Published:Updated:

குருப்பெயர்ச்சிக்காக மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் விசேஷ பூஜை..! சக்தி விகடன் சிறப்புச் சலுகை

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகையை அறிமுகப்படுத்துகிறது சக்தி விகடன். சக்தி விகடனின் ஒரு வருட டிஜிட்டல் சந்தா பெறும் வாசகர்களுக்கான சிறப்புச் சலுகை இது.

குருப்பெயர்ச்சி - சக்தி விகடன்
குருப்பெயர்ச்சி - சக்தி விகடன்

வாக்கியப் பஞ்சாங்கப்படி நிகழும் விகாரி வருடம், 29.10.19, செவ்வாய் அதிகாலை 3:40 மணிக்கு சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திர தினத்தில், குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார். அன்று வாசகர்களுக்காக குரு பரிகாரத் தலமான மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்) சிறப்புச் சங்கல்பம் - அர்ச்சனையுடன் கூடிய விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறது சக்தி விகடன்.

மயிலாடுதுறை வள்ளலார் கோயில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்)
மயிலாடுதுறை வள்ளலார் கோயில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்)

ஏன் மயிலாடுதுறை வள்ளலார் கோயில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்)?

தோஷத்தின் காரணமாக தன் பதவியையும் பெருமையையும் இழந்த குரு பகவான், இந்தக் கோயிலில் அருளும் ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வழிப்பட்டு, தான் இழந்த பதவியையும் பெருமையையும் மீண்டும் பெற்றார். ஆகவே, ஜாதகம் மற்றும் கோச்சாரத்தில் பாதிப்பு உள்ளவர்கள், இந்தத் தலத்து மேதா தட்சிணாமூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கி குரு கடாட்சம் பெறுவர் என்பது ஐதிகம்.

இந்தச் சலுகையைப் பெறுவது எப்படி?

சக்தி விகடனின் ஒரு வருட டிஜிட்டல் சந்தா பெறும் வாசகர்களுக்கான சிறப்புச் சலுகை இது. இந்தச் சந்தாவைப் பெறும் வாசகர்கள், விரும்பினால் குருப்பெயர்ச்சிக்கு உரிய பரிகாரத் தலமான மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பூஜையில் தங்களின் பெயர் - நட்சத்திரத்தைச் சங்கல்பிக்கும் வாய்ப்பைப் பெறலாம். கோயில் பிரசாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு, சக்தி விகடன் ஆன்லைன் ஆண்டு சந்தாவான ரூ.499-ஐ செலுத்தினாலே போதும்.

குரு பகவான்
குரு பகவான்

ஏற்கெனவே சக்தி விகடனின் ஒரு வருட சந்தா வாசகர்களாக இருப்பவர்கள் மற்றும் அனைத்து இதழ்களுக்கும் சந்தா செலுத்தியவர்கள், விரும்பினால் இந்தச் சிறப்புப் பூஜையில் தங்களின் பெயர்-நட்சத்திரத்தைச் சங்கல்பிக்கும் வாய்ப்பைப் பெறலாம். அவர்களுக்கும் கோயில் பிரசாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு தங்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து ரூ.100 செலுத்தினால் போதும்.

ஒரு சந்தா பெற்றவர் அதிகபட்சம் 5 பேருக்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால், ஒரு முகவரிக்கு மட்டுமே பிரசாதம் அனுப்பப்படும். பூஜை முடிந்த 15 நாள்களுக்குள் பிரசாதம் தாங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும். 28.10.19 (திங்கள்) மதியம் 12 மணிக்குள் சந்தாவைச் செலுத்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சக்தி விகடனின் வாசகர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பூஜை இது!

சிறப்புச் சங்கல்பம் - அர்ச்சனையுடன் கூடிய விசேஷ பூஜை
சிறப்புச் சங்கல்பம் - அர்ச்சனையுடன் கூடிய விசேஷ பூஜை
Gurupeyarchi Package
Gurupeyarchi Package

சக்தி விகடன் சந்தா செலுத்த மற்றும் ஏற்கெனவே சந்தா பெற்ற வாசகர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2019-2020 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கே..!