Published:Updated:

டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா!

டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா!
டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா!

டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர்: ஆடிப்பெருக்குவிழா மங்கலம் தரும் விழாவாக வெகுவிமர்சியாக டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா!

புதுவெள்ளமென பாய்ந்து வரும் காவிரியை பெண்ணாகவும், கடல் அரசணை ஆணகவும் கருதி காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பதினெட்டு அன்று காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு வந்து பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கின்றனர். சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.

வாழை இலையை விரித்து வைத்து விளக்கேற்றி, மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணிமாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜை செய்து மகிழ்ந்தனர்.

பின்னர், சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். புதிதாக கல்யாணம் ஆனவர்கள் விடிற்காலையில் காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து ஆற்றில் முழ்கி குளிப்பார்கள். குளித்தபிறகு புதிய ஆடைகளை அணிந்து கரையோரம் இருக்கும் காவல் தெய்வத்தை வணங்கி பூஜை செய்து வழிபட்டனர்.

திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கூடிவர காவிரியை வணங்கி ஒருவரை ஒருவர் மஞ்சள் கயிற்றை மாற்றி கட்டிக்கொள்வர். குடும்ப வாழ்க்கை செழித்து வளரவும், வாழ்க்கை வளமுடன் இருக்கவும் வேண்டி திருமண நாளில் சூடிய மாலையை பத்திரமாக பயன்படுத்தி வைத்து ஆடிப்பெருக்கன்று புதுகல்யாணமானவர்கள் கொண்டு வந்து காவிரி ஆற்றில் விடுவார்கள். பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றி புதுக்கயிற்றை அணிந்து கொள்வார்கள். இதற்கு மிகப்பெரிய வரலாறு உண்டு.

டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா!

பரமசிவன், பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்தபோது தேவர்களும், முனிவர்களும் அங்கே கூடிவிட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. இதனால் அகத்திய முனிவரை தென்திசைக்கு சென்று பூமியை சமநிலைப்படுத்துமாறு சிவபெருமான் கேட்டுக்கொண்டார். சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதிதேவி ஒற்றைக்காலில் நின்று தவம் மேற்கொண்டபோது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம் வழங்கினாள் அவள். அவரும் அந்த பெண்ணை தன்னுடைய இடத்தில் அடைத்து வைத்திருந்தார். அவர் தென்திசை நோக்கி வரும்போது விநாயகர் வடிவில் வந்த காகம் தண்ணீரை கவிழ்த்துவிட அந்த தண்ணீரே காவிரியானது.

ஆடிப்பெருக்கன்று காவிரியில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வரும் காவிரியை மக்கள் பார்வதிதேவியின் அம்சமாகவே கருதி வழிபட்டனர். பார்வதியை பயபக்தியுடன் வழிபட்டால் தங்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார் என்ற நம்பிக்கையும், ஐதீகமும் ஏற்பட்டது. அந்த ஐதீகத்தை தொடர்ந்துதான் இன்று கோலாகலமாக ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபட்டனர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்பது பழமொழி. ஆடி மாதத்தில் நீரானது எல்லா நதிகளிலும் பாய்ந்தோடி வரும். இதை நம்பித்தான் விவசாயிகள் விதை விதைப்பார்கள். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும். தமிழகத்தில் மழை இல்லாவிட்டாலும் கர்நாடகாவில் மழை பெய்யும். அது டெல்டா மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடும் என்பார்கள். நீண்ட நாளுக்குப்பிறகு விவசாயிகள் மத்தியில் புதுநம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

-ஏ.ராம்


படங்கள்:
கே.குணசீலன்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு