Published:Updated:

சகல தோஷங்களையும் நீக்கும் மகாலட்சுமி நரசிம்மர் வழிபாடு... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

நரசிம்மனை வேண்டி வழிபட்டால் மரண பயம் நீங்கும். இக்கட்டான சூழலில் அழைத்த கணத்திலேயே ஆபத்பாந்தவனாகத் தோன்றி அருளும் நரசிம்மனை வணங்கி அருள்பெறுவோம். பக்தர்களின் வேண்டுதலுக்குக் குழையும் தீனதயாளன் நரசிம்மன்.

‘எங்கும் எதிலும் நிறைந்திருப்பேன்; எப்போதும் எவருக்கும் அருள் புரிவேன்!’ என்பதை ஆணித்தரமாகத் தன் பக்தர்களுக்கு உணர்த்திய திரு அவதாரமே நரசிம்ம அவதாரம். வேறெந்த திருமால் அவதாரத்திலும் காணப்படாத அதிசயம் என்னவென்றால் நரசிம்மரே தீயவருக்கு உக்கிர மூர்த்தியாகவும், தன்னை அண்டிய பக்தர்களுக்கு அழகிய சிங்கராகவும் ஒரே நேரத்தில் காட்சியளிப்பதுதான்.

நரசிம்மர்
நரசிம்மர்

தூணிலும் இருப்பவன்; அணுவின் கோணிலும் (அணுவின் நூறில் ஒரு பங்கு) இருப்பவன் நரசிம்மர். அதனால் அவரை எங்கும் எப்போதும் மனத்தில் வைத்து வேண்டினால் போதும். நம் மனக்கவலைகளைத் தீர்த்துவிடுவார் என்கின்றன ஆன்மிக நூல்கள். நரசிம்மரைத் தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எந்த பயமும் திருஷ்டி தோஷமும் ஏற்படாது. குடும்ப ஒற்றுமை மேம்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாவர் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். நரசிம்மன் என்றால் `ஒளிப்பிழம்பு’ என்கின்றனர். மன இருளால் தெளிவின்றி, குழப்பத்தோடு இருப்பவர்களுக்கு ஒளியாக வெளிப்பட்டு அருள் செய்வான் நரசிம்மன்.

நரசிம்மனை வேண்டி வழிபட்டால் மரண பயம் நீங்கும். இக்கட்டான சூழலில் அழைத்த கணத்திலேயே ஆபத்பாந்தவனாகத் தோன்றி அருளும் நரசிம்மனை வணங்கி அருள்பெறுவோம். பக்தர்களின் வேண்டுதலுக்குக் குழையும் தீனதயாளன் நரசிம்மன். ஆண்டாண்டு காலமாய் தவமியற்றிய முனிவருக்கு ஆட்படாத பெருமான், ஒரு வேடனின் வெள்ளந்தியான பக்திக்குச் சிக்குண்டு அவன் பின்னே வந்த கதையெல்லாம் நாம் அறிந்தது தானே...

`அடித்தகைப் பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது `பக்தர்கள் உரிமையோடு பிரியமாக அடித்துக் கேட்டாலும் உடனடியாக உதவுபவன்’ என்று அர்த்தமாம். குழந்தைகளுக்கு இஷ்டமான இந்த பெருமானை அவர்கள் வேண்டி வணங்கினால், கல்வியும் ஆயுளும் வழங்கக் கூடியவன். பொருளை, செல்வத்தை, பதவியை, கெளரவத்தை வேண்டியவர்க்கு வேண்டியதைவிட அதிகமாக அருளும் இந்த வசீகரப் பெருமாள் எல்லோராலும் வழிபட வேண்டியவர்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

பிரகலாதன் காட்டிய தூணை இரண்யகசிபு உடைக்க, தூணில் இருந்து வெளிப்பட்ட ஸ்ரீநரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்தார். ஸ்ரீநரசிம்மரின் அவதாரக் காலம் வெறும் இரண்டு நாழிகையே என்கிறது புராணம். ஆனால், இந்திய தேசமெங்கும் தேவர்களின் வேண்டுகோளுக்காக நரசிம்ம மூர்த்தி பிரதட்சயமாகத் தோன்றி அருளிய திருத்தலங்கள் அநேகம். அவற்றில் சிறப்பானது, திருநெல்வேலி மாவட்டம் - ஆலங்குளம் தாலுகா, கீழப்பாவூர் கிராமத்தில் நரசிம்மர் திருக்கோயில். அகோபிலத்தில் தோன்றிய நரசிம்மரை தென்னகத்தில் முதன்முதலாக பிரம்மன், காஸ்யப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் போன்றோர் தரிசித்த தலமிது. இத்தலத்தைத் தென் அகோபிலம் என்று போற்றுவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதிகை மலைச்சாரலில் சித்ரா நதிக்கரையில் தவமியற்றிய பிரம்மன், காச்யப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோருக்கு பகவான் ஶ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத நரசிம்மராக 16 திருக்கரங்களுடன் காட்சி தந்தார். பிறகு, அங்கேயே நிரந்தரமாக எழுந்தருளி, காலம்தோறும் வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிந்தும் வருகிறார். 

உக்கிரமே வடிவாகக் கொண்ட நரசிம்ம மூர்த்தியை எவ்வாறு வழிபடுவது; அதற்கான நியம நிஷ்டைகள் என்னவென்று பல கேள்விகள் வாசகர்களால் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. பல நூறு பெரியோர்கள் விளக்கமாகச் சொல்லியும் நரசிம்மரை வீட்டில் வழிபட இன்னும் சிலர் தயங்குகிறார்கள். இது தவறு. அன்போடும் கனிவோடும் யார் துதித்தாலும் ஓடோடி வந்து அருள் புரிபவர் நரசிம்மர். ஞான நூல்கள் பலவும் நாளை என்பதில்லை நரசிம்மரிடம் எனப் போற்றுகின்றன. அதாவது, பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்களை அன்றே அப்போதே நிறைவேற்றி அருளும் கருணை மூர்த்தி நரசிம்மர் என்று பொருள். ஆகவே, நாமும் அனுதினமும் வழிபடுவோம் நரசிம்மரை; அளப்பரிய வரம் பெறுவோம்.

ஸ்ரீஆனந்தாச்சார்யார்
ஸ்ரீஆனந்தாச்சார்யார்

அன்பார்ந்த வாசகர்களே!

இணைய வீடியோ வடிவில் சக்தி விகடன் வழங்கி வரும் ஆன்மிக மாலையின் அடுத்த சங்கமம், வரும் 24.7.20 வெள்ளியன்று மாலை 6 மணியளவில் நிகழவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆடி மாதத்தை முன்னிட்டு, `எங்கெங்கு காணினும் சக்தி' எனும் தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளரும் எழுத்தாளருமான பாரதி பாஸ்கர் சிறப்புரை ஆற்றவுள்ளார். தொடர்ந்து, நட்சத்திர சங்கல்பத்துடன் கூடிய சிறப்பு மகா லட்சுமி நரசிம்ம வழிபாடும் நடைபெறவுள்ளது.

தென்னக அகோபிலமாம் கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீசாம்ராஜ்ஜிய லட்சுமி நரசிம்ம பீடம் சார்பில், ஸ்ரீநரசிம்ம உபாசகரான ஸ்ரீஆனந்தாச்சார்யார், நட்சத்திரச் சங்கல்ப பிரார்த்தனையுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்ம வழிபாட்டினை நிகழ்த்தவுள்ளார்.

ஆன்மிக மாலை
ஆன்மிக மாலை

சகல தோஷங்களையும் வறுமையையும் போக்கி, வீட்டில் செல்வ கடாட்சத்தையும் சகல சுபிட்சத்தையும் பெருகச் செய்யும் இந்த அற்புத வழிபாட்டில் நீங்களும் (இணைய வீடியோ - Zoom Meet) மூலம் கலந்துகொண்டு, வீட்டிலிருந்தபடியே ஶ்ரீநரசிம்மரை வழிபட்டு வரம்பெறலாம்.

இந்தச் சங்கல்ப வழிபாட்டு வைபவத்தில் உங்கள் பெயர்- நட்சத்திரத்தைச் சங்கல்பிக்கவும், கீழ்க்காணும் லிங்கை க்ளிக் செய்து முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு