Published:Updated:

போகி பண்டிகை: பழைய பொருள் எரிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போகி பண்டிகை: பழைய பொருள் எரிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரம்!
போகி பண்டிகை: பழைய பொருள் எரிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரம்!

போகி பண்டிகை: பழைய பொருள் எரிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரம்!

போகி பண்டிகை: பழைய பொருள் எரிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரம்!

சென்னை: போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள், டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும், அதனால் ஏற்படும் மாசு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார வாகனங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய நாகரீக உலகில் சுற்றுச்சூழல் மாசு தொழிற்சாலைகளால் மட்டும் ஏற்படுவதில்லை. மக்கட்தொகை பெருக்கம், வாகனப்புகை, தொழிற்சாலைகளினால் வெளியேற்றப்படும் கழிவுநீர், திடக் கழிவுகள் எரிப்பது போன்றவற்றால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகின்றது. இவ்வகையான மாசு இயற்கையே சீர்செய்து கொள்ளும் அளவினை தாண்டி ஏற்படுவதால், பலவிதமான சுற்றுச்சூழல் பிரச்சனைகளை நாம் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் மக்களின் பழக்க வழக்கத்தினால் ஏற்படும் காற்று மாசும் ஒன்றாகும். போகி மற்றும் தீபாவளி பண்டிகையால் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறிப்பிடத்தக்கதாகும். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். சுமார் இருபது வருடம் வரை நமது வீடுகளில் சேகரம் ஆகும் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் ஏற்பட்ட காற்று மாசுபாடு இயற்கையால் ஜீரணிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் உதவியுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதனால் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. இதை மென்மேலும் தீவிரப்படுத்தி தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

##~~##
இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், போகி பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு சென்னை நகர மக்களிடையே பழைய பொருட்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்றவற்றை எடுத்து கூறிவருகின்றது. இதோடு போகி பண்டிகைக்கு முன் இரவு முழுவதும் பல குழுக்களாக பிரிந்து சென்னை நகரை வலம் வந்து வீடுகளுக்கு முன் பழைய பொருட்கள் எரிக்கப்படுவதை தடுத்து வந்துள்ளது. இந்த வருடமும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள், டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும், விழிப்புணர்வினை ஏற்படுத்துவது குறித்த துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் போகி பண்டிகையின் போது ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியரிடம் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை மாநகராட்கி மேயர் அறிவுறுத்தினார்." எனக் கூறப்பட்டுள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு