Published:Updated:

`முடியும் அக்னி நட்சத்திரம்' - தோஷங்கள் போக்கும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்!

சி.வெற்றிவேல்
`முடியும் அக்னி நட்சத்திரம்' - தோஷங்கள் போக்கும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்!
`முடியும் அக்னி நட்சத்திரம்' - தோஷங்கள் போக்கும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்!

மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளையோடு (29.05.2019) முடிவடைகிறது. இத்தனை நாள்களாகக் கொளுத்திய வெயில் இனி, படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம். புராணத்தில், அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாள், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனால், நாளை பெரும்பாலான கோயில்களில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

`முடியும் அக்னி நட்சத்திரம்' - தோஷங்கள் போக்கும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்!

யமுனை நதிக்கரையில் இருந்தது காண்டவ வனம். சுவேதசி என்ற மன்னனுக்காகத் துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானார் அக்னி பகவான். அதனால், அவரை மந்த நோய் தாக்கியது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் உள்ள காண்டவ வனத்தை எரித்த நாள்களே அக்னி நட்சத்திர நாள்களாகப் புராணத்தில் கூறப்பட்டுள்ளன. அக்னி பகவான் முதல் ஏழு நாள்கள் வனத்தில் உள்ள மூலிகைகளை எரித்தார். அடுத்த ஏழு நாள்கள் மரங்களை உணவாகக் கொண்டார். அடுத்த ஏழு நாள்கள் எஞ்சியவற்றை உண்டு விடைபெற்றுச் சென்றார். இதனால், இந்த அக்னி நட்சத்திர காலம் தோஷமானவை என்று கருதி, சுப காரியங்களைத் தவிர்த்துவிடுவார்கள். 

`முடியும் அக்னி நட்சத்திரம்' - தோஷங்கள் போக்கும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்!

இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைகிறது. முதல் ஏழு நாள்கள் வெயில் தெரியாது. அதன்பிறகு வெயில் படிப்படியாக அதிகரித்து 21-ம் நாள் உச்சத்தைத் தொடும். பிறகு, படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். அக்னி நட்சத்திர தோஷ காலம் முடியும் நாளிலும், அதன்பிறகும் எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இதை அக்னி கழிவு என்றும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இந்த நிவர்த்தி பூஜை மற்றும் மகா அபிஷேகத்தின்போது இறைவனை வணங்கினால் நம் தோஷங்களும் அனைத்தும் விலகும்; வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதிகம்.

`முடியும் அக்னி நட்சத்திரம்' - தோஷங்கள் போக்கும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்!

அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுவதையொட்டி, நாளை அக்னித் தலமான திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலசாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

Vikatan