்.  அன்று இரவு, மங்கான் கனவில் மீண்டும் தோன்றினார் பெருமாள்.

“முன்னொரு காலத்தில், உன் முன்னோர்கள் எனக்குக் கோயில் எழுப்ப கற்கம்பம் கொண்டு வரும்போது, வண்டியின் அச்சு முறிந்தது. அதனால் அந்தக் கம்பத்தை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டனர். அந்தக் கல் கம்பத்தை நிலைநிறுத்தி வணங்குங்கள். கலியுகத்தில் மக்களின் குறைதீர்க்க நான் அந்தக் கல்லில் எழுந்தருளியிருக்கிறேன்” என்று கூறி மறைந்தார். 

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், இரு முறையும் கனவில் தரிசனம் கொடுத்தவர் அந்தப் பெருமாளே என்று உணர்ந்தார் மங்கான். கம்பம் கிடந்த திசையை நோக்கி விழுந்து, ‘கலியுகப் பெருமாளே’ என்று கூறி வணங்கினார்.

விடிந்ததும் ஊர்க்காரர்களைக் கூட்டிச் சென்று,  12 அடி அளவிலிருந்த அந்தக் கம்பத்தை நட்டு வழிபட்டார். இறைவன் கம்ப உருவில் தோன்றி அருள்வதால், அவருக்கு ‘கம்பத்து அடியார்’ என்ற திருநாமமும் ஏற்பட்டது. அந்த இடத்தில் பெருமாளுக்கு ஒரு பெரும் கோயிலையும் எழுப்பினார். அதுவே, கல்லங்குறிச்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.

ஆலயத்தின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், முதலில் பலிபீடம் மற்றும் கொடிமரம் அமைந்திருக்கின்றன. தொடர்ந்து  கருடாழ்வார் தனிச் சந்நிதியில் அருள்கிறார். அவர் சந்நிதிக்கு முன்பாக, பக்தர்கள் விளக்கேற்றி வேண்டிக்கொள்கின்றனர்.

அடுத்து ஆலயத்தின் மகா மண்டபம். ஒவ்வொரு தூணிலும் தசாவதார ரூபங்கள் மிக அற்புதமாகக் காட்சிதருகின்றன.கோயிலின் தல வரலாறு, அங்கு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. அந்த அழகோவியங்களை தரிசித்தபடியே அர்த்த மண்டபத்தில் நுழை கிறோம். அங்கிருந்து கருவறையில் அருளும் பெருமாளை தரிசிக்கலாம்.

கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் ஸ்ரீகம்பத்து பெருமாள். கம்பத்தின் அடிப்பகுதியில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். சிறிய திருவடியான ஆஞ்சநேயர் இங்கு ருத்ர அம்சம் கொண்டவராகக் காட்சிகொடுப்பதால் இவருக்கு ‘ருத்ர ஆஞ்சநேயர்’ என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

கையில் கதாயுதம் இன்றி வடக்கு நோக்கிப் பார்த்தவராக இருக்கிறார் இந்த அனுமன். கம்பப் பெருமானை சிறிய திருவடி தாங்குவதுபோன்று அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. மூலவர், இங்கு கம்ப ரூபத்தில் அருவுருவமாகத் தாயாரோடு கோயில்கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு தாயாருக்கென தனிச் சந்நிதி இல்லை.

கருவறைக்கு முன் காணப்படும் அர்த்த மண்டபத்தில் உற்சவமூர்த்தியாக, ‘கலியுக வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும்  பூதேவியுடன் காட்சியருள்கிறார். பக்தர்கள் இந்தச் சந்நிதியையே தாயார் சந்நிதி என்று அழைக்கின்றனர். 

முதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே! - கல்லங்குறிச்சி அற்புதம்

இந்தத் திருக்கோயிலில் இருக்கும் ஸ்தல விருட்சமான மகாலிங்க மரம் முந்நூறு ஆண்டு களுக்கும் மேலான பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் பிரமாண்ட பிராகாரத்தைச் சுற்றி வந்தால், பக்தர்கள் காணிக்கை செலுத்தும், தானியக் கிடங்கு இருப்பதைக் காண இயலும். விளைச்சலில் முதல் அறுவடையாக நெல், மிளகாய், பருத்தி, எள், கடலை ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

கோயிலிலிருந்து நூறடி தொலைவில் மான், மாடு மற்றும் மயில் கொட்டகை உள்ளது. அதேபோல் சுற்றுவட்டாரத்தில் யார் வீட்டில் பசு, கன்று ஈன்றாலும் முதல் கன்று, வரதராஜ பெருமாளுக்கே நேர்ந்துவிடப்படுகிறது. இதற்காகவே கோயிலுக்கு அருகில் தனிக் கொட்டகை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கவியோகி சுத்தானந்த பாரதியார், இந்தக் கலியுக வரதராஜ பெருமாளைப் போற்றிப் பாடியிருக்கிறார்

பொலிவுறு செல்வச்சீரும் புகழுடன் அறிவும் ஓங்கும்
நலிவுறுந் தீய வெல்லாம்; நல்லன நாளும் சேரும்
கலியுக வரதன் பேரைக் கனவிலே நினைத்த பேர்க்கும்
உலகியல் வாழ்க்கை எல்லாம் உயர்ந்தபேர் இன்பம் ஆமே!


அற்புதமான பாடல்! அருள்மிகு கலியுக வரதராஜப் பெருமாளின் திருநாமத்தை நினைத் தாலே போதும் சகல சம்பத்தும் வாய்க்கும். செல்வ வளமும், புகழும், ஞானமும் ஓங்கும். தீமைகள் அனைத்தும் அகன்று, நாளும் நல்லன சேரும் என்கிறது இந்தப் பாடல்!

சித்ரா பௌர்ணமி, வைகாசி விகாசம், அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு என்று வருடத்தில் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றாலும், அரியலூர் மாவட்டமே திருவிழாக்கோலம் பூணுவது, இந்தக் கோயிலின் பிரம்மோற்சவத்தின்போதுதான். ஒவ்வொரு வருடமும், பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் வரும் ஸ்ரீராம நவமியன்று தொடங்கி பத்து நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 

வாழ்வில் இன்னல்கள் தீர, சர்வ வளமும் சேர, ஒருமுறை கல்லங்குறிச்சி சென்று வாருங்கள்... கலியுகக் கடவுளான வரதராஜ பெருமாள் உங்கள் துயரங்களை நீக்கி நல்லருள் புரிவார்.

சி.வெற்றிவேல், படங்கள்: தே.தீட்சித்

ஸ்வாமி : ஸ்ரீகலியுக வரதராஜர்.

தலவிருட்சம் :
மகாலிங்கமரம்.

நடைதிறப்பு : காலை 6.30 முதல்  பகல் 12.30 மணி வரை; மாலை 3.00 முதல் இரவு 9.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

அமைவிடம் : அரியலூரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்தத் தலம். தேர்த்திருவிழா, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் சிறப்பு விழாக் காலங்களில் நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் அரியலூரிலிருந்து இயக்கப்படுகின்றன.