Published:Updated:

காரியத் தடைகளை நீக்கி மங்கல நிகழ்வுகளை உடனே நடத்த உதவும் ஸ்ரீஐயப்ப ஆராதனைகள்... பதிவு செய்யுங்கள்!

ஸ்ரீஐயப்ப ஆராதனை
News
ஸ்ரீஐயப்ப ஆராதனை

டிசம்பர் 18-ம் நாள் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் மிகச் சிறப்பான ஐயப்ப ஆராதனை விழா நடைபெற உள்ளது.

காலவ மகரிஷியின் மகளான லீலாவதி, தான் பட்டம் ஏற்று மகிஷியாக வேண்டும் என்ற பேராசையால் சாபம் உண்டாகி, அசுரப் பெண்ணாக மகிஷியாகப் பிறந்தாள். எவராலும் வெல்லப்படாத சக்தியாக தான் திகழ வேண்டும் என்று விரும்பி தவமிருந்து பல வரங்கள் பெற்றாள். நடக்கவே நடக்காத செயல் என்று எண்ணி, ஆணுக்குப் பிறக்கும் குழந்தையாலேயே தன்னுடைய முடிவு இருக்க வேண்டும் என்று வரமும் வாங்கிக் கொண்டாள். ஈசன் நினைத்தால் நடக்காத காரியம் ஒன்றும் உண்டா!
சபரி மலை
சபரி மலை

திருமால் மோகினியானார், ஸ்ரீஐயப்ப அவதாரம் நடைபெற்றது. மகிஷியை அழிக்கவே ஐயன் ஐயப்பன் மண்ணில் அவதரித்தார். தீமைகளின் வடிவான மகிஷியைக் கொன்று இந்த மண்ணுலகைக் காப்பாற்றினார். அவதார முடிவில் கலியுகம் முழுக்க இந்த சபரி மலையிலேயே அமர்ந்து சகல ஜீவராசிகளையும் பாதுகாக்க 18 படிகளைக் கடந்து யோகபீடத்தில் அமர்ந்து கொண்டார். அந்த இடத்தில் அகத்திய முனிவரின் வழிகாட்டலின்படி பந்தள மன்னர் அழகிய கோயிலைக் கட்டினார். அழகிய ஐயப்பன் சிலாரூபத்தை பரசுராமர் பிரதிஷ்டை செய்தார். ஐயப்பனை வழிபடும் முறைகளையும் விரத நியதிகளையும் அவரே உருவாக்கி அருளினார். அன்றிலிருந்து இன்று வரை கலியுக தெய்வமாய், கற்பக விருட்சமாய், கானக வாசனாய் ஐயப்பன் தன்னை தரிசிப்பவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து, ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அருளி வருகிறார். ஐயப்பனை மனம் உருகி வழிபடும் எவர் வீட்டிலும் தரித்திரம் அண்டுவதில்லை. தோஷ-சாபங்கள் அணுகுவதில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
18 படி
18 படி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒவ்வொரு மாதத்தின் முதல் ஐந்து நாள்களும் மண்டல-மகர பூஜைகளின்போது கார்த்திகை முதல் தேதியிலிருந்து மகர சங்கராந்தி நாள் வரையும் திருக்கோயில் திருநடை திறக்கப்பட்டு ஐயப்பன் தரிசனம் தருவார். இதில் மகர ஜோதி விழா சிறப்பானது. மகர சங்கராந்தி அன்று உத்திர நட்சத்திரத்தில் பொன்னம்பல மேடு என்ற இடத்தில் ஐயன் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார். இதைக்காண உலகெங்கும் இருந்து பல லட்சம் பக்தர்கள் சபரி மலையில் கூடுவர். இது பெரும் அதிசயமாகவும் பக்தர்கள் எண்ணிக்கையைப் பொருத்த அளவில் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. ஐயனின் விருப்பமோ. காலத்தின் கோலமோ துரதிர்ஷ்ட வசமாக பெருந்தொற்று, கனமழை காரணமாக இந்த ஆண்டும் சபரி மலைக்குச் செல்லவும், தரிசனம் செய்யவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியாத சூழல் உள்ளது. அதனால் என்ன! நம்பியவரைக் காக்கும் நம் மணிகண்ட தெய்வம் நம்மைத் தேடி வந்துவிட்டதே, ஆம், என்னைத் தேடி நீ வராவிட்டாலும், உன்னைத் தேடி நான் வருகிறேன் என்று அந்த கருணை தெய்வம், காந்தமலை ஜோதி தஞ்சைக்கு வரவிருக்கிறான்.

ஸ்ரீதர்ம சாஸ்தா
ஸ்ரீதர்ம சாஸ்தா
ம.அரவிந்த்

ஆம், வரும் டிசம்பர் 18-ம் நாள் (சனிக்கிழமை) தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் மிகச் சிறப்பான ஐயப்ப ஆராதனை விழா நடைபெற உள்ளது. இதில் அற்புதமான அத்தி மர ஐயப்பன் காட்சி அருள உள்ளார். அன்றைய அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை சிறப்பு வைபோகங்கள்-விசேஷ யாகங்கள் நடைபெற உள்ளன. சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிக்க இயலாத அன்பர்களுக்காக அதே போன்ற ஆராதனைகளை தஞ்சையில் நடத்த உள்ளோம். இந்த அற்புத ஆராதனையில் காலையில் ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஹரிஹர ஐயனார் பூஜை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, ஸ்ரீசண்டிகா தேவி ஹோமம், ஸ்ரீஉமா மாகேஸ்வர பூஜை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என விரிவான பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம் என்பதும் ஒரு விசேஷம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அற்புத விழாவில் சபரிமலை முன்னாள் மாளிகைபுரம் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ அனிஸ் நம்பூதிரி, பிரம்மஸ்ரீ மனோஜ் நம்பூதிரி ஆகியோர் தலைமையில், காடந்தேத்தி சிவஸ்ரீ. பால சிவாத்மஜன் குருக்கள், மஹாசாஸ்த்ரு பிரியதாசன் ஸ்ரீ அரவிந்த் சுப்ரமண்யன் மற்றும் பெரியோர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
நவகிரக பூஜை
நவகிரக பூஜை

ஆண்டுக்கு ஒருமுறையே வழிபடப்படும் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை, மகாகுருசாமி, நடிகர் நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த 18 படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளோம். மேலும் இங்கு மட்டுமே விசேஷமாக நடைபெறும் 'நூறும் பாலும்' என்ற சர்ப்ப தோஷ வழிபாடு சிறப்பானது. இந்த வழிபட்டால் நாக தோஷம் விலகி விரும்பிய வரன் கிடைக்கும். மேலும் மாலை 5.30 அளவில் ஸ்ரீஐயப்பனுக்கு 1008 தாமரை மலர் அர்ச்சனை. 108 தேங்காய் உடைத்து நீராஞ்சனம். சனிப்பெயர்ச்சியை ஒட்டி நவகிரக பூஜை. விளக்கு பூஜை நடைபெறும்.

இந்த ஆராதனையில் கலந்து கொள்வதால் சுகமான வாழ்வும் சௌபாக்கிய நலமும் கிட்டும். நாக தோஷங்கள் உள்ளிட்ட கலியுக தோஷங்கள் அத்தனையுமே நீங்கும் என்பது உறுதி. திருமண யோகம், புத்திர பாக்கியம், வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாட்டு பயணங்கள் நலமாக அமையும். நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும். அரிதினும் அரிதான இந்த ஐயப்ப வைபோகத்தில் நீங்களும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற சங்கல்பித்துக் கொள்ளுங்கள்.

ஐயப்ப வைபோகம்
ஐயப்ப வைபோகம்
ம.அரவிந்த்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.