Published:Updated:

நிச்சயப் பலன்களைத் தரும் ஸ்ரீஐயப்ப சிறப்பு யாகங்கள்... நீங்களும் சங்கல்பிப்பது எப்படி?

ஐயப்ப சிறப்பு யாகங்கள்
News
ஐயப்ப சிறப்பு யாகங்கள் ( ம.அரவிந்த் )

மார்கழியின் நாயகனாம் ஐயப்பனின் இந்த வைபோகத்தில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் விருப்பங்கள் நிறைவேற சங்கல்பித்துக் கொள்ளுங்கள்.

பூவுலகில் தீயவர்களால் தமது படைப்பினங்களுக்கு தீமை உண்டாகும்போதெல்லாம் இறைவன் அவதாரம் செய்து துஷ்ட நிக்ரஹம் புரிந்து காப்பது வழக்கம். அப்படியே தர்ம சாஸ்தாவின் எட்டாவதும் இறுதியானதுமான ஸ்ரீஐயப்பனின் அவதாரமும் நிகழ்ந்தது. பந்தள ராஜகுமாரனாக வளர்ந்து தீயவளான மகிஷியை சம்ஹாரம் புரிந்து நன்மையை நிலைநாட்டினார். பிறகு தனது அவதார நோக்கம் பூர்த்தி பெற்றதால் சபரிமலையில் தவக்கோலம் ஏற்று தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாம் அருள்பாலிக்க 18 படிகளுக்கு மேல் எழுந்தருளினார். பாபாவிமோசனம் வேண்டிய லீலாவதி எனும் மகிஷியை மாளிகைப்புரத்து அம்மனாக்கி தனக்கு அருகிலேயே வீற்றிருக்கவும் அருள் செய்தார்.

சபரிமலை
சபரிமலை

கங்கைக்கு நிகரான பம்பை நதிக்கரையில் ஐயப்பன் அம்பு எய்து, தான் அமரவிருக்கும் இடத்தைக் காட்ட, அந்த இடத்தில் பந்தள அரசன் ராஜசேகரன் கோயில் கட்டினார். மந்திர பீடத்தில் யோக வடிவில் யோக சின் முத்திரை தாங்கி ஐயப்பன் அமர, அதே போன்ற அர்ச்சாவதார விக்ரகத்தை பரசுராமர் அங்கு பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீராமனுக்கு சேவை செய்த ஸ்ரீசபரி என்ற பக்தை அங்கு வாழ்ந்ததின் நினைவாக அந்த மலை சபரிமலை எனப்பட்டது. குளிர் சூழ மலர்ந்திருக்கும் அந்த மலைக் கூட்டத்தின் நடுவே ஐயன் ஐயப்பன் அருளாட்சி புரிந்து வருகிறான். கார்த்திகை மாதத்தில் இருமுடி கட்டி தம்மை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எப்போதும் ஜோதி வடிவிலும் விக்கிரக வடிவிலும் தரிசனம் கொடுத்துக் கொண்டே இருக்கிறான் கலியுக வள்ளல் ஐயப்பன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமைதி, ஆற்றல், தெளிவான சிந்தனை, சாதிக்கும் சாமர்த்தியம், எதிரிகளை வெல்லும் துணிவு அனைத்தையும் அருளும் மூலபந்தம் என்னும் ஆசனத்தில் ஐயன் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இவரை தரிசிப்பவர்களுக்கும் மேற்கூறிய பலன்கள் கிட்டும் என்பதே சபரிமலை யாத்திரையின் நோக்கம் எனப்படுகிறது. ஐயப்ப சீசன் எனப்படும் இந்த நாளில், கட்டுப்பாடான இந்த சூழலில் அனைவருமே சபரிமலைக்குச் சென்று ஐயனை தரிசிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அதனால்தான் வரும் டிசம்பர் 18-ம் தேதி (சனிக்கிழமை) மார்கழி பௌர்ணமி நன்னாளில் தஞ்சைக்கு வரவிருக்கிறான் நம் ஐயப்பன்.

சண்டிகா தேவி ஹோமம்
சண்டிகா தேவி ஹோமம்
ம.அரவிந்த்

தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் டிசம்பர் 18-ம் தேதி அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை சிறப்பு வைபோகங்கள்-விசேஷ யாகங்கள் நடைபெற உள்ளன. காலை 6 மணிக்கு ஸ்ரீமஹா கணபதி ஹோமம் தொடங்கி, ஸ்ரீசண்டிகா தேவி ஹோமம், ஸ்ரீஉமா மாகேஸ்வர பூஜை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஹரிஹர ஐயனார் பூஜை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம் என்பதும் ஒரு விசேஷம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சபரிமலை முன்னாள் மாளிகைபுரம் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ அனிஸ் நம்பூதிரி, பிரம்மஸ்ரீ மனோஜ் நம்பூதிரி ஆகியோர் தலைமையில், காடந்தேத்தி சிவஸ்ரீ. பால சிவாத்மஜன் குருக்கள், மஹாசாஸ்த்ரு பிரியதாசன் ஸ்ரீ அரவிந்த் சுப்ரமண்யன் மற்றும் பெரியோர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறையே வழிபடப்படும் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை, மகாகுருசாமி, நடிகர் நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த 18 படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளோம். மேலும் இங்கு மட்டுமே விசேஷமாக நடைபெறும் 'நூறும் பாலும்' என்ற சர்ப்ப தோஷ வழிபாடு சிறப்பானது. இந்த வழிபட்டால் நாக தோஷம் விலகி விரும்பிய வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனிப்பட்ட முறையில் ஹோமம் செய்வதை விடப் பலரும் சேர்ந்து சத்சங்கமாக, கூட்டு வழிபாடாக ஹோமம் செய்வதே உத்தமமானது என்கிறது வேதம்.

ஐயப்ப ஆராதனை
ஐயப்ப ஆராதனை

இந்த அற்புதமான ஐயப்ப ஆராதனையில் கலந்து கொள்வதால் தோஷங்கள் அத்தனையுமே நீங்கும் என்பது உறுதி. ஆரோக்கியம், ஞானம், செல்வ வளம், மன நிம்மதி, பூரண ஆயுள், விரும்பிய உத்தியோகம், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சத்ரு பயம் நீங்கும், வம்பு வழக்குகள் தீரும், வியாபார அபிவிருத்தி உண்டாகும் போன்ற பல நன்மைகளை அடையலாம். மார்கழியின் நாயகனாம் ஐயப்பனின் இந்த வைபோகத்தில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் விருப்பங்கள் நிறைவேற சங்கல்பித்துக் கொள்ளுங்கள்.

நெய் அபிஷேகம்
நெய் அபிஷேகம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.