Published:Updated:

ஒச்சாயி அம்மன் திருவிழாவுக்கு தடை: உசிலம்பட்டியில் பதட்டம்!

ஒச்சாயி அம்மன் திருவிழாவுக்கு தடை: உசிலம்பட்டியில் பதட்டம்!
ஒச்சாயி அம்மன் திருவிழாவுக்கு தடை: உசிலம்பட்டியில் பதட்டம்!

ஒச்சாயி அம்மன் திருவிழாவுக்கு தடை: உசிலம்பட்டியில் பதட்டம்!

மதுரை:  56 வருடங்களுக்கு பிறகு நடக்கவிருந்த பாப்பாப்பட்டி ஒச்சாயி அம்மன் திருவிழாவுக்கு மாவட்ட நிர்வாகம் தடைபோட்டுள்ளதால், உசிலம்பட்டியில் பதட்டம் நிலவுகிறது.

உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பாப்பட்டியில் இருக்கும் ஒச்சாயி அம்மன் கோயில் முன்னோர் வழிபாட்டு கோயிலாகும். இந்த பகுதி பிரமலைக்கள்ளர் மக்களின் குலசாமியாகும். இந்த ஒச்சாயி அம்மன் வழியில் வந்த மக்கள், இங்கு மட்டுமில்லாமல் வெளியூர், வெளிநாடுகளிலும் வாழ்கிறார்கள். 56 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயிலில் முதல் மரியாதை யாருக்கு வழங்குவது என்ற கவுரவ பிரச்னையில் மூன்று தர்ப்பினருக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அதிலிருந்து யாருக்கும் முதல் மரியாதை இல்லை, கிடா வெட்டு இல்லை, சாமி பெட்டி தூக்கும் உரிமை இல்லை என்று உத்தரவு போடப்பட்டு, சாதரணமாக சாமி மட்டும் கும்பிட்டு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் இதை கண்காணித்து வந்தது.

ஒச்சாயி அம்மன் திருவிழாவுக்கு தடை: உசிலம்பட்டியில் பதட்டம்!

இந்தாண்டு ஒற்றுமையாக திருவிழாவை நடத்தி, கிடா வெட்டு நத்டப்போகிறோம் என்று இந்த சாமியை வணங்கும் ஐந்து லட்சம் மக்களின் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் கூறினார்கள். அதை நம்பி 56 வருடங்களுக்கு பின் இக்கோயிலின் திருவிழா மிக பிரமாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு குடும்பத்துக்கு ஐந்து கிடாக்கள் வீதம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கிடாக்கள் பலி கொடுக்கப்பட இருந்தன. மகிழ்ச்சியாக விழாவை கொண்டாட ஒச்சாயி அம்மனின் வழித்தோன்றல்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவண்ணம் இருந்தனர்.

ஆனால், திடீரென்று கடந்தவாரம், மூன்று வகையராவுக்குள் யாருக்கு முதல் மரியாதை என்பதில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, தற்போது திருவிழா மட்டுமல்ல, சாமி கும்பிடக்கூட மக்கள் யாரும் செல்ல கூடாதென்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் சாலை மறியல் போராட்டமெல்லாம் செய்து வருகின்றனர். இதனால், இந்த ஊர்களுக்கு பஸ் போக்குவரத்தையே மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

வருகிற 5, 6, 7ஆம் தேதிகளில் இத்திருவிழா நடப்பதற்கு நாள் குறிக்கப்பட்டு இருந்தது. அதனால், நாள் நெருங்க நெருங்க உசிலம்பட்டி வட்டாரத்தில் டென்ஷன் அதிகரித்து வருகிறது. மீண்டும் மூன்று தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

''இதில் அரசு தரப்பு செய்வதற்கு ஒன்றுமில்லை, தனிப்பட்ட சில நபர்கள், முதல் மரியாதை, இராண்டாவது மரியாதை என்று பிரச்னையை கிளப்புவதால்தான் திருவிழாவே நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அந்த மக்கள் உணர்ந்ததாக தெரியவில்லை'' என்கிறார்கள் இப்பகுதியை சேர்ந்த நடுநிலையாளர்கள்.

இந்த நிலையில், ஒரு தரப்பினர் இன்று வாகனங்களில் வந்து திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கின்றனர். இதற்கு என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

அடுத்து என்னென்ன நடக்குமோ என்று அச்சத்தில் உள்ளனர் மக்கள்.

செ.சல்மான்

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு