Published:Updated:

பல தெய்வங்களை ஆராதிக்கும் மகா சுவாதி ஹோமத்தின் சிறப்புகள்... நீங்களும் கலந்துகொள்வது எப்படி?

மகா சுவாதி ஹோமம் - ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் அன்றாட வாழ்வியல் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள ஆண்டவனைத் தான் சரண் அடைகிறோம். எத்தனையோ வேண்டுதல், அதை நிறைவேற்றிக் கொள்ள எத்தனையோ நேர்த்திக்கடன்கள் என்று ஆலய வழிபாட்டை நாம் அன்றாடம் கடைப்பிடித்து வருகிறோம். தனிப்பட்ட வேண்டுதலுக்கு பூஜைகள், விசேஷ ஆராதனைகள் பயன்படுகின்றன என்றாலும் உலக நன்மை, குறிப்பிட்ட பலனுக்கான பரிகாரங்கள் என்று வரும்போது ஹோமங்களும் யாகங்களும் தேவைப்படுகின்றன. தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் உருவாக்கிய இந்த வேள்வி முறைகள் இறைவனை எளிதில் அடைந்துவிடும் எளிய பூஜைகள் எனலாம்.

வேள்வித்தீயின் வழியாகச் செல்லும் ஆகுதிகள் குறிப்பிட்ட தெய்வங்களை அடைந்து, அதன்வழியே பக்தர்களின் வேண்டுதல்களை விரைவாக அடைந்துவிடும் ஆற்றலைக் கொடுப்பவை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் என ஒவ்வொரு குறிப்பிட்ட ஹோமங்களும் வழிபாடுகளும் இருக்க, அதில் மகா சுவாதி ஹோமம் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்த ஹோமத்தில் பல தெய்வங்களை ஆராதிக்கும் 9 விதமான ஹோமங்களும் ஒருங்கே நடைபெறுவது மிக மிகச் சிறப்பான விஷயம் என்கின்றன ஞான நூல்கள்.

லட்சுமி நரசிம்ம யாகம்
லட்சுமி நரசிம்ம யாகம்

திருமண வரம் அருளும் லட்சுமி நரசிம்ம யாகம், தோஷங்கள் அகற்றி நலம் அருளும் சுதர்சன மகா யாகம், நிலம், வீடு தொடர்பான சிக்கல்கள் தீர்க்கும் பூவராக மகா யாகம், கலைகள், ஞானம் அருளும் லட்சுமி ஹயக்ரீவ யாகம், ஆரோக்கியம் வழங்கும் தன்வந்திரி மகா யாகம், செல்வவளம் அருளும் பாக்கியலட்சுமி மகா யாகம், காரிய ஸித்தி அருளும் வைணதேய ஆஞ்சநேய யாகம், பதவி யோகம் அருளும் ஸ்ரீராம யாகம், மழலை வரம் அருளும் ஸ்ரீசந்தான கோபால யாகம் போன்றவை இந்த மகா சுவாதி ஹோமத்தில் நடைபெறுவது வழக்கம். அபூர்வ மூலிகைகள், விசேஷ மலர்கள், அற்புதமான ஆகுதிப் பொருள்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவது வழக்கம்.

யாகபுரி, யக்ஞபுரி, வேள்விபுரம் என்றெல்லாம் போற்றப்படும் இஞ்சிமேடு திருத்தலம் வந்தவாசி-சேத்துப்பட்டு வழித்தடத்தில் சின்ன கொழப்பலூர் என்ற ஊரிலிருந்து இடதுபுறச் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் மூலவராக ஸ்ரீவரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயாரோடு எழுந்தருளி உள்ளார். ஸ்ரீசெஞ்சுலட்சுமி எனும் திருமகளை மடியில் எழுந்தருளச் செய்தபடி கல்யாண நரசிம்மர் காட்சி தருகிறார். தனி சந்நிதியில் பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமச்சந்திர மூர்த்தியும், வேறொரு சந்நிதியில் ஶ்ரீசுதர்சன ஆழ்வாரும் இங்கு அருள்பாலிக்கிறார்கள்.

அதிகப் பொருள் செலவில் செய்யப்படும் இந்த மகா ஶ்ரீசுவாதி ஹோமம், இஞ்சிமேடு திருத்தலத்தில் உறையும் கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு மாதம்தோறும் சுவாதி நட்சத்திர திருநாளன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அவ்வகையில் வரும் ஆடி மாதம் சுவாதித் திருநாளன்று (14.8.2021 சனிக் கிழமை) இங்கு நடைபெறும் மகாசுவாதி ஹோம வைபவத்தில் வாசகர்களும் சங்கல்பித்து பலன் பெறலாம்.

இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம்
இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம்

சக்தி விகடன் வாசகர்கள் இந்த யாகத்தின் பெரும் பலன்களை அடையவென்றே சக்தி விகடனும் GRT நிறுவனமும் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலய நிர்வாகமும் இணைந்து வரும் சுவாதி திருநாளில் 14-8-2021 காலை 8.30 மணி முதல் இந்த புனித பூஜையை நடத்த உள்ளது. இந்த மகா சங்கல்ப பூஜையில் கலந்து கொண்டு எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுகிறோம்.

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீசுவாதி மஹா ஹோமம்
ஶ்ரீசுவாதி மஹா ஹோமம்

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் மஞ்சள் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு