Published:Updated:

தீராத துயர்கள் தீர்க்கும் சனி மகாபிரதோஷம்... வழிபட்டுப் பயன்பெறுவது எப்படி?

மகா பிரதோஷம்
மகா பிரதோஷம்

இந்த ஆண்டில் மொத்தம் 5 சனி மகாபிரதோஷங்கள் வருகின்றன. அதில் முதல் சனி மகாபிரதோஷம் இன்று. ஓர் ஆண்டில் 5 மகா பிரதோஷங்கள் வந்தால் அதை அட்சரப் பிரதோஷம் எனப்படும். அட்சரப் பிரதோஷத்தின் 5 தினங்களிலும் விரதமிருந்து சிவனை வழிபட எண்ணும் எண்ணம் ஈடேறும்.

பிரதோஷம் ஏன் விசேஷம்?

திதிகளின் எண்ணிக்கையில் 13 வது திதியாக வருவது திரயோதசி. பொதுவாக பெரும்பாலான சமூக நம்பிக்கைகளிலும் 13 என்பது ஓர் அச்சம்தரும் எண்ணாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அச்சம் தருவது எதுவாக இருந்தாலும் அஞ்சேல் என அபயம் தருவது ஈசன். எனவேதான் பிரதோஷ நாளில் சிவ வழிபாடு முக்கியமானது என்று வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எப்போதும் சிவனை நினைக்க வேண்டும். முடியாதவர்கள் இயன்றபோதாவது சிவனை நினைக்க வேண்டும். அதுவும் முடியாதவர்கள் துன்பம் வரும்போதேனும் சிவனை நினைக்க வேண்டும்.

தீராத துயர்கள் தீர்க்கும் சனி மகாபிரதோஷம்... வழிபட்டுப் பயன்பெறுவது எப்படி?

மனிதர்கள் தன்னிடம் உதவி நாடி வருபவர்களை, `தேவை ஏற்பட்டால் மட்டுமே நம்மிடம் வருகிறார்கள்’ என்று குறைபட்டுக் கொள்வார்கள். ஆனால், சிவனோ தன் பக்தர்கள் எப்போது நினைத்தாலும் அருளக் காத்திருப்பவர். இப்போதாவது நினைத்தானே என்று சொல்லி ஓடிவந்து அருள்வாராம். பாற்கடலில் தேவர்கள் அமிர்தம் கடைந்தபோது முதலில் விஷம் வந்தது. தேவர்கள் அலறி ஓடியதோடு, சம்போ மகாதேவா என்று சொல்லி அவரைச் சரணடைந்தனர். ஈசனும் உடனே ஆலகால விஷத்தை ஓர் உருண்டையாக உருட்டி விழுங்கி தேவர்களைக் காத்தார். விஷம் வெளியான வேளையும் ஈசன் தோன்றி அவர்களுக்கு அருள் செய்த வேளையும் பிரதோஷ வேளை. எனவே, பிரதோஷ வேளை வழிபாடு என்பது குறிப்பாகத் துன்பம் நீக்கும் வழிபாடே ஆகும். எல்லா நாள்களிலும் பிரதோஷ வேளையில் ஈசனை வணங்கத் துயர் நீங்கும். அதுவும் சனி மகாபிரதோஷத்தன்று சிவனை வணங்க அதன் பலன்கள் பல மடங்காக உயரும்.

அட்சரப் பிரதோஷத்தின் முதல் சனி மகாபிரதோஷம்

தினப் பிரதோஷ வழிபாடு நல்லது. திரயோதசி திதி பிரதோஷ நாளில் செய்யும் வழிபாடு துன்பங்கள் தீர்க்கக் கூடியது. அதுவே சனிக்கிழமை வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. பரமேஸ்வரனின் முதல் பிரதோஷ நடனம் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமையில். எனவே, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினம் மிகவும் சிறப்புடையது. சனி மகாபிரதோஷத்தன்று சிவனை வழிபாடு செய்தால் துயர்கள் நீங்குவது மட்டுமல்ல வேண்டும் செல்வங்கள் எல்லாம் கிடைக்கும். தேவர்கள் அமிர்தம் தேடிச் சென்றபோதுதான் முதலில் விஷம் வெளிப்பட்டது. அதன்பின் ஈஸ்வரனின் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவர்களுக்குக் கிடைத்தன. எனவே, சனி மகாபிரதோஷத்தன்று வழிபாடு செய்வதன் மூலம் வேண்டும் செல்வ வளங்களைப் பெறலாம்.

தீராத துயர்கள் தீர்க்கும் சனி மகாபிரதோஷம்... வழிபட்டுப் பயன்பெறுவது எப்படி?

இந்த ஆண்டில் மொத்தம் 5 சனி மகாபிரதோஷங்கள் வருகின்றன. அதில் முதல் சனி மகாபிரதோஷம் இன்று. ஓர் ஆண்டில் 5 மகாபிரதோஷங்கள் வந்தால் அதை அட்சரப் பிரதோஷம் எனப்படும். அட்சரப் பிரதோஷத்தின் 5 தினங்களிலும் விரதமிருந்து சிவனை வழிபட எண்ணும் எண்ணம் ஈடேறும்.

பிரதோஷ வழிபாட்டு முறைகள்

பிரதோஷ வழிபாட்டில் நான்கு முக்கியமான விஷயங்கள் குறிப்பிடத்தக்கன.

1. விரதம்

2. அபிஷேகம்

3. பிரதட்சிணம்

4. பாராயணம் ஆகியன.

பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பவர்கள், காலையிலேயே எழுந்து நீராடி சிவாலயம் சென்று சிவ வழிபாடு செய்ய வேண்டும். நாள் முழுவதும் உணவை முற்றிலும் தவிர்த்து சிவ சிந்தனையோடு இருக்க வேண்டும். மற்ற பிரதோஷ நாள்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் சனி மகாபிரதோஷ தினத்தில் விரதம் இருந்தால் வாழ்க்கை முழுவதும் பிரதோஷ விரதம் இருந்த பலன் கிடைக்கும். எனவே, குழந்தைகள் முதியவர்கள் தவிர்த்து மற்றவர்கள் விரதம் இருக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக கிரக நிலவரங்கள் சாதகமாக இல்லாமல் தீய பலன்களை எதிர்நோக்குபவர்களுக்கு சனி மகாபிரதோஷ விரதம் மிகவும் பயனுள்ளது.

தீராத துயர்கள் தீர்க்கும் சனி மகாபிரதோஷம்... வழிபட்டுப் பயன்பெறுவது எப்படி?

கொஞ்சம்போல அபிஷேக திரவியத்தை சமர்ப்பிக்கலாமா?  

சிவனுக்கு அபிஷேகப் பிரியர் என்று பெயர். அதனால்தான் சந்நிதியில் அவர் தலைக்குமேல் பல ஆலயங்களில் ஜலதாரை வைத்திருப்பதுண்டு. அவருக்குப் பலவிதமான அபிஷேகங்கள் செய்வதன்மூலம் பல்வேறு நற்பலன்களைப் பெறலாம். பிரதோஷ நாளில் நந்திக்கும் சிவனுக்கும் அபிஷேகங்கள் நடைபெறும். இந்த அபிஷேகத்தில் அபிஷேகப் பொருள்கள் வாங்கிக்கொடுத்து பக்தர்கள் பங்குபெறலாம். ஒரு சிலர் அபிஷேகத்துக்கு முழுமையாகச் செலவு செய்தால்தான் பலன் என்று எண்ணுகிறார்கள் அப்படியில்லை. `ஏகவில்வம் சிவார்ப்பணம்’ என்பதுதான் சிவவழி.

