Published:Updated:

ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை - அருள்நிறை ஆடிமாத விழாக்கள், விசேஷங்கள்! #Video

சமயபுரம் மாரியம்மன்! #AadiSpecial
சமயபுரம் மாரியம்மன்! #AadiSpecial

இந்த மாதத்தில்தான் சங்கரன்கோவில் கோமதி அம்மனுக்கு உகந்த ஆடித்தபசு, ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைப் போற்றும் ஆடிப்பூரம், முன்னோர்கள் வழிபாட்டுக்கு உகந்த ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாள்கள் வருகின்றன.

ஆடி மாதம் அம்மன் மாதம் என்பர் பக்தர்கள். அந்த அளவுக்கு இந்த மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும். இந்த மாதத்தில்தான் சங்கரன்கோவில் கோமதி அம்மனுக்கு உகந்த ஆடித்தபசு, ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைப் போற்றும் ஆடிப்பூரம், முன்னோர்கள் வழிபாட்டுக்கு உகந்த ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாள்கள் வருகின்றன. பெருமை மிக்க ஆடிமாதத்தின் விழாக்கள் விசேஷங்களை இப்போது அறிந்துகொள்வோம்.
சங்கரநாராயணசாமி கோயில்  - ஆடித் தபசு
சங்கரநாராயணசாமி கோயில் - ஆடித் தபசு

ஏகாதசி - 20.7.21 - 4.8.21

தட்சிணாயினத்தின் முதல் ஏகாதசியாக வருவது 'தேவசயனி ஏகாதசி'. இந்த நாளில் மகாவிஷ்ணு அரிதுயில் பயிலத் தொடங்குவார் என்றும் நான்கு மாதங்களுக்குப் பின்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பார் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட தேவசயனி ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்தால் வாழ்வில் இக்கட்டான தருணங்களிலிருந்து தப்பிக்க உதவும் வலிமை உண்டாகும் என்கின்றன ஞான நூல்கள்.

4.8.21 அன்று வரும் ஏகாதசி 'காமிகா ஏகாதசி' என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் மனதின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

21.7.21 - பிரதோஷம்

சிவ வழிபாட்டில் மிக முக்கியமானது பிரதோஷ வழிபாடு. தினமுமே சிவனை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட இயலாதவர்கள் பிரதோஷ தினத்தன்று வழிபடுவது மிகவும் சிறப்பு. அதிலும் புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட்டைக் கடைப்பிடித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

தங்கம் வாங்க... சேர... நிலைக்க... 5 பரிகாரங்கள்! - அதிகாலை சுபவேளை!

23.7.21 - ஆடிப் பௌர்ணமி - ஆடித்தபசு

கோமதி அம்மன் இறைவன் ஒருவனே என்பதை உலகுக்கு உணர்த்தப் புன்னைவனக் காட்டில் தவமிருந்தாள். அதன் பலனாக சங்கரநாராயணராக இறைவன் காட்சிகொடுத்தருளினார். இந்த வைபவம் ஒவ்வோர் ஆண்டும் சங்கரன் கோவில் திருத்தலத்தில் நடைபெறும். அதில் அன்னை தவக்கோலத்தில் தேரேறிக்காட்சியருள்வாள். அற்புதமான இந்தக் காட்சியைக் காண பக்தர்கள் அன்று சங்கரன்கோவிலில் குவிவார்கள். மேலும் ஆடிப் பௌர்ணமி அன்று அம்பிகை வழிபாடு செய்தால் அற்புதமான பலனகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் அனைவரும் அம்பிகையை வழிபட்டு அருள் பெறலாம்.

27.7.21 - சங்கடஹர சதுர்த்தி

தேய்பிறை சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. இந்த நாளின் மாலையில் விநாயகரை வழிபட்டு சந்திர தரிசனம் செய்தால் சங்கடங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

2.8.21 - கார்த்திகை விரதம்

மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திர நாள் முருக வழிபாட்டுக்கு உகந்தது. இந்த நாளில் காலையில் எழுந்து நீராடி முருகனைத் துதித்து நாள் முழுவதும் விரதம் இருந்து வழிபட்டால் நம் பாவங்கள் தீர்வதோடு கேட்கும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

3.8.21 - ஆடிப்பெருக்கு

ஆடி 18 ம் நாளே ஆடிப்பெருக்கும். தொட்டதெல்லாம் பலமடங்கு பெருகும் புண்ணிய தினமான ஆடிப் பெருக்கு. இந்த நாளில் இறைவழிபாட்டோடு நீர் நிலைகளில் செய்யும் வழிபாடும் முக்கியமானது. இந்த நாளில் புது தம்பதியர் தம் வாழ்க்கை சுபமாக அமைய பாக்கு - வெற்றிலை, மஞ்சள் - குங்குமம், தாலிக்கயிறு, வளையல் ஆகியவற்றை சுமங்கலிப் பெண்களுக்குத் தானமாக வழங்கி நீரும் நிலமும் இணையும் நீர் நிலைகளில் பூஜை செய்யவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் காலம் முழுவதும் பூவோடும், பொட்டோடும், சுமங்கலியாக வாழும் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

6.8.21 - வெள்ளிக்கிழமை பிரதோஷம்

வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் விசேஷமானவை. அன்று சிவவழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் இந்த நாளில் மகாலட்சுமியின் அம்சமான வில்வம் கொண்டு சிவபூஜை செய்ய சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வயலூர் முருகன் கோயில் அற்புதங்கள்: வாழ்வளிக்கும் வள்ளலே, வயலூர் பெருமானே! | திருச்சி கோயில்கள் - 3

8.8.21 - ஆடி அமாவாசை

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த முக்கியமான அமாவாசை தினங்களில் ஒன்று ஆடி அமாவாசை. இந்த நாளில் நதி மற்றும் சமுத்திரக் கரைகளுக்குச் சென்று செய்யும் முன்னோர் வழிபாடு மிகவும் பயன் கொடுக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். பல அமாவாசைகளில் முன்னோர்வழிபாட்டைத் தவற விட்டவர்கள் இன்று செய்வதன் மூலம் அந்தக் குறையைப் போக்கிக் கொள்ளலம் என்பது நம்பிக்கை.

11.8.21 - ஆடிப்பூரம்

ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நட்சத்திரம் பூரம். அதுவும் ஆடிமாதத்தின் அன்னை அவதரித்ததால் இது திருவாடிப்பூரம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் அன்னை ஆண்டாள் சந்நிதி இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்வது விசேஷம். குறிப்பாக திருப்பாவை 30 பாடல்களையும் இந்த நாளில் பாடி வழிபட்டால் அனைத்து நன்மைகளும் சூழும் என்பது நம்பிக்கை.

நாக சதுர்த்தி
நாக சதுர்த்தி

12.8.21 - நாக சதுர்த்தி

சதுர்த்தி என்றாலே விநாயகருக்கு உகந்த நாள் என்று பொருள். ஆடிமாத வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாகவும் போற்றப்படுகிறது. இந்த நாளில் ஆலயங்களில் இருக்கும் நாகர் சந்நிதிக்குச் சென்று நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பு.

13.8.21 - கருட பஞ்சமி

ஆடி மாத வளர்பிறை பஞ்சமி கருட பஞ்சமி என்று போற்றப்படுகிறது. கருட பஞ்சமி விரதம் இருந்து வழிபாடு செய்தால் உடன் பிறந்தவர்கள் நலமோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

ஆடிமாதம் முழுவதுமே அம்மன் வழிபாடு சிறப்பு. எனவே இந்த மாதத்தில் அம்பிகையை வழிபட்டு அவளின் அருளைப் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு