Published:Updated:

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட்டுகள் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

அதற்காக, ஜனவரி 11 ஆம் தேதி இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 12 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஜனவரி 12 ஆம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஐந்தே நிமிடத்தில் ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

இதனால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பு  ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.