Published:Updated:

அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!
அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!

அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ம்பாளின் திருநாமங்கள் மட்டுமல்ல, அவளின் அருள் சுரக்கும் சில தலங்களின் பெயர்களும் மகிமைபெற்றனவாகத் திகழ்கின்றன. இதுகுறித்து சாட்சாத் பார்வதிதேவியே பர்வதராஜனிடம் விவரித்திருக்கிறாள்.

அம்பிகை சொன்ன அந்த இருப்பிடங்களில் சிலவற்றின் இன்றைய பெயர்கள் தெரியாவிட்டாலும்கூட, அந்த நாமங்களை அப்படியே படிப்பது நமக்கு நன்மை தரும். நவராத்திரி காலத்தில் அவற்றை உச்சரித்து அம்பாளை தியானிப்பதால் கூடுதல் பலன் உண்டு. சரி, அந்த இடங்கள் என்னென்ன தெரிந்துகொள்வோமா?

லட்சுமிதேவிக்கு வாசஸ்தானமாகவும் மகாஸ்தானமாகவும் இருக்கும் கோலாபுரம். ரேணுகாதேவியின் இருப்பிடமான மாத்ருபுரம். துர்கா தேவியின் உத்தமமான இருப்பிடங்களான துளஜாபுரம், சப்தஸ்ருங்கம், இங்குலை, ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிரமரி, ஸ்ரீரக்த தந்திரிகா. அன்னபூரணியின் இருப்பிடமாகவும் தனக்குமேல் உயர்ந்த ஒன்று இல்லாததுமான காஞ்சிபுரம். பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து பூஜை செய்த ஏகாம்பரம். யோகேஸ்வரியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேஜோஸ்தாபம், விந்தியாசலம். பீமாதேவி. விமலா தேவி. நீலாம்பிகை. திருவானைக்காவல். ஸ்ரீநகரம்.

நேபாளத்தில் குஹ்யகாளி. தகராகாசமாகிய சிதம்பரம். வேதாரண்யம். சீனத்தில் நீல சரஸ்வதி. வைத்திய நாதத்தில் வகலா. புவனேஸ்வரியின் இருப்பிடமாகிய மணித்வீபம். திரிபுரபைரவி ஸ்தானமாகிய காமாக்யம். காயத்ரியின் இடமாகிய புஷ்கரம். சண்டிகாதேவியின் இருப்பிடமான அமரேசம். புஷ்கரேக்ஷணி இடமாகிய பிரபாசம். லிங்கதாரணியின் நைமிசம். புஷ்கராக்ஷியின் புருஷுதை. ரதியின் ஆஷாடம். சண்டமுண்டிகளின் மைசூர். பரமேஸ்வரியின் தண்டினி. பராபூதி. பூதி. நகுலேஸ்வரியின் நகுலம். சந்திரிகாவின் அரிச்சந்திரம். சங்கரியின் பர்வதம். திரிசூலியின் திருவையாறு

அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!

குக்ஷுமாவின் ஆம்தாத்கேச்வரம். சங்கரியின் மகாகாளேச்வரம். சர்வாணியின் மத்திமம். மார்க்கதாயினியின் கேதாரம். பைரவியின் பைரவம். மங்களாவின் கயை. ஸ்தாணுப்ரியையின் குருக்ஷேத்திரம். ஸ்வாயம்பவியின் நகுலம். உக்ராதேவியின் கனகலம். விஸ்வேச்வரியின் விமலேஸ்வரம். மஹாநந்தாவின் மஹாந்தகை. பீமேஸ்வரியின் பீம க்ஷேத்திரம். சங்கரியின் பவானி. ருத்ராணியின் அர்த்தகோடி. விசாலாக்ஷியின் அவிமுக்தம் என்னும் காசி.

மஹாபாகாவின் மகாலயம். பத்ரகாளியின் கோகர்ணம். பத்ரியின் பத்ரகர்ணிகை. உத்பலாக்ஷியின் ஸ்வர்ணாக்ஷி. ஸ்தாண்வீயின் ஸ்தாணு. கமலாம்பிகையின் திருவாரூர் என்னும் கமலாலயம். பிரசண்டையின் சகலண்டகம். திரிசந்தியா தேவிகளின் குருண்டலை. மகுடேஸ்வரியின் மாகோடம். கணகியின் மண்ட லேசம். காளிகாவின் காலஞ்சரம். த்வனீஸ்வரியின் சங்குகர்ணம். ஸ்தூலகேஸ்வரியின் ஸ்தூலகேச்வரம். ஹ்ருல்லேகா மந்திரத்தின் இருப்பிடமான ஞானிகளின் இதயக் கலசம்.

இந்த இருப்பிடங்கள் குறித்து விவரித்ததுடன் ''இந்த நாமங்களை விடியற்காலையில் படித்தால், அந்தக் கணமே சகலவிதமான பாவங்களும் நசித்துப் போய்விடும். சிராத்த காலத்தில் இந்த நிர்மலமான நாமங்களைப் படித்தால் பித்ருக்களுக்கு முக்தி கிடைக்கும்!'' என்று அறிவுறுத்தியிருக்கிறாள் பார்வதிதேவி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு