Election bannerElection banner
Published:Updated:

உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காக சிறப்புப் பாட்டுப்போட்டி... மார்கழிக் கொண்டாட்டம்!

சிறப்புப் பாட்டுப்போட்டி
சிறப்புப் பாட்டுப்போட்டி

குழந்தைகளோடு கொண்டாடுவோம் குளிர் மார்கழியை!

நாயக்க மன்னர்கள் காலம். மதுரை மாநகரில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. திருமலை மன்னர் முன்னிலையில் `மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ எனும் நூலை அரங்கேற்றிக்கொண்டிருந்தார் குமரகுருபரர்.

அவர், ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்...’ என்ற பாடலுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அன்னை மீனாள் வந்தாள்; அரசரின் கழுத்திலிருந்த மணிமாலையைக் கழற்றி குமரகுரு பரரின் கழுத்தில் அணிவித்து மறைந்தாள்.

ஆம் அவள் வந்தது குழந்தையின் வடிவில்; அர்ச்சகர் மகளின் வடிவத்தில் அங்கே தோன்றி, திருமலை மன்னரின் மடியில் அமர்ந்து பாடலைக் கேட்டு ரசித்ததுடன், குமரகுருபரருக்கு, அரசரின் மணி மாலையைக் கழற்றிப் பரிசளித்து அருள்புரிந்தாள்.

அன்னை சூட்டிய மாலையால் வடபுலத்தையே ஆட்டி வைத்த அருளாளர் என்ற சிறப்பை குமரகுருபரர் பெறவில்லையா!

திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர்

இன்னொரு சம்பவம்...

திருக்குளத்து நீரில் மூழ்கிய தந்தையைக் காணாமல் சிறு பிள்ளை ஒன்று அழுதது. `அப்பா, அப்பா...’ என்று பெருங்குரல் எடுத்து அழைத்தது. பிள்ளை அலறியதும் ஓடி வந்தவர்கள் லோக மாதாவும் பிதாவுமான ஈசனும் உமையம்மையும்தான். அழுத பிள்ளைக்கு ஞான பாலும் கிடைத்தது; சுந்தரத் தமிழுக்கு ஒரு ஞானசம்பந்தர் கிடைத்தார் இல்லையா!

மற்றுமொரு திருக்கதை... பசியால் வருந்தி அழுத வியாக்ரபாதரின் திருமகனான உபமன்யு என்ற சிறு பிள்ளையின் பாடலுக்கு மயங்கிய ஈசன் திருப்பாற்கடலையே வரவழைத்துக் கொடுத்தாராம்.

அந்த உபமன்யு குழந்தை பிற்காலத்தில் பகவான் கிருஷ்ணனுக்கே குருவாகும் பெருமையைப் பெறவில்லையா..?

இன்னும் பக்த பிரகலாதன், மார்க்கண்டேயன், துருவன் என்று கருவிலேயே திருவான ஞானப்பிள்ளைகளை நம் புராணங்கள் போற்றி மகிழ்கின்றன.

அவ்வளவு ஏன்...

வேத நாயகனான சிவபெருமானுக்கே `ஓம்’ என்ற பிரணவத்தின் பொருளைச் சொல்லி, `தகப்பன் சுவாமி’ எனும் சிறப்புப் பெற்றது முருகக் குழந்தை அல்லவா?!

இப்படிக் குழந்தைகள் இறைவனை எண்ணிப் பேசினாலும், பாடினாலும், அழுதாலும், தொழுதாலும் உடனே பலன் கிடைத்து விடும் என்பது நம் ஞானநூல்கள் தரும் வழிகாட்டல்.

பாட்டுப்போட்டி
பாட்டுப்போட்டி

அவ்வகையில், மாதங்களில் சிறப்பான இந்த மார்கழியில் தெய்வங்களின் சிறப்பைக்கூறும் தெய்வங்களைப் போற்றும் எளிய துதிப்பாடல்களை உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் மழலைக் குரலில் பாடச் செய்வதும் கேட்டு மகிழ்வதும் பெரும் பாக்கியம் அல்லவா?!

அதன் பொருட்டே, உங்கள் பிள்ளைகள் பங்கேற்கும் இந்தச் சிறப்புப் பாட்டுப்போட்டி. ஆம், குழந்தைகளோடு கொண்டாடுவோம் குளிர் மார்கழியை.

போட்டியில் பங்கு பெறுவது எப்படி?

* உங்கள் குழந்தைகள் எளிதில் பாடுவதற்கேற்ற எளிய எளிய தெய்வத் துதிப்பாடல் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

* அந்தப் பாடலை தெளிவாகப் பாட உங்கள் பிள்ளைகளைத் தயார் செய்யுங்கள்.

* அவர்களின் குரலிலேயே துதிப்பாடலைப் பாடவைத்து, (3 நிமிடங்களுக்கு மிகாமல்) தெளிவான வீடியோவாக உங்கள் மொபைல் போனில் பதிவு செய்யுங்கள்.

* நீங்கள் பதிவுசெய்த வீடியோ பதிவைக் கீழ்க்காணும் பிரத்யேக இணைப்பைப் பயன்படுத்தி, அதிலுள்ள வழிகாட்டுதலின் உதவியோடு அப்லோடு செய்யுங்கள்.

உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காக
சிறப்புப் பாட்டுப்போட்டி...
மார்கழிக் கொண்டாட்டம்!

உங்கள் கவனத்துக்கு...

* போட்டியில் கலந்துகொள்ளும் பிள்ளைகளில்... குரல் வளம், பிழையற்ற தெளிவான உச்சரிப்பு முதலானவற்றின் அடிப்படையில் இசைச் சான்றோர்கள் மூலம் 11 பேர் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்குச் சிறப்புப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

* சிறப்புப் பாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் பிள்ளைகளின் வீடியோக்கள், நீங்கள் கண்டு மகிழும் வகையில் விகடன் இணைய தளத்தில் வெளியாகும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்களிப்புச் சான்றிதழ் (pdf வடிவில் மெயில் மூலம்) வழங்கப்படும்.

* வீடியோ பதிவுகளுக்கான இணைப்பு (link) 31.12.2020 வியாழன் வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். அதற்குள்ளாக பிள்ளைகளின் பாட்டுப் பதிவு வீடியோக்களை இணைப்பது அவசியம்.

* வெற்றியாளருக்கான சிறப்புப் பரிசு 2021 ஜனவரி மாத இறுதிக்குள் அனுப்பிவைக்கப்படும். ஒலி - ஒளி தெளிவற்ற வீடியோக்கள் போட்டியில் பங்கேற்க இயலாது.

போட்டியில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு