Published:Updated:

சர்க்கரை விநாயகர்! அகோர விநாயகர்! ஹேரம்ப விநாயகர்!

சர்க்கரை விநாயகர்! அகோர விநாயகர்! ஹேரம்ப விநாயகர்!

சர்க்கரை விநாயகர்! அகோர விநாயகர்! ஹேரம்ப விநாயகர்!

சர்க்கரை விநாயகர்! அகோர விநாயகர்! ஹேரம்ப விநாயகர்!

Published:Updated:

சர்க்கரை விநாயகர்!

ஆழித் தேரோடும் திருவாரூரின் கீழவீதியில் ராஜ அலங்காரத்துடன் காட்சி தரும் இந்தப் பிள்ளையாருக்கு மிகப் பொருத்தமான பெயர்தான். இவரை வேண்டிக் கொண்டால், சகல கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை சர்க்கரையாய் இனிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். மனுநீதிச் சோழன் இந்தப் பிள்ளையாரை வழிபட்ட பிறகே, தனது நகர்வலத்தைத் துவங்குவாராம். பிற்காலச் சோழர்களில் ராஜ ராஜ பெருவுடையாரும் இவரை வழிபட்டதாக கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. இப்படி ராஜாக்கள் வழிபட்ட- மிகப் பழைமையான இந்த பிள்ளையாருக்கு, ராஜ அலங்காரமும் பொருத்தம்தான். மாணவர்கள் கல்வியில் சிறக்க ஏலக்காய் மாலை சார்த்தியும், திருமணத் தடை அகல 108 தேங்காய் உடைத்தும், நெய் தீபம் ஏற்றியும், குழந்தை பாக்கியத்துக்கு தொட்டில் கட்டியும் இந்த ஆனைமுகத்தானை வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

- த.க.தமிழ்மதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்க்கரை விநாயகர்! அகோர விநாயகர்! ஹேரம்ப விநாயகர்!

அகோர விநாயகர்

திருநெல்வேலியில் ஸ்ரீநெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் கோயில் கொண்டிருக்கிறாள் பிட்டாபுரத்தம்மன். இவளின் திருக்கோயிலில் சந்நிதி கொண்டிருக்கிறார் இந்த அகோர விநாயகர். நான்கு கரங்களும் துதிக்கையும் இல்லாமல் காட்சி தருவதால், இப்படியொரு திருப்பெயர் வந்தது என்கிறார்கள். அந்நிய படையெடுப்பின்போது பின்னப்படுத்தப்பட்டதாம் இந்த விநாயகர் விக்கிரகம். பின்னம் அடைந்த விக்கிரகத்தை வழிபாட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதால், இவரை வழிபட்டு வந்த குடும்பத்தினர் விக்கிரகத்தை திருக்குளத்தில் சேர்ப்பித்தார்களாம். ஆனால் அவர்கள் கனவில் தோன்றிய விநாயகர் மீண்டும் தன்னை அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபடும்படி வலியுறுத்த, அந்தக் குடும்பத்தினரும் அப்படியே செய்தார்களாம். அத்துடன் நான்கு திருக்கரங்கள் மற்றும் துதிக்கையுடன் பூரணத் திருவுருவில் வெண்கலக் கவசமும் செய்து அணிவித்துள்ளார்கள். நினைத்தது நிறைவேறவும், பிணிகள் நீங்கவும் இந்தப் பிள்ளையாரை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள், இவர் சந்நிதியில் தரப்படும் விபூதிப் பிரசாதத்தை பிணி தீர்க்கும் அருமருந்தாகவே கருதுகிறார்கள்!

- ஆ.நல்லசிவன் படம்: தி. ஹரிஹரன்

ஹேரம்ப விநாயகர்!

விநாயகரின் திருவடிவங்களில் ஸ்ரீஹேரம்ப கணபதி வடிவமும் ஒன்று. 'ஹேரம்ப’ என்றால் சிங்கம் என்றும், எளியவர்க்கு அருள்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். பிரார்த்தனைகள் விரைவில் பலிதமாக சிம்மத்தின் மீது அமர்ந்த கணபதியை வழிபடவேண்டும் என்கின்றன ஞானநூல்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் திகழ்கிறார் இந்த விநாயகர்.

நான்கு திசைகளுக்கு ஒன்றாக நான்கு முகங்களும்; மேல் நோக்கிய ஒருமுகமுமாக ஐந்து திருமுகங்களுடன் திகழ்வதால் பஞ்சமுக விநாயகர் என்றும் இவரை வழிபடுகிறார்கள். கிழக்கு முகம்-  சூரிய அம்சம்; உடல் நலனுக்கும் விவசாய வளர்ச்சிக்கு வித்திடும். மேற்கு முகம்- விஷ்ணு அம்சம்; உயிர்களை காக்கும். வடக்கு முகம்- அம்பாளின் அம்சம்; ஜெயம் தரும். தெற்கு முகம்- பிரம்மனின் அம்சம்; திருமணம்,  குழந்தைப்பேறு மற்றும் வாக்குவன்மை அளிக்கும். மேல் நோக்கிய திருமுகம்- சிவ அம்சம்; சகல மேன்மைகளையும் தரும் என்கிறார்கள்.

சர்க்கரை விநாயகர்! அகோர விநாயகர்! ஹேரம்ப விநாயகர்!

இந்தப் பிள்ளையார் விக்கிரகத்துக்குக் கீழே காஞ்சி மகா பெரியவா அருளிய ஸ்ரீசக்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, கூடுதல் விசேஷம் ஆகும். நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், நாமக்கல்லில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் பரமத்திவேலூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பிள்ளையார்.

  - ​ஜி.கே.தினேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism