Published:Updated:

திருப்பதி கோதண்ட ராமர் கோயில் பிரம்மோற்சவம்!

திருப்பதி கோதண்ட ராமர் கோயில் பிரம்மோற்சவம்!
திருப்பதி கோதண்ட ராமர் கோயில் பிரம்மோற்சவம்!

திருமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் போன்றே திருச்சானூர், சீனிவாசமங்காபுரம் ஆகிய ஆலயங்களிலும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அப்படிப்பட்ட பிரம்மோற்சவ விழா, திருப்பதி கோதண்டராமர் கோயிலில் நேற்று தொடங்கியது.

திருப்பதி நகரில், நடுநாயகமாக கோதண்டராமர் கோயில் விளங்குகிறது. இந்தக் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. ராமாவதாரத்தில் ஶ்ரீராமன் அயோத்திக்கு திரும்பிச்செல்லும் வழியில், இங்கு தங்கியிருந்து சென்றார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்தக் கோயிலின் பிரம்மோற்சவம், நேற்று 3 - ம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, ஒரு வாரம் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் நான்கு மாட வீதிகளில் காலை மாலை இரண்டு வேளையும் சுவாமி வீதி உலா நடைபெறும்.


பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, ஏப்ரல் 7 -ம் தேதி நடைபெறும். ஏப்ரல் 9 -ம் தேதி, ரதோத்ஸவமும் ஏப்ரல்

11 -ம் தேதி  சக்கரஸ்நானமும், ஏப்ரல் -15 -ம் தேதி சீதாகல்யாண வைபவமும்  நடைபெற உள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவற்றுக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.