Published:Updated:

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

Vikatan Correspondent
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.

பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதலே செல்வார்கள்.

அதற்காக, ஜனவரி 11 ஆம் தேதி ரயிலில் பயணிக்க விரும்புவோருக்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஜனவரி 12 ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

இதேபோல், பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளிலும் ஏராளமானோர் ரயில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. இந்த தேதிகளில் பயணிப்பதற்கான முன்பதிவுகள் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தொடங்க உள்ளன.