ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!

14-05-19 வீரபாண்டி கௌமாரியம்மன் பொங்கல் விழா

வீரபாண்டியனுக்கு கண்ணொளி தந்து காப்பாற்றிய அன்னை கௌமாரியம்மன் தேனி மாவட்டம் வீரபாண்டியில் வைகை வனத்தில் வீற்றிருக்கிறாள். எந்நேரமும் வேண்டிய வரங்களை அளிக்கும் இந்த அன்னை விழிமூடா வேல்விழியாள். இவளுக்கு சித்திரை விழா வரும் 7-05-19-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முக்கிய நாளான பொங்கல் விழா 14-05-19 அன்று நடைபெறவுள்ளது.

14.05.19 அன்னை வாசவி ஜயந்தி  

வசந்த ருதுவில் வைகாசி சுத்த தசமி நன்னாளில் வெள்ளிக்கிழமை மகம் நட்சத்திரத்தில் அன்னை பராசக்தியே பூவுலகில் ஸ்ரீவாசவி தேவியாக அவதரித்தாள். ஆந்திர மாநிலம், பெனுகொண்டாவில் பிறந்த அன்னை வாசவி தீய சக்திகளை ஒழித்து இறுதியில் கன்னிகாபரமேஸ்வரியாக பூவுலகில் நிலைத்து நின்றாள். அன்னை வாசவி அவதரித்த தினம் இன்று.

விழாக்கள் விசேஷங்கள்!

16.05.19 பரசுராமத் துவாதசி  

வைகாசி ஏகாதசியன்று விரதம் இருந்தால் வித்யாதானம் செய்த பலனைப் பெறுவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்கும் என்பார்கள். ஏகாதசிக்கு பின்பு வரும் துவாதசி நாள் விரதம் அதிலும் குறிப்பாக பரசுராமத் துவாதசி நாளான இந்த புனித நாளில் நாராயணனைத் துதித்து, விரதம் இருந்து வழிபட்டால் ஞானத்தையும் தவ வாழ்வையும் பெறலாம்.

18.05.19 - சம்பத் கௌரி விரதம் 

16 வகை கௌரி வழிபாட்டில் சிறப்பானது சம்பத் கௌரி விரதம். உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் சம்பத் கௌரி தேவி. பசுவுடன் காட்சி அளிக்கும் இவளே கோமதி, ஆவுடைநாயகி ஆகிய திருப்பெயர்களையும் தாங்கி நிற்கிறாள். இன்று விரதம் இருந்து சம்பத் கௌரியை வழிபட்டால் தனம், தானியம், மாடு, மனை  எல்லாம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

17-05-19 நரசிம்ம ஜயந்தி மகா உத்ஸவம்

தஞ்சை மாவட்டம், சாலியமங்கலத்தில் ஸநரசிம்ம ஜயந்தி விழா வரும் 17-05-19-ம் நாள் தொடங்கி 19-05-19 வரை 3 நாள்கள் நடைபெறவிருக்கிறது. கருடசேவை, ஸ்ரீசீதா கல்யாண மகா உத்ஸவம், பாகவத நாட்டிய மேளம், ஸ்ரீருக்மிணி கல்யாணம், ஆஞ்சநேயர் உத்ஸவம் என சிறப்பான வைபோகங்கள் நடைபெறவுள்ளது.

19-05-19 காஞ்சி ஸ்ரீமகாஸ்வாமிகள் மகா உத்ஸவம்

சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் மகாஸ்வாமிகள் பாகவத  சேவா ட்ரஸ்ட் அமைப்பினர் 19-ம் தேதி தொடங்கி 25-05-19 வரை 7 நாள்கள் காஞ்சி ஸ்ரீமகாஸ்வாமிகள் ஜயந்தி விழாவைக் கொண்டாட உள்ளனர்.ஹோமங்கள், வேத பாராயணங்கள், உபன்யாசங்கள், சிறப்பு பூஜைகள் எனச் சிலிர்ப்போடு நடைபெறவுள்ளது இந்த விழா.

மே மாதம் சபரிமலை நடைதிறப்பு   : மே மாதம்   14-ம் தேதி மாலை 5 மணி தொடங்கி 19-ம் தேதி இரவு வரை திருநடை திறந்திருக்கும்.

திருவண்ணாமலை  கிரிவலம்   :  திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நாளும் நேரமும் - 17.05.19 காலை 04:26 தொடங்கி மறுநாள் 18.05.19 அதிகாலை 03:24 மணி வரை.