Published:Updated:

திருவள்ளூர் பெருமாள் கோயிலில் `சித்திரை பிரம்மோற்சவம்'

திருவள்ளூர் பெருமாள் கோயிலில் `சித்திரை பிரம்மோற்சவம்'
திருவள்ளூர் பெருமாள் கோயிலில் `சித்திரை பிரம்மோற்சவம்'

திருவள்ளூர், அருள்மிகு கனகவல்லித் தாயார் சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் விகாரி வருஷத்து சைத்ர பிரம்மோற்சவம், 11.4.19 அன்று தொடங்கி 20.4.19 வரை நடைபெறுகிறது.


ஒருகாலத்தில், சாலிஹோத்ரர் என்னும் முனிவர் தவம் செய்துவந்தார். தினமும் அதிதி ஒருவருக்கு உணவளித்துப் பின் உண்ணும் வழக்கம் உடையவரான அவர் ஆசிரமத்துக்கு, ஒருநாள் பெருமாள், வயோதிகர் ரூபங்கொண்டு வந்து உணவு உண்டார். சாலிஹோத்ரரின் பெருமையை ஊரறியச் செய்யத் திருவுளம் கொண்ட பெருமாள், பசி தீரவில்லை என்று சொல்லி முனிவரின் பங்கையும் கேட்டுப் பெற்று உண்டார். பசியாறிய பெருமாள், தான் எங்கே படுப்பது என்று கேட்டபோது, தன் இடத்தைக் காட்டினார் முனிவர். அங்கு சென்று இளைப்பாறிய பெருமாள், சயனக்கோலத்தில் பெருமாளாகக் காட்சிகொடுத்தார். `படுக்க எவ்வுள்?' என்று கேட்டதால் அந்த இடம் எவ்வள்ளூர் என்று பெயர் பெற்றது. தற்போது அவ்விடம் திருவள்ளூர் என்று வழங்கப்படுகிறது. 

இங்குள்ள, வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில், ஏப்ரல் 11-ம் தேதி காலை கொடியேற்றமும், இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை 13.4.19 அன்றும், திருத்தேர் 17.4.19 அன்றும், தீர்த்தவாரி, 19.4.19 அன்றும் நடைபெறுகிறது. 20.4.19 அன்று கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.