ஒரு வில்வ இலை, ஆனாலும் சிவனுக்கு என்று மனமார சமர்ப்பிக்க அது முழுப் பலனையும் வழங்கும். எனவே, அபிஷேக திரவியமான பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் என ஏதாவது ஒன்றை பக்தர்கள் தங்கள் சக்திக்கு ஏற்ற அளவு சமர்ப்பிக்க அபிஷேக பலன் அவர்களைச் சேரும். என்ன பொருள் வாங்கித் தருவது என்பது அவரவர் தேவையைப் பொறுத்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வரம் கிடைக்கும். அதைக் கண்டு தெளிந்து அதற்கேற்ப சமர்ப்பிப்பது சிறந்தது.

அபிஷேகப் பிரியன் சிவபெருமான். மகா பிரதோஷ நாளில் அற்புத பலன்கள் தரும் அபிஷேகங்களை அறிந்துகொள்வோம்... - சைலபதி

Posted by Sakthi Vikatan on Friday, March 6, 2020

அபிஷேகத்தில் பொருள் பங்குகொண்டால்தான் பலன் என்று இல்லை. தரிசித்தாலே போதும் சகல பலன்களும் கிடைக்கும். சிவனுக்கு அபிஷேகிக்கும்போது ருத்ர பாராயணம் செய்வர். ருத்ர பாராயணம் என்பது சிவனின் கல்யாண குணங்களைப் பாடிப் போற்றுவது. அதன்பின் பாடப்படும் சமகம், இவ்வுலக வாழ்வுக்கான அனைத்தையும் இறைவனிடம் வேண்டுவது. இவற்றை பிரதோஷ வேளையில் சேர்ந்து பாராயணம் செய்தாலோ கேட்டாலோ சகலவிதமான செல்வங்களும் வந்து சேரும்.

பிரதோஷத்துக்கென்று பிரத்யேக பிரதட்சிணம்

பிரதோஷத்தன்று மட்டும் சோமசூக்தப் பிரதட்சிணம் செய்ய வேண்டும். சோமசூக்த பிரதட்சிணத்தில் முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பின் அதன் கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு வழக்கத்துக்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் கோமுகியைத் தாண்டக் கூடாது!

நந்தி
நந்தி

இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், கோமுகியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே `சோமசூக்தப் பிரதட்சிணம்’.

ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட - வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் `சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

சிவபெருமானை பிரதோஷ காலத்தில் சோமசூக்தப் பிரதட்சிணம் செய்து வழிபடத் துன்பங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதிகம்.

பிரதோஷ காலத்தில் சிவபுராணம் படிக்கலாமா?

ருத்ர ஜபத்தையே மாணிக்க வாசகர் சிவபுராணம் என்று தமிழில் நமக்காகத் தந்திருக்கிறார். பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிக்க நம் வினைகள் எல்லாம் தீர்ந்து நல்லருள் கிடைக்கும். எளிய தமிழில் இருக்கும் சிவபுராணத்தைப் பாராயணம் செய்தால் வேதம் முழுமையையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். ஆலயம் சென்று வழிபட முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே சிவபுராணம் படிப்பது நல்லது. அதன்மூலம் சிவாலய வழிபாட்டில் கலந்துகொண்ட புண்ணியம் கிடைக்கும்.

தீராத துயர்கள் தீர்க்கும் சனி மகாபிரதோஷம்... வழிபட்டுப் பயன்பெறுவது எப்படி?

அரிதிலும் அறிதான மகாபிரதோஷம் இந்த ஆண்டு 5 முறை வாய்க்கிறது. ஆலகால விஷம்போல இன்று உலகம் முழுவதும் நோய்கள் பரவி மனிதர்களை மிரட்டுகிறது. இந்தச் சூழலில் நம்மையும் நம் குடும்பத்தையும் சிவபெருமான் காத்து ரட்சிக்க வேண்டி பிரதோஷ வழிபாடு செய்து பலன் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு