Published:Updated:

ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி திருவிழா!

விகடன் விமர்சனக்குழு
ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி திருவிழா!
ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி திருவிழா!

மதுரை: ஜெயலலிதா விடுதலைக்காக மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு காவடி திருவிழா நடத்தினார்.

ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி திருவிழா!

ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்பு, தமிழகத்தையே ஸ்தம்பிக்கும் வகையில் பல போராட்டங்கள், ஆலயங்களில் வழிபாடுகள், வேலை நிறுத்தங்கள் என்று அ.தி.மு.க.வினர் செய்து வந்தனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ன ஆனது என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தன. இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இனி போராட்டங்கள் நடத்த வேண்டாமென்று அறிவித்தார்.

ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி திருவிழா!

ஆனாலும், தங்களது செல்வாக்கை மக்களிடம் காட்ட வேண்டு என்பதற்காகவும், சிறையிலிருக்கும் ஜெயலலிதா, தங்களுடைய விசுவாசத்தை அறிய வேண்டும் என்பதற்காகவும் அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி திருவிழா!

இந்நிலையில், ஜெயலலிதாவுக்காக பால்குடம், வேல்குத்துத்தல், பறவை காவடி என்று நடத்தி மதுரையை ஸ்தம்பிக்க வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அதிகாலையில் சிம்மக்கல் வைகையாற்றில் ஆயிரக்கணாக்கான பெண்களை வாகனங்களில் அழைத்து வந்து இலவசமாக சில்வர் குடத்தில் ஒரு பாக்கெட் பால், தேங்காய், நுறு ரூபாய் சகிதம் கொடுத்து ஊர்வலத்தை நடத்தினார்.

ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி திருவிழா!

மேலும், மொட்டை போடுகிறவர்களுக்கு 500 ரூபாய், வேல் குத்துகிரவர்களுக்கு 2 ஆயிரம், பறவை காவடி எடுப்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் என்று பட்டுவாடா செய்து மதுரை சிம்மக்கல் அருகில் இருந்து வியாபார நிறுவனங்கள் அதிகமிருக்கும் மேலமாசி வீதி வரைக்கும் சாலைகளை அடைத்து அல்லோகல படுத்திவிட்டார்.

இதில் இன்னொரு கொடுமையாக, அதிகாலையிலிருந்து காத்திருந்த பல பெண்களுக்கு பால் குடங்கள் வழங்கப்படாததால் அமைச்சரை திட்டி தீர்த்து விட்டு சென்றனர். குடங்களை பெற்றுக்கொண்டு இன்னும் சிலரோ ஊர்வலத்தில் செல்லாமல் குறுக்கு வழியில் எஸ்கேப்பாகி சென்றனர்.

அமைச்சர் நடத்திய இந்த நிகழ்ச்சியால் திபாவளிக்கு பொருட்கள் வாங்க மதுரைக்கு வந்த தென்மாவட்ட மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள்.

செ.சல்மான்

படங்கள்:
பா.காளிமுத்து, ஈ.ஜெ. நந்தகுமார்