Published:Updated:

தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

சைலபதி
தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா?
தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

நாற்பது ஆண்டுகள் கழித்து காஞ்சிபுரம் அனந்தசரஸ் தீர்த்தத்திலிருந்து எழுந்தருளி அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கவிருக்கிறார். வாழ்வில் அபூர்வமாக வாய்க்கும் இந்தத் தருணத்தில் அத்திவரதரை தரிசித்து அருள் பெற அடியார்கள் ஆவலோடு காத்திருக்கும் வேளையில், அத்திவரதர் வைபவம் குறித்த ஏராளமான செய்திகள் தினந்தோறும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றின் நம்பகத் தன்மை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும் பல ஆயிரம்பேரால் அத்திவரதர் குறித்து இரண்டு வாட்ஸ்அப் தகவல்கள் பகிரப்பட்டன. 

தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

முதல்தகவல் `அத்திவரதரை தரிசிக்க ஜூலை 14, 15, 16 ஆகிய தினங்களில், பிரதமர், முதல்வர், துணைமுதல்வர் ஆகிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் வந்து செல்ல இருப்பதாகவும் அந்த நாள்களில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் வரவேண்டாம்' என்பதாகவும் ஒரு செய்தி பரவியது. இதுகுறித்து வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது `அது உண்மையல்ல' என்பது தெரியவந்தது. 'எந்தச் செய்தியாக இருந்தாலும் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதவரைப் பக்தர்கள் நம்பவேண்டாம்' என்றார்கள். 

தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

மற்றொரு தகவல் அத்திவரதரையும் தற்போது தமிழகத்தில் நிலவும் மழையின்மையையும் வறட்சியையும் பற்றியது. 
`நமது நாட்டில் இதுவரை நிலவிய தீவிர வறட்சி பற்றிய நிகழ்வுகளை ஆய்வு செய்தபோது சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் குளத்தில் இருக்கும் அத்திவரதர் திருமேனியை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை செய்வார்கள். அப்படி அத்திவரதர் வெளியில் வரும் ஆண்டுகளில் எல்லாம் தமிழகத்தில் வறட்சி நிலவியிருக்கிறது' என்கிறது அந்தச் செய்தி. `அத்திவரதர் மீண்டும் தண்ணீருக்குள் சென்றபின் 5 ஆண்டுகளில் நாடு செழிக்கும்' என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதற்கு முன்பு அத்திவரதர் திருமேனி 1979 -ம் ஆண்டு வெளியில் எடுத்து வழிபாடு செய்யப்பட்டது. அந்த ஆண்டு தமிழகத்தில் போதிய அளவுக்கு மழை பெய்யவில்லை. கடும் வறட்சி நிலவியது உண்மைதான். இந்த ஆண்டு ஜூலை 1ம்தேதி அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு வழிபாட்டுக்காக வெளியில் வைக்கப்படுகிறார். தற்போதும் தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 

தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

தமிழகத்தின் இந்த நிலைக்கும் அத்திவரதர் எழுந்தருள்வதற்கும் என்ன தொடர்பு? அத்திவரதர் வைபவத்திற்குப் பின் இருக்கும் வரலாறு என்ன என்பது குறித்து ஆராய்ந்தோம்.

தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

 அத்திவரதர் திருக்குளத்தில் மூழ்கியிருப்பது குறித்துப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒருகாலத்தில் வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் பாலாலயம் செய்யப்பட்டபோது அதற்காக மரத்தில் உருவாக்கப்பட்ட பாலாலயப் பெருமாளே அத்திவரதர் என்றும், ஸம்ப்ரோக்‌ஷணம் முடிந்தபின்பு அந்தப்பெருமாளை அனந்தசரஸ் தீர்த்தத்தில் எழுந்தருளப்பண்ணிவிட்டனர் என்றும் கருதப்படுகிறது.

புராணப்படி, பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட அத்திமரத்தினால் ஆன வரதர் திருமேனி பின்னமானதால், அதற்குமாற்றாக சிலாரூபத்திருமேனி செய்து பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். பிறகு, ஆதி அத்திவரதர் குளத்தில் எழுந்தருளப்பண்ணப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

1687 முதல் 1711 வரை தமிழகத்தில் நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பினால் தெய்வத்திருமேனிகள் சேதமடையாதபடிக்குக் காக்கத் திருக்குளத்தில் மறைத்து வைத்தனர் என்றும் பிற்காலத்தில் மழையில்லாத காலத்தில் குளம் வறண்டபோது, கண்டெடுக்கப்பட்டு மீண்டும் ஆராதனை செய்யப்பட்டது என்றும் சொல்கின்றனர்.

அத்திவரதர் வரும்காலத்தில் மழைப் பொழிவு குறையுமா? வறட்சி ஏற்படுமா? அதுகுறித்த தகவல்கள் ஏதேனும் புராணங்களில் உள்ளனவா என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரும் செயற்பாட்டாளருமான அனந்த பத்மநாபாச்சார்யாரிடம் கேட்டோம்.

``அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வது. இந்தத் தருணத்தில், வாட்ஸ் அப்களில் பரவும்

தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் அத்திவரதர் தரிசனத்துக்கும் தொடர்புண்டா -வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

செய்திகளில் பயன்தரும் தகவல்களை விடக் குழப்பம் விளைவிக்கும் இதுபோன்ற தகவல்தான் வேகமாகப் பரவுகின்றன. மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். தற்போது தமிழகத்தில் நிலவுவது தண்ணீர்த் தட்டுப்பாடு. இதை வறட்சி என்று சொல்லமுடியாது. வரும் மாதங்களில் மழைப் பொழிவு நிறையவே இருக்கலாம்; நம் பற்றாக்குறை நீங்கலாம். இதில் அத்திவரதர் எழுந்தருள்வதை இணைத்துச் சொல்வது சரியல்ல. 1979 - ல் வறட்சி ஏற்பட்டதும் தற்போது மழைப் பொழிவு குறைவாக இருப்பதும் வெறும் தற்செயல் நிகழ்வுகள். இவர்கள் சொல்வதைப் போல அத்திவரதர் எழுந்தருளிய 1939-ம் ஆண்டிலும் வறட்சி ஏற்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு இல்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 79க்குப் பிறகுகூடப் பல ஆண்டுகள் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே, அத்திவரதர் வைபவத்திற்கும் மழையின்மைக்கும் தொடர்பு இல்லை. அத்திவரதர் எழுந்தருளும்போதெல்லாம் மழை குறையும் என்று சொல்ல சாஸ்திரங்களில் எந்தச் சான்றுகளும் இல்லை.

நாற்பது ஆண்டுகளுக்குப் பின் நிகழும் இந்த வைபவத்தில் நாம் எழில்மிகு அத்திவரதரை தரிசனம் செய்ய இருக்கிறோம். அவர் அருள் தரிசனம் நமக்கு நிச்சயம் நல்லருளை வழங்கும். மழை பொழிந்து நா நிலமும் செழிக்க வரதனை வேண்டுவதைத் தவிர நாம் செய்ய வேண்டியது  ஒன்றுமில்லை" என்றார். 

இப்போது இருக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு அத்திவரதர் எழுந்தருள்வது காரணமல்ல; நம் அலட்சியமே காரணம். மழைபெய்தபோது அதை சேமித்துப் பத்திரப்படுத்தாமல்விட்டுவிட்டு இப்போது திண்டாடுகிறோம்.

Vikatan