Published:Updated:

தேனி: 5 அடி முதல் 20 அடி நீள அலகுகள்... கே.கே.பட்டியில் பரவசத் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்!

திருவிழா

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில்தான் இந்த விழா இப்படிக் களைகட்டுகிறது. இங்கு கருமாரியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். எனவே இந்தக் கோயிலுக்குத் தென் திருவேற்காடு என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

தேனி: 5 அடி முதல் 20 அடி நீள அலகுகள்... கே.கே.பட்டியில் பரவசத் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில்தான் இந்த விழா இப்படிக் களைகட்டுகிறது. இங்கு கருமாரியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். எனவே இந்தக் கோயிலுக்குத் தென் திருவேற்காடு என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

Published:Updated:
திருவிழா
இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் பக்தியை வெளிப்படுத்த பக்தர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனம்தான் நம் ஊர் திருவிழாக்கள். ஓர் ஆண்டு முழுவதும் நம்மைக் காத்தருளும் இறைவனுக்கு விரதமிருந்து, காவடி எடுத்து, அலகு குத்தித் தம்மை பரிபூரணமாக சமர்ப்பித்துக்கொள்ளும் பக்தி மரபு நம்முடையது. அப்படிக் காண்போர் சிலிரிக்கும் வண்ணம் நடைபெற்ற ஒரு திருவிழாதான் கே.கே.பட்டி கருமாரி அம்மன் கோயில் திருவிழா.

குலவை இடும் பெண்களின் சத்தம் விழா முழுவதும் எதிரொலிக்க மேளதாளம் முழங்க மனம் முழுக்க கருமாரியை நினைத்துக் கொண்டு பக்தர்கள் அலகு குத்திக்கொள்கிறார்கள். அதுவும் 5 அடி முதல் 20 அடி வரையில் நீளம் கொண்ட வேல்கள். பக்திப் பரவசத்தோடு அவர்கள் அலகு குத்திக்கொள்ளும் காட்சி காண்போரை சிலிரிக்க வைக்கிறது.

கே.கே. பட்டி கருமாரியம்மன்
கே.கே. பட்டி கருமாரியம்மன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில்தான் இந்த விழா இப்படிக் களைகட்டுகிறது. இங்கு கருமாரியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். எனவே இந்தக் கோயிலுக்குத் தென் திருவேற்காடு என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கருமாரிக்குதான் பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

இந்தக் கிராமம் முல்லைப் பெரியாற்றின் கரையில் உள்ளது. அம்மனுக்கு அலகு குத்திக்கொள்ளும் பக்தர்கள் தூய்மையாக ஆற்றில் நீராடிவந்து அலகு குத்திக்கொள்கிறார்கள். இவர்களுக்குப் பக்குவமாய்க் குத்திவிடுகிறார் கோயில் அர்ச்சகர் வெங்கடேசன் ராஜா. இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என்ற எந்த வித்தியாசமும் இன்றி சுமார் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முல்லைப் பெரியாற்றின் கரையில் இருந்து அலகு குத்திக் கொண்ட பக்தர்கள் ஊர்வலமாகக் கிளம்ப அவர்களோடு பால் குடங்களை சுமந்து கொண்டு ஏராளமான பக்தர்களும் வருகிறார்கள். அன்னைக்கு உகந்த மஞ்சள் நிறமே இங்கு அநேகரின் ஆடையாகவும் மாறியிருக்கிறது. மஞ்சள் உடை உடுத்தித் தலையில் பால் குடங்களை சுமந்து வருகிறார்கள் பக்தர்கள்.

பால்குடம் எடுத்தல்
பால்குடம் எடுத்தல்

கிராமத்திற்குள் கருமாரிபுரத்தில் உள்ள கோயில் முன்பாகப் பூக்குழி அமைக்கப் பட்டுள்ளது. அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் வந்த அனைத்து பக்தர்கள் இங்கு பூக்குழி இறங்குகிறார்கள். குழந்தைகளைச் சுமந்தபடி நம்பிக்கையோடு நெருப்பில் நடந்த பக்தர்களைக் காணும்போது சிலிர்ப்பு உண்டாகிறது. வெம்மையைத் தாங்கித் தண்மையை அருளும் தாயல்லவா அவள்... பக்தர்கள் எந்த சேதமும் இல்லாமல் குத்திய வேலோடும், தலையில் பால் குடங்களோடும் பூக்குழியை எளிதாக கடந்து கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்குள்ள அம்மனிடம் வேண்டிக்கொண்டால் கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கருமாரியின் திருச்சந்நிதியில் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுகிறாளாம் அன்னை. சாந்நித்தியம் மிகுந்தவளாக இருக்கிறாள் இந்த அம்பிகை. எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், பங்குனியில் இவளுக்குத் திருவிழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். இந்தச் சூழலில் காணப்படும் ஆரவாரமும் கொண்டாடமுமே அவள் மகிமைக்குச் சான்று.

அலகு குத்தும் பக்தர்
அலகு குத்தும் பக்தர்
தங்கள் வீட்டுப் பிள்ளைக்கு நல்ல இடத்தில் வரன் அமைய... திருமணம் ஆனோருக்கு நல்ல குழந்தைகள் பிறக்க... கடன் உள்ளிட்ட பிரச்னைகள் தீர, சொந்தமாய் வீடு கட்ட, விவசாயம் செழிக்க... என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரார்த்தனைகளுடன் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

இத்தனை சக்தி வாய்ந்த அம்மனை வாய்ப்பிருப்பவர்கள் ஒரு முறை சென்று வழிபடுங்கள். அன்னையின் அருட்பார்வை உங்களைக் காலமெல்லாம் காத்து நிற்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism