Published:Updated:

குலசை தசரா: `வேஷம் கட்ட அம்மன் உத்தரவு அவசியமா?'- சிறப்புத் தகவல்கள்

குலசை தசரா

லட்சோபலட்சம் மக்கள் வேண்டுதல் நிமித்தம் விரதம் இருந்து, வேஷம் கட்டி, காணிக்கை வசூலித்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக குலசைக்கு வருவார்கள். அம்பாளுக்கு காணிக்கையை நேர்ச்சையை செலுத்தி வழிபட்டுச் செல்வார்கள்.

குலசை தசரா: `வேஷம் கட்ட அம்மன் உத்தரவு அவசியமா?'- சிறப்புத் தகவல்கள்

லட்சோபலட்சம் மக்கள் வேண்டுதல் நிமித்தம் விரதம் இருந்து, வேஷம் கட்டி, காணிக்கை வசூலித்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக குலசைக்கு வருவார்கள். அம்பாளுக்கு காணிக்கையை நேர்ச்சையை செலுத்தி வழிபட்டுச் செல்வார்கள்.

Published:Updated:
குலசை தசரா

திருச்செந்தூரில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கும் ஊர் குலசேகரப்பட்டினம். கோடிக்கணக்கான பக்தர்களின் குலம் காக்கும் தெய்வமாய் திகழும் முத்தாரம்மன் ஆட்சி நிகழும் இவ்வூரின் சிறப்பு தசரா திருவிழா என்பதை நாமறிவோம். ஆனால், அந்த அம்பிகை இங்கே கோயில் கொண்ட கதை என்ன, இங்கே முதன்முதல் தசரா திருவிழா ஆரம்பித்தது எப்போது, எல்லோராலும் தசராவுக்கு வேஷம் கட்டிவிட முடியுமா, தசரா விரதம் வழிபாட்டின் நியதிகள் என்ன... இதுகுறித்து பல அபூர்வத் தகவல்களைச் சொல்வதுதான் இந்த வீடியோ. முதலில் முத்தாரம்மன் இங்கே குடிகொண்ட கதையைத் தெரிந்துகொள்வோம்.

குலசை தசரா
குலசை தசரா

புற்றும் உடை மரமும்!

மகிஷாசுரனை அம்பாள் வதைத்த கதையை நாம் அறிவோம். அதனால் உண்டான தோஷம் நீங்கிட, சிவபெருமானை தியானித்து அம்பாள் தவம் இருந்த புண்ணிய தலம்தான் குலசை. அவளின் தவத்துக்கு இரங்கி சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராக தரிசனம் தந்தாராம்.

இவ்வாறு அம்பாள் சிவனருள் பெற்ற இந்த இடத்தில், கால ஓட்டத்தில் புற்றும், அதன் மேலாக ஒரு உடைமரமும் வளர்ந்து நின்றன.பின்னாளில், ஆங்கிலேயர்கள் கன்னியாகுமரிக்கு புறவழிச்சாலை அமைக்க குலசேகரப்பட்டினத்தில் தேர்வு செய்திருந்த இடத்தில் இந்தப் புற்றும் மரமும் தடையாக இருக்கவே, மரத்தை வெட்ட முடிவெடுத்தனர்.

அப்படி மரத்தை வெட்டியபோது, எந்தக் கிளையை வெட்டினாலும் அதில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. சுற்றியிருந்தவர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றபோது, அங்கிருந்தவர்களில் ஒருவர் மரத்தின் அடிப்பகுதியை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அங்கே இறைவனின் முகமும், இறைவியின் முகமும் காணப்பட்டது. எனவே மக்கள் அந்தப் புற்றையே இறைவியாக பாவித்து வழிபடத் தொடங்கிவிட்டனர்.

குலசை தசரா : வேடமணிந்த பக்தர்கள்
குலசை தசரா : வேடமணிந்த பக்தர்கள்

கனவில் கிