Published:Updated:

பத்தாயிரம் தலைப்புகள்... லட்சக்கணக்கில் புத்தகம்... சிலிர்க்க வைக்கும் புத்தக திருவிழா!

ஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட முதலாம் ஆண்டு புத்தக திருவிழா, அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த புத்தக திருவிழா ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

பத்தாயிரம் தலைப்புகள்... லட்சக்கணக்கில் புத்தகம்... சிலிர்க்க வைக்கும் புத்தக திருவிழா!

தஞ்சாவூர் புத்தக திருவிழா அரசு சார்பில் ஏற்பாடு செய்யபட்டு நேற்று (12ஆம் தேதி) தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது.

இதனை மாவட்ட ஆட்சியர் சுப்பையன் துவக்கி வைத்து பேசுகையில், "இன்று மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் வாசிப்பு திறன் குறைந்து கொண்டே வருகிறது. அவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் இந்த புத்தக திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளோம். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம்'' என்றார்.

பத்தாயிரம் தலைப்புகள்... லட்சக்கணக்கில் புத்தகம்... சிலிர்க்க வைக்கும் புத்தக திருவிழா!

புத்தக கண்காட்சி அமைப்பாளர் முருகனிடம் பேசினோம்.

''காலை தொடங்கும் இந்த புத்தக திருவிழா இரவு வரை நடைபெறுகிறது. வெறுமனே புத்தக திருவிழாவாக மட்டும் இல்லாமல், தினமும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும், சுகி.சிவம், எஸ்.ராமகிருஷ்ணன், பாரதி பாஸ்கர், ஞான சம்பந்தன் என அனைவரையும் கவரும் வகையில் ஸ்டார் பேச்சாளர்களின் பேச்சுகள் என கண்ணுக்கும், காதுக்கும் விருந்து படைக்கும் வகையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.

இதில் 102 அரங்குகள் அமைக்கபட்டு, லட்சக்கணக்கில் புத்தகம் வைக்கபட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய பதிப்பகங்களின் புத்தகங்களும், சரஸ்வதி மஹால், தமிழ் பல்கலைக்கழகம், சாகித்ய அகாடமி புத்தகங்களுக்கான ஸ்டால்களும் அமைக்கப்பட்டு விற்பனக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு 10 சதவிதமும், பள்ளி மாணவர்களுக்கு 20 சதவிதமும் தள்ளுபடி செய்யபடுகிறது.  சங்க இலக்கியம் தொடங்கி, சமையல் குறிப்பு வரை பத்தாயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளிலும், லட்சக்கணக்கில் புத்தகங்கள் வைக்கபட்டுள்ளது. பத்து ரூபாயில் தொடங்கி 5,000 வரையிலான விலையில் புத்தகங்கள் கிடைக்கிறது'' என்றார்.

பத்தாயிரம் தலைப்புகள்... லட்சக்கணக்கில் புத்தகம்... சிலிர்க்க வைக்கும் புத்தக திருவிழா!

புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவரிடம் பேசினோம்.

''இதில் பார்த்தும், படித்தும் தெரிந்து நிறைய கொண்டேன்.  இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, இந்த கண்காட்சி வெறும் பத்து நாட்கள் மட்டுமே நடை பெறுவது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வளவு குறுகிய நாட்களுக்குள் அனைவரும் பயன் பெற முடியாது'' என்றார்.

-கே.குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு