Published:Updated:

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்!

விகடன் விமர்சனக்குழு
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்!
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்!
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்!

சென்னை: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லி, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை முதலே சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

##~~##
தொழுகை முடிந்ததும் வயது வித்தியாசம் இன்றி ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கின்றனர். ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.