Election bannerElection banner
Published:Updated:

சொர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதியில் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சனிப்பெயர்ச்சி ஹோமம்
சனிப்பெயர்ச்சி ஹோமம்

சனிபகவான் தனுசிலிருந்து தன் சொந்த வீடான மகரத்தில் பிரவேசிக்கிறார். சொந்த வீட்டில் இருக்கும் ஒருவர் எப்படி பலம் பெற்று அமைந்திருப்பரோ அதேபோன்று சனி இங்கு ஆட்சி பலம் பெற்று அமர்கிறார்.

நவகிரகங்களில் சனிபகவானை ஆண்டுகிரகம் என்போம். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆவார் சனிபகவான். ஒருவர் வாழ்வில் முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்களின் சொந்த ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பார். இதை அடிப்படையாக வைத்தே முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை முப்பது ஆண்டுகள் வீழ்ந்தவரும் இல்லை என்னும் பழமொழி உருவானது.

சனிபகவான் கெடுபலன்களைத் தரும் கிரகம் அல்ல. அவர் தர்மவான். நம் செயல்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்பப் பலன்களை வழங்குபவர்.

வாழ்க்கையின் எந்தவிதமான பிரச்னையையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சலையும், இயல்பாகக் கையாள்வதற்குரிய அனுபவத்தையும் சனி பகவான் ஒருவரின் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் தருவார். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனைக் கீழே போகச் செய்யமாட்டார்.

ஸ்ரீசொர்ணகால பைரவர்
ஸ்ரீசொர்ணகால பைரவர்

சித்தர்கள், பாசாங்கற்ற உண்மையான ஆன்மிகவாதிகள், கடைநிலை ஊழியர்கள், தொண்டர்கள், சமூக சேவகர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக மக்கள் சேவை செய்பவர்களுக்கு காரணகர்த்தாவாக திகழ்பவர் சனிபகவான். சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசாங்கு செய்யாமல் உண்மையாக உழைக்கக் கூடியவர்கள்.

மகரம், கும்பம் ஆகிய இரண்டு லக்னங்களுமே சனியின் ஆட்சி வீடுகள். அருகருகே இருக்கும் இரண்டு லக்னங்களில் ஆட்சி பெறும் கிரகம் சனி மட்டுமே. துலாம் ராசியில் உச்சமடையும் இவர், மேஷ ராசியில் நீசம் அடைகிறார்.

தான தர்மங்கள் செய்வதன் மூலம் சனிபகவானின் அருளைப் பெறலாம். தினமும் காக்கைக்கு சாதம் வைத்து உண்பது சனிபகவானுக்குரிய ஸ்தோத்திரங்களைப் படிப்பது ஆகியவை சனிபகவானுக்குப் ப்ரீதியான ஒன்று.

இத்தகைய சிறப்புகளையுடைய சனிபகவானின் பெயர்ச்சி வாக்கியப் படி வரும் 27.12.2020 அன்று காலை 5.21 மணிக்கு நிகழ்கிறது.

சனிபகவான் தனுசிலிருந்து தன் சொந்த வீடான மகரத்தில் பிரவேசிக்கிறார். சொந்த வீட்டில் இருக்கும் ஒருவர் எப்படி பலம் பெற்று அமைந்திருப்பரோ அதேபோன்று சனி இங்கு ஆட்சி பலம் பெற்று அமர்கிறார்.

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான் இருக்கும் இடத்தின் அடிப்படையிலும் பார்வையின் பலன்களின் அடிப்படையிலும் பலன்களை வழங்க இருக்கிறார்.

கோசாரப்படி இந்தப் பெயர்ச்சியில் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளுக்கு உத்தம பலன்களும் மேஷம், கன்னி ஆகிய ராசிகளுக்கு மத்திம பலன்களும் உண்டாகும். மற்ற ராசிக்காரர்கள் கட்டாயம் சனிப்பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

நிகழும் சனிப்பெயர்ச்சியையொட்டி வாசகர்கள் அனைவரும் நன்மை பெறவேண்டியும், அவர்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் கிரக தோஷங்கள் நீங்கி சகல சுபிட்சங்களும் கிடைக்கவேண்டி பிரமாண்டமான சனிப்பெயர்ச்சிப் பரிகார ஹோமம் நடைபெறவுள்ளது.

சக்தி விகடனும் ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் இணைந்து வழங்கும் இந்த ஹோமம், பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார்பாளையம் கிராமம் அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

பைரவ குருஜீ முத்து குருக்கள் தலைமையில் ஹோமபூஜைகள் நடைபெறவுள்ளன. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜையும், தேய்பிறை அஷ்டமி பூஜையும் மிகவும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக சிறப்பு ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோம வைபவத்தில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கிரகங்களின் மூலமந்திர ஹோமம், ம்ருத்யுஞ் ஜய ஹோமம், சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் ஆகியன நடைபெற உள்ளன.

27.12.2020 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்- 6.1.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன.

ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

நீங்களும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் தகவல்களுக்கு : 89390 30246

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு