Published:Updated:

சந்தனம் பூசி அன்பைப் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய - இந்து சகோதரர்கள்! - மத நல்லிணக்கப் பங்குனி உத்திரம்

சந்தனம் பூசி அன்பைப் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய - இந்து சகோதரர்கள்! - மத நல்லிணக்கப் பங்குனி உத்திரம்
சந்தனம் பூசி அன்பைப் பகிர்ந்துகொள்ளும் இஸ்லாமிய - இந்து சகோதரர்கள்! - மத நல்லிணக்கப் பங்குனி உத்திரம்

ராசிபுரத்தை அடுத்த குருசாமிபாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில்,  பங்குனி உத்திரத்தன்று, தேர்த் திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இந்து - முஸ்லிம் பெருமக்கள் இணைந்து கொண்டாடும் சந்தனம் பூசும் விழா நேற்று நடைபெற்றது. 

கடந்த 110 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த விழாவின் தொடக்கமாக, இந்து - முஸ்லிம் மக்கள் இணைந்து வெள்ளைக்கொடி ஏந்தி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். வீடுகள்தோறும், முகப்பு வாசலின் சுவர்களில் சந்தனம் தெளித்தும், கை அச்சுக்களைப் பதித்தும் வழிபாடு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, குருசாமிபாளையம் பாவடி மைதானத்தில், இந்து - முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து, ஒருவருக்கொருவர் சந்தனம் பூசிக்கொண்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். மேலும், பொதுமக்களின் ஆரோக்கியம் , தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்காகப்  பிரார்த்தனை நடத்தப்பட்டது. மேலும், குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நிறைவாக, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி, அங்குள்ள மரத்தில் வெள்ளைக்கொடி ஏற்றப்பட்டது.

இந்து - முஸ்லிம் பெருமக்கள் இணைந்து கொண்டாடிய இந்த விழாவில், ராசிபுரம் கிழக்குத்தெரு பள்ளிவாசல் முத்தவல்லி ஜனாப் டி.கே.உசேன், செயலாளர் ஷேக் ஹமீது, மத குரு சிக்கந்தர், குருசாமிபாளையம் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.