Published:Updated:

சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனத் திருவிழா!

சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனத் திருவிழா!
சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனத் திருவிழா!

சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவடிவங்களுள் சிறப்பு வாய்ந்த மூர்த்தம், நடராஜர் திருமேனி. நடராஜருக்கு சிறப்பு மிக்க தலமாகக் கருதப்படுவது சிதம்பரம். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாகவும் போற்றப்படும் சிதம்பரத்தில்,  வருடத்துக்கு இரண்டு திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஒன்று ஆனித் திருமஞ்சனம் மற்றொன்று மார்கழி ஆருத்ரா தரிசனம். 

சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனத் திருவிழா!

உலகப் பிரசித்திபெற்ற இந்தத் திருக்கோயிலில், பத்து நாள்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா, வரும்  29 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

சித்திரைத்  திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி பூர்வபட்ச சதுர்த்தசி, புரட்டாசி பூர்வபட்ச சதுர்த்தசி, மார்கழி மாதத் திருவாதிரை, மாசி மாத,  பூர்வபட்ச சதுர்த்தசி ஆகிய ஆறு தினங்களே நடராஜ மூர்த்திக்கு அபிஷேகத்துக்கு உகந்த தினங்களாகக் கருதப்படுகிறது. அதில் சிறப்புவாய்ந்தது ஆனித் திருமஞ்சனம்.  

சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சனத் திருவிழா!

இந்த வருட ஆனித் திருமஞ்சனத் திருவிழா, 29 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 30 - ம் தேதி இரவு, வெள்ளி சந்திரப்பிரபை வாகனம். ஜூலை 1 - ம் தேதி நள்ளிரவு, சூரிய பிரபை வாகனம். ஜூலை 2 - ம் தேதி இரவு, பூத வாகனம். 3 - ம் தேதி இரவு, ரிஷப வாகனம். 4 - ம் தேதி இரவு, யானை வாகனம். 5 - ம் தேதி இரவு, கைலாச வாகனம். 6 - ம் தேதி தங்கத்தேர் ஆகியவற்றில் நடராஜப் பெருமான்  எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அருள்வார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர்  7 - ம் தேதியும் திருமஞ்சன அபிஷேகம் 8 - ம் தேதியும் நடைபெற உள்ளன. 8 -ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு, ஆனித் திருமஞ்சன மகாஅபிஷேகம் நடைபெற்று, அதன்பிறகு நடராஜப் பெருமான் சிவகாமசுந்தரி அம்பாளுடன் ராஜ தர்பாரில் பிற்பகல் மூன்று மணியளவில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

ஆனித் திருமஞ்சனத்தின்போது நடராஜருக்கு செய்யப்படும் மகா அபிஷேகத்தைக் கண்டால் அளவற்ற பலன்கள் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. 

Vikatan