Published:Updated:

திருமண வரம் அருளும் கூடாரவல்லி... கடைப்பிடித்துப் பலன்பெறுவது எப்படி?

கூடாரவல்லி

ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் ‘பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்’ என்று பாடுகிறாள். சாதாரண மனிதர்களைப் புகழ்ந்தாலே ஏதோ சன்மானம் கிடைத்துவிடுகிறது. அப்படியிருக்க இறைவனைப் பாடினால் உயர்ந்த சன்மானங்கள் கிடைக்காமல் இருக்குமா...

திருமண வரம் அருளும் கூடாரவல்லி... கடைப்பிடித்துப் பலன்பெறுவது எப்படி?

ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் ‘பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்’ என்று பாடுகிறாள். சாதாரண மனிதர்களைப் புகழ்ந்தாலே ஏதோ சன்மானம் கிடைத்துவிடுகிறது. அப்படியிருக்க இறைவனைப் பாடினால் உயர்ந்த சன்மானங்கள் கிடைக்காமல் இருக்குமா...

Published:Updated:
கூடாரவல்லி

மார்கழி மாதம் முழுவதுமே ஸ்ரீவில்லிப்புத்தூர் திருக்கோயில் விழாக்கோலம் பூணும். அதிலும் மார்கழி 27 ம் நாள் பக்தர்கள் ஆண்டாள் தரிசனம் செய்யத் திரளாகக் கூடுவார்கள். காரணம் அந்த நாள் ஆண்டாள் தன் விரதம் பூர்த்தி செய்யும் நாள். இதைக் கூடாரவல்லி என்று சிறப்பித்துப் போற்றுவர். நாச்சியார் தன் திருப்பாவையின் இரண்டாம் பாசுரத்தில் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதைக் குறிப்பிடுகிறாள். அந்த விரதம் கண்ணனின் தரிசனம் வேண்டித் தொடங்கப்பட்டது. அந்த தரிசனம் கிடைத்தபின்பு ஆண்டாள் தன் விரதத்தைப் பூர்த்தி செய்கிறாள். இதையே அவள் தன் திருப்பாவை 27 ல் பாடிப்புகழ்கிறாள்.

பெருமாள் - ஆண்டாள்
பெருமாள் - ஆண்டாள்

திருப்பாவை - 27

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருத்து : ``பகைவர்களை வெல்லும் கோவிந்தா, உன்னைப் பறைகொண்டு பாடியதால் நாங்கள் பெறப்போகும் சன்மானங்கள் அளவற்றவை. இந்த நாடு அந்தப் பரிசில்களைக் கண்டு புகழும். இதுநாள்வரை நாங்கள் நோன்பில் இருந்தோம். அதனால் மையிட்டு எழுதாது மலரிட்டு முடியாது நெய்யுண்ணாது பாலுண்ணாது விரத முறைகளை அனுஷ்டித்து வாழ்ந்தோம். இன்றோ உன் தரிசனத்தால் எங்களுக்கு விரதம் பூர்த்தியானது. எனவே நாங்கள் எங்களை அழகு படுத்திக்கொள்ளப் போகிறோம். நாங்கள் அணிந்துகொள்ள கை அணியான சூடகமும், தோடும், செவியில் அணியும் பூப்போன்ற அணிகலனும் பாதத்தில் அணிந்துகொள்ளும் கொலுசு போன்ற பல்வேறு அணிகலன்களையும் அணிந்துகொள்வோம். புதிய ஆடை உடுத்திக்கொள்வோம். அதன்பின் இதுநாள்வரை பாலும் நெய்யும் தவிர்த்து உணவு உண்டுவந்தோம். இன்றோ நாங்கள் உன் தரிசனம் கண்ட மகிழ்வில் மகிழ்ந்து உனக்குப் பால்சோறை நிவேதனம் செய்து அதில் அதிகமாய் நெய் ஊற்றி, அவ்வாறு ஊற்றிய நெய் எங்கள் முழங்கைகளில் வழிந்து ஓடுமாறு ஆக மன மகிழ்ச்சியோடு இந்த நோன்பை நாங்கள் கொண்டாடுவோம். நீயும் எங்களுடன் இருந்து மகிழ்ச்சி பெருக குளிர்ந்து எமக்கு அருள்வாய்" என்றாள் ஆண்டாள்.

கண்ணனையே சம்மானமாகப் பெற்ற ஆண்டாள்

ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் ‘பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்’ என்று பாடுகிறாள். இறைவனைப் பாடுவது முக்திக்காக மட்டுமல்ல வாழும் வாழ்க்கையிலும் நன்மைகளைப் பெற்றுமகிழவும்தான். சாதாரண மனிதர்களைப் புகழ்ந்தாலே ஏதோ சன்மானம் கிடைத்துவிடுகிறது. அப்படியிருக்க இறைவனைப் பாடினால் உயர்ந்த சன்மானங்கள் கிடைக்காமல் இருக்குமா... வெறும் சூடகம் தோள்வளை, தோடு ஆகிய அணிகலன்களை சன்மானமாகப் பெறுவதற்காக மட்டுமல்ல... அவனையே சன்மானமாகப் பெறுவதற்காக... ஆம் ஆண்டாள் கண்ணனையே சன்மானமாக அடைந்தாள். பக்தியின் மூலம் இறைவனை அடையமுடியும் என்பதை இந்த உலகுக்கு விளக்குவதற்காக நிகழ்ந்த அவதாரமே ஆண்டாள் அவதாரம். ஆண்டாள் நாச்சியார் மகிழ்வோடு கூடியிருந்து குளிரும் இந்த நாளில் நாம் அவரிடம் வைக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமண வரம் அருளும் திருப்பாவை

குறிப்பாகத் திருமண வரம் வேண்டுவோர் தவறவிடக் கூடாத நாள் கூடாரவல்லி. இந்த நாளில், வாய்ப்பிருப்பவர்கள் தவறாமல் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு இருக்கும் ஆண்டாள் சந்நிதியில் நின்று ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்னும் திருப்பாவை 27 வது பாசுரத்தைப் பாட வேண்டும். உங்களால் இயன்ற அளவு எண்ணிக்கையில் இந்தப் பாசுரத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். காரணம், இந்தப் பாடலில் இருக்கும் அனைத்தும் மங்கலமான விஷயங்கள் என்பதால் எத்தனை முறை அவற்றை உச்சரிக்கிறோமோ அத்தனை அளவு மங்கலமானவைகளை நம் வாழ்வில் பெறுவோம். குறிப்பாகப் பெண்கள் தினமும் காலையில் விளக்கேற்றி இந்தப் பாசுரத்தைப் பாடிவந்தால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆண்டாள்
ஆண்டாள்

அக்கார அடிசிலும் வெண்ணெயும்

இந்த நாளுக்கான சிறப்பு நிவேதனம் அக்கார அடிசிலும் வெண்ணெயும் சமர்ப்பிப்பது. ஆண்டாள் நாச்சியார், அந்தக் கண்ணனே தனக்கு மணவாளனாகினால் 108 பாத்திரங்களில் அக்கார அடிசிலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கிறேன்’ என்று வேண்டிக்கொண்டாளாம். அவள் வேண்டுதல் பலித்ததனால் அவள் சார்பாக ஸ்ரீராமாநுஜர் அந்த வேண்டுதலை நிறைவேற்றினாராம். எனவே திருமண வரம் வேண்டுபவர்கள் நாளை வீட்டிலேயே ஆண்டாள் வழிபாடு செய்து அக்கார அடிசல் மற்றும் வெண்ணெயினைப் பெருமாளுக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் திருமண வரம் விரைவில் கைகூடும் என்கிறார்கள் அடியவர்கள்.

ஆண்டாள் நாச்சியார் பூமகளின் திருவதாரம். கூடாரவல்லி நாளில் நம் தாயாகிய பூமித் தாயைப் போற்றிப் புகழ்ந்து நற்பலன்களைப் பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism