Published:Updated:

நோய்கள் நீக்கி நல் ஆரோக்கியம் அருளும் தன்வந்த்ரி மகாஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம்
ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம்

தன்வந்த்ரி பகவானின் மூலமந்திரத்தைச் சொல்லி பல்வேறுவிதமான அபூர்வ மூலிகைகள் கொண்டு யாகம் செய்வதன் மூலம் அவரின் அருளைப் பெறலாம். நோயுற்றவர்கள், தங்களின் நோய் தீரவும் நீடித்த ஆரோக்கியம் பெறவும் தன்வந்த்ரி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொள்வதும் நல்லது என்கின்றனர் ஆன்றோர்கள்.

ஸ்ரீ தன்வந்திரி பகவான் மகாவிஷ்ணுவின்‌ அவதாரம்‌. தேவர்களும்‌ அசுரர்களும்‌ அமுதத்திற்காகப் பாற்கடலைக்‌ கடைந்தபோது அமுத கலசத்துடன்‌ பாற்கடலிலிருந்து தோன்றியவர்‌. தேவர்களுக்கு அமுதத்தை வழங்கி அவர்களுக்கு மரணமிலாப்‌ பெருவாழ்வு அளிப்பதற்கென்றே தோன்றியவர்‌. அதன்பின்னும் தன்வந்திரி 32 தலைமுறைகளில்‌ பல பிறவிகள்‌ எடுத்து நான்கு வேதங்களுக்கும்‌ இணையான ஆயுர்வேதத்தை வடமொழியில்‌ தொகுத்தருளினார்‌ என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

தன்வந்த்ரி ஹோமம்
தன்வந்த்ரி ஹோமம்

ஆயுர்வேதம் என்னும் ஆரோக்கிய வேதம்

தன்வந்த்ரி பகவானின் அம்சமாக பூமியில் தோன்றிய சித்த புருஷர்கள் ஆயுர்வேதத்தை நூலாக்கித் தந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒரு பிறவியில் தீர்க்கமர்‌ என்பவரின்‌ மகனாகவும், அடுத்த பிறவியில் காசி ராஜனின்‌ மகனாகவும்‌ தோன்றிய மகானே சேதுமான்‌ என்ற திருநாமத்தோடு தீர்த்த பசு என்ற மன்னரின்‌ மகனாகப் பிறந்து ஆயுர்வேதம் என்ற தலைப்பில் பல மருத்துவ நூல்களை எழுதினார் என்கின்றனர். கனிஷ்க மன்னனின் அவையை அலங்கரித்த சுஸ்ருதர்‌ என்ற மருத்‌துவமேதைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையை அவரே கற்பித்தார்‌. பிறகு அனு என்ற அரசனின்‌ மகனாகப்‌ பிறந்து பராசர முனிவரிடம்‌ பாடங்கள்‌ கற்று ஆயுர்வேதத்தை முழுமையாக்கினார் என்கின்றன் வடமொழி நூல்கள்.

தமிழ்மரபில் சித்தர்களான போகரும் அகத்தியரும் தன்வந்திரி பகவான் குறித்த குறிப்புகளையும் அவர் எழுதிக்கொடுத்த மருத்த நூல் குறித்த குறிப்புகளையும் பாடியுள்ளனர்.

தன்வந்த்ரி பகவானை அவரது மூலமந்திரத்தைச் சொல்லி வணங்குவதன் மூலமும் பல்வேறுவிதமான அபூர்வ மூலிகைகள் கொண்டு யாகம் செய்வதன் மூலமும் அவரின் அருளைப் பெறலாம். நோயுற்றவர்கள், தங்களின் நோய் தீரவும் நீடித்த ஆரோக்கியம் பெறவும் தன்வந்திரி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொள்வதும் நல்லது என்கின்றனர் ஆன்றோர்கள். இத்தகைய அற்புத ஹோமத்தைத் தனிஒருவராகச் செய்வது என்பது பெரும் பொருட்செலவு பிடிக்கும். எனவே ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்துகொள்வதன் மூலம் நிறைந்த பலனைப் பெறலாம்.

ஹோமம்
ஹோமம்

தன்வந்த்ரி ஹோமம்

உங்கள் சக்தி விகடன் - திருவடிசூலம் ஸ்ரீஆதி பரமேஸ்வரி ஸ்ரீகருமாரியம்மன் அறக்கட்டளை இணைந்து வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பூரண நலன் வேண்டி இந்த ஹோமத்தை நடத்தவுள்ளது. பிரத்தியேகமான ஹோம திரவியங்களும், விலை உயர்ந்த ஆகுதிகளும் கொண்டு முறைப்படி இந்த ஹோமம் நடைபெறவுள்ளது. முறைப்படி வேதம் பயின்ற சிரோன்மணிகளைக் கொண்டே இந்த ஹோமம் நடக்கவிருக்கிறது. எனவே விருப்பமுள்ள வாசகர்கள் உங்கள் குடும்ப நலன் வேண்டி இதில் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம். திருவடிசூலம் சப்த சைலஜ ஸ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேசத்தில், தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெறும் மகா தன்வந்த்ரி ஹோம வைபவத்துடன், ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீதன்வந்த்ரி பகவானுக்குத் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.

வாசகர்களின் கனிவான கவனத்துக்கு...

ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்).

ஆலயங்களுக்கான அரசு வழிகாட்டுதபடி ஹோம வழிபாடுகள் நடைபெறவுள்ளன. நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம - வழிபாட்டு வைபவங்கள் (29.9.20 செவ்வாய் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவுப் படிவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களையும் சேர்த்துக் குறிப்பிடலாம்.

திருமண திருப்பதி
திருமண திருப்பதி

எங்கு நடைபெறுகிறது?

சென்னை மகேந்திரா சிட்டியை அடுத்துள்ள செங்கல்பட்டு - திருவடிசூலம் சப்த சைலஜ ஶ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேச ஆலயத்தில் வைத்து தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.

நாள்: செப்டம்பர் 27, 2020 நேரம்: காலை 10.00 - 12.00

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 73974 30999; 97909 90404.

இந்த ஹோமத்தில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

அடுத்த கட்டுரைக்கு