Published:Updated:

வெளிநாட்டினர், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய உற்சாக பொங்கல்!

Vikatan Correspondent
வெளிநாட்டினர், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய உற்சாக பொங்கல்!
வெளிநாட்டினர், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய உற்சாக பொங்கல்!

பெரம்பலூரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்துள்ள திருவாலந்துறை கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வெளிநாட்டினர், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய உற்சாக பொங்கல்!

பொங்கல் விழாவையொட்டி, காலை 5 மணிக்கு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள், பெண் சிசு கொலை, பெண் விடுதலை, கிராமங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட கருத்துக்களை முன் வைத்து கோலங்களை போட்டனர்.

வெளிநாட்டினர், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய உற்சாக பொங்கல்!

இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓலைக்குடிசையில் மகளிர் சுய உதவி குழுவினர் பொங்கல் வைத்து, கும்மியடித்து, 'பொங்கலோ பொங்கல்' என ஆர்ப்பரித்தனர். இதைத் தொடர்ந்து, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், கயிறு இழுத்தல், கபடி, வாலிபால், குண்டு எறிதல் போன்ற விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி, பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை அரசு கல்லூரி மற்றும் அகரம் செயின்ட் மேரிஸ் பள்ளி, திருவாலந்துறை ஆர்.சி. பள்ளி மாணவ, மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

வெளிநாட்டினர், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய உற்சாக பொங்கல்!

இந்த பொங்கல் விழாவை காண சுமார் 20 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்களுக்கு தாரை தப்பட்டை முழங்க, ஒயிலாட்டம், கரகம், குதிரை ஆட்டம் என கிராமிய கலைஞர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்து, சுமார் 1 கிலோ மீட்டர் நடந்தே அழைத்து வந்தனர்.

விழா நடைபெறும் இடத்திற்கு வந்த வெளிநாட்டினர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை ரசித்ததோடு, மாட்டு வண்டியிலும் ஏறி பயணம் செய்து சந்தோஷப்பட்டனர்.

வெளிநாட்டினர், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய உற்சாக பொங்கல்!

விழாவின் இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது, எஸ்.பி. சோனல் சந்திரா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டினர், அதிகாரிகள், பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய உற்சாக பொங்கல்!

மேலும், விழாவை காண பெரம்பலூர் மட்டுமல்லாமல், கடலூர் மாவட்டம் தொழுதூர், ஆலத்தூர், கீழக்கல்பூண்டி என பல ஊர்களில் இருந்தும், விழா நடைபெற்ற வெள்ளாற்றங்கரையில் உள்ள தோளீஸ்வரர் ஆலயம் முன்பு பொதுமக்கள் குவிந்தனர். மொத்தத்தில் இந்த நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட மக்களே கொண்டாடிய பொங்கல் விழா போன்று இருந்தது.

ர.ரஞ்சிதா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்