Published:Updated:

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

Published:Updated:
துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

லகில் எப்போதெல்லாம் அதர்மம் பெருகி துன்பங்கள் வாட்டுகிறதோ அப்போதெல்லாம் திருமால் அவதரித்து, அதர்மத்தை அழித்து தேவர்களையும் மக்களையும் காப்பாற்றி தர்மம் தழைக்கச் செய்கிறார். அப்படி பகவான் எடுத்த அவதாரங்களே தசாவதாரங்கள் என்று போற்றப்படுகின்றன. பகவான் எடுத்த இரண்டாவது அவதாரம்தான் கூர்ம அவதாரம்.

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். பரமாத்மா தனது இரண்டாவது அவதாரத்துக்கு ஆமையைத் தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா? ஆபத்துக் காலத்தில் ஆமை தன் உடல் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு, எப்படித் தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறதோ அப்படியே நாமும் அடக்கத்துடன் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனும் உயரிய தத்துவத்தை நமக்கு விளக்குவதற்கே. இதையேதான் திருவள்ளுவர் ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து’ என்று கூறியிருக்கிறார். 

திருமால் நிகழ்த்திய மற்ற அவதாரங்கள் அனைத்தும் தீயவர்களை அழிப்பதற்காகவே எடுக்கப்பட்டவை. ஆனால், கூர்ம அவதாரத்தில் அவர் யாரையும் அழிக்கவில்லை. மாறாக தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கச் செய்தார். பாற்கடல் கடைந்தபோது நிகழ்ந்த இந்த அற்புதத்தில் அமிர்தம் மட்டுமல்லாமல் திருமகள், மருத்துவக் கடவுள் ஆகியோருடன் காமதேனுப் பசு, வலம்புரிச் சங்கு, கற்பகவிருட்சம், ஐராவத யானை போன்றவையும் தோன்றின.

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

இத்தகைய பெருமையுடைய கூர்ம அவதாரமானது ஆனி மாதம், தேய்பிறை, துவாதசி திதியில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அதன்படி இன்று (29.6.2019) ‘கூர்ம ஜயந்தி’ கொண்டாடப்படுகிறது. திருமால் கூர்மவதாரம் எடுத்த புண்ணிய தினத்தில் அதன் பெருமைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்...

சில நேரங்களில் அலட்சியத்தால், அறியாமல் செய்த சிறு செயல்கூட மிகப்பெரிய நிகழ்வுக்குக் காரணமாகிவிடுகிறது. அன்று, துர்வாச முனிவர் அளித்த தெய்விக மாலையை அலட்சியம் செய்தபோது இந்திரன் நினைத்திருக்க மாட்டான். இது மிகப்பெரிய அழிவுக்கும், அதன்பிறகு கூர்ம அவதாரத்துக்கும் காரணமாக இருக்கும் என்று.

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

ஒரு முறை வித்யாதரப் பெண் ஒருத்தி திருமாலையும் லட்சுமியையும் துதித்து வீணை மீட்டினாள். இதனால் மகிழ்ந்த லட்சுமி தன் கழுத்தில் இருந்த தெய்விக மாலையைப் பரிசாக வழங்கினாள். அந்த மாலையைத் துர்வாச முனிவருக்குக் காணிக்கையாக அளித்தாள், அப்பெண். அதைத் தன் சடாமுடியில் தரித்துக்கொண்டார் துர்வாசர். சில காலம் கழித்து துர்வாசர் இந்திரனைச் சந்தித்தபோது அவனுக்குப் பரிசாக அந்த மாலையை வழங்கினார். அதை அலட்சியமாகப் பெற்று யானையின் மத்தகத்தின் மீது வீசினான், இந்திரன். யானை அந்த மாலையைத் தன் காலில் போட்டு மிதித்தது. இதைக் கண்ட துர்வாசர் சினம் கொண்டு, “உன் செல்வம் அனைத்தும் அழியட்டும். நீயும் தேவர்களும் உங்கள் பலத்தை இழந்து துன்புறுவீர்கள்” என்று சாபமிட்டார். 

துர்வாசர் சாபத்தால் அல்லல்பட்ட தேவர்கள் அசுரர்களிடம் தோற்றார்கள். தம் சாபம் தீர வேண்டி தேவர்கள் திருமாலைச் சரணடைந்தார்கள். அப்போது திருமால், “பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்து அதை உண்டால் இழந்த பலத்தை மீண்டும் பெறலாம்” என்று யோசனை கூறினார். அதனால், தேவர்கள் அசுரர்களிடம் நட்புடன் பேசி அவர்கள் உதவியுடன் மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலை பாற்கடலில் சிக்கிக்கொண்டதால் அது அசையக்கூடவில்லை. மீண்டும் திருமாலிடம் முறையிட்டார்கள் தேவர்கள். அப்போது திருமால் ஆமையாகக் கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று மந்தார மலையைத் தன் முதுகில் தாங்கிக்கொண்டார். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். வலி தாங்க முடியாத வாசுகி ஆலகால நஞ்சைக் கக்கியது. அதனால் பிற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம் சிவபெருமான் அதை விழுங்கினார். அந்த நஞ்சு வயிற்றுக்குள் இறங்காமல் பார்வதி தேவி கழுத்தோடு நிற்கும்படி இறுக்கிப் பிடித்தாள். அதனால் நீலநிற கழுத்தைப் பெற்ற சிவபெருமான், ‘நீலகண்டன்’ என்று அழைக்கப்பட்டார்.

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

பாற்கடல் கடையக் கடைய முதலில் அதிலிருந்து காமதேனு என்ற பசு தோன்றியது. அதைத் தொடர்ந்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் எனும் ஏழுதலைக் குதிரை, நான்கு தந்தத்துடன் கூடிய ஐராவதம் எனும் யானை, பஞ்ச தருக்கள் எனப்படும் அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகிய தேவ மரங்கள் தோன்றின. இதற்குப் பிறகு மூத்த தேவி, அப்சரஸ் கன்னிகைகள், வருணி, சுராதேவி ஆகியோர் தோன்றினார்கள். அதற்குப் பிறகு ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி, சந்திரன், சிந்தாமணி  தோன்ற கடைசியாகத் தன்வந்திரி அமிர்தத்துடன் தோன்றினார். 

துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் கூர்மபகவான்... கூர்ம ஜயந்தி பகிர்வு

தாங்க முடியாத வலியைத் தாங்கிக்கொண்டு, இப்படிப் பல பொருள்கள் தோன்றக் காரணமாக இருந்த அவதாரம்தான் கூர்ம அவதாரம். காஞ்சிபுரத்திலுள்ள கச்சபேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், தூத்துக்குடி அகரம் தசாவதாரக் கோயில் ஆகியவற்றில் கூர்மவதார பெருமாளை வணங்கலாம். இந்தியாவில் கூர்ம அவதாரத்துக்கென்று இருக்கும் ஒரே ஆலயம் அருள்மிகு கூர்மநாதர் ஆலயமாகும். இது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஸ்ரீகாகுளம் அருகே இருக்கிறது. இங்கும் சென்று ஸ்ரீகூர்மநாதரை வழிபடலாம். சகலவிதமான சனி தோஷங்களையும் போக்கும் வல்லமை பெற்றவர் கூர்ம பகவான். அதனால், சனி தோஷத்தால் அல்லல்படுபவர்கள் இன்று இவரை வணங்கி வழிபடுவது சிறப்பானது. துன்பங்கள் அனைத்தையும் போக்கி நல்லருள் புரியும் வல்லமை கொண்டவர் கூர்ம மூர்த்தி. கூர்ம அவதாரத்தை வணங்கினால் ஞானம், சாந்தம், வீரம், செல்வம் என்று அனைத்தும் கிடைக்கும். அதனால், அவரது அவதார தினமான இன்று கூர்மவதார பெருமாளை வணங்கி வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெறுவோம்...