Election bannerElection banner
Published:Updated:

தருமபுர ஆதீனத்தில் உலக அமைதிக்காக 108 அஸ்வ பூஜை, கோ பூஜை, ரிஷப பூஜை, பைரவ பூஜை!

தருமை ஆதினம்
தருமை ஆதினம்

ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் துர்கை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், நல்லெண்ணெய், பன்னீர் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள வனதுர்கா தேவி பரமேஸ்வரி கோயிலில் 108 குதிரைகளுக்கு அசுவ பூஜை, 18 பசுக்களுக்கு கோ பூஜை, 18 காளைகளுக்கு ரிஷப பூஜை, 18 நாய்களுக்கு பைரவர் பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன வளாகத்தில் வனதுர்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி உலக அமைதி வேண்டியும், மக்கள் நோய்நொடியின்றி நலமுடன் வாழ வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோ பூஜை
கோ பூஜை

தருமபுரம் ஆதீனம் வனதுர்கா தேவி பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் துர்கை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், நல்லெண்ணெய், பன்னீர் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம், 108 குதிரைகளுக்கு அசுவ பூஜை, 18 பசுக்களுக்கு கோ பூஜை, 18 காளைகளுக்கு ரிஷப பூஜை, 18 நாய்களுக்கு பைரவர் பூஜை ஆகியவற்றை செய்து தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு செய்தார்.

பைரவ பூஜை
பைரவ பூஜை

உலக அமைதி வேண்டியும், மக்கள் நோய்நொடியின்றி நலமுடன் வாழ வேண்டியும் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானம் கலந்து கொண்டு சிறப்பு பூஜையை தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கல்லூரி சார்பில் சி.ஏ. (ஆடிட்டிங்) அகாடமி பயிற்சி வகுப்பினைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், காரைக்கால் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், சிவகடாட்சம், ஆதீன கல்லூரி செயலாளர் செல்வநாயகம், முதல்வர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு