Published:Updated:

நாளை, சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகளின் குருபூஜை!

சைலபதி
நாளை, சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகளின் குருபூஜை!
நாளை, சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகளின் குருபூஜை!

திருநாரையூரில் அருள்புரியும் ஶ்ரீபொல்லாப்பிள்ளையார், ஶ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஶ்ரீ சௌந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நாளை, நம்பியாண்டார் நம்பியவர்களின் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.

நாளை, சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகளின் குருபூஜை!

நம்பியாண்டார் நம்பி, ராஜராஜ சோழன் காலமான பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. சிறுவயதிலேயே வேதம் பயின்ற நம்பியாண்டார் நம்பி, ஒரு நாள் தன் தந்தைக்குப் பதிலாக பிள்ளையார் கோயிலுக்குப் பூஜை செய்யச் சென்றார். தோட்டத்தில் இருந்த மலர்களையெல்லாம் பறித்து மாலை கட்டி பிள்ளையாருக்குச் சூட்டி வழிபட்டார். பின்பு, தன் அன்னையர் வழங்கிய நிவேதனத்தை பிள்ளையார் நேரில் தோன்றி உண்டு அருள வேண்டும் என்று வேண்டினார். நிவேதனம் என்பதைத் தெய்வம் நேரடியாக வந்து உண்ணும் என்று நம்பிக்கொண்டிருந்தார். 

நாளை, சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகளின் குருபூஜை!

ஆனால், பிள்ளையார் தோன்றவில்லை. எவ்வளவு அழைத்தும் பிள்ளையார் தோன்றாமையால் மனம் நொந்த நம்பி, தன் தலையைச் சுவரில் மோதி இடித்துத் தன்னை அழித்துக்கொள்ளத் துணிந்தார். அப்போது பிள்ளையார் அவர் முன் தோன்றி அவரைச் சமாதானம் செய்து அவர் அளித்த உணவை உண்டு அருளினார். பிள்ளையாரின் அருளால் அவருக்கு ஞானம் உண்டாயிற்று.

அந்த இளம் வயதிலேயே விநாயகர் மீது `இரட்டை மணிமாலை' என்னும் பிரபந்தம் ஒன்றை இயற்றினார். அதனால் அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அழிந்துகொண்டிருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்து அளித்தவர் இவரே. இவரது குருபூஜை ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

நாளை, அவரது குருபூஜை,  திருநாரையூர் பொல்லாபிள்ளையார் ஆலயத்தில் நடைபெறுகிறது. பகல் 11.30 மணிக்கு பொல்லாப்பிள்ளையாருக்கு சிறப்பு ஆராதனைகளும், 12 மணிக்கு நம்பியாண்டார் நம்பிக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெறும். நிகழ்வினில் ஶ்ரீ மௌன சுந்தர மூர்த்தி சுவாமிகள், திருஞான சம்பந்தத் தம்பிரான்,  ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரி சுவாமிகள், ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக  ஞான சம்பந்த  பரமாசாரிய சுவாமிகள் ஆகிய ஆன்மிகப் பெரியவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பிக்க இருக்கிறார்கள்.

Vikatan