Published:Updated:

பழம்பெரும் இசையமைப்பாளருக்கு பாராட்டு விழா... 3 கவர்னர்கள், ரஜினி, கமலுக்கு அழைப்பு...

பழம்பெரும் இசையமைப்பாளருக்கு பாராட்டு விழா... 3 கவர்னர்கள், ரஜினி, கமலுக்கு அழைப்பு...
பழம்பெரும் இசையமைப்பாளருக்கு பாராட்டு விழா... 3 கவர்னர்கள், ரஜினி, கமலுக்கு அழைப்பு...
பழம்பெரும் இசையமைப்பாளருக்கு பாராட்டு விழா... 3 கவர்னர்கள், ரஜினி, கமலுக்கு அழைப்பு...

சென்னை: பழம்பெரும் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள 3 மாநில கவர்னர்கள், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 450 படங்களில் இசையமைத்தவர் தட்சிணாமூர்த்தி. தமிழில் ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகிறது படத்தில் இவர் இசையமைத்த `நல்ல மனம் வாழ்க' பாடல் அந்த காலத்தில் மிக பிரபலம்.

முதன் முதலாக‌ நல்ல தங்காள் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தட்சிணாமூர்த்தி. ஜீவநாடி, ஒரு கோவிலில் இரு தீபங்கள், நந்தா, என் நிலா, ஜகத்குரு, ஆதிசங்கரர் உள்ளிட்ட என தமிழில் பல‌ படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

##~~##
13வது வயதில் சினிமாவுக்கு வந்த அவருக்கு, தற்போது 93 வயது ஆகிறது. இப்போதும் படங்களுக்கு இசையமைக்கிறார். 80 வருடங்களாக சினிமாவில் இருக்கும் தட்சிணா மூர்த்திக்கு ஜுலை 28ஆம் தேதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்ஷினா அமைப்பு செய்து வருகிறது.
இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் எம்.பத்மநாபன், சி.கே.ரவி ஆகியோர், '' இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தியின் பாராட்டு விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, மேற்குவங்க கவர்னர்கள் பங்கேற்கின்றனர். ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் போன்றோரையும் அழைத்துள்ளோம்.இசை நிகழ்ச்சியில் கே.ஜே.ஏ.ஜேசுதாஸ், பி.அகிலா, ஜானகி, வாணி ஜெயராம் என அனைத்து பாடகர்களும் பாடுகின்றனர். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றோரையும் அழைத்திருக்கிறோம். தட்சிணாமூர்த்திக்கு 108 தங்க புஷ்பங்களில் சொர்ணாபிஷேகம் நடத்தப்படும்" என்று தெரிவித்து உள்ளனர்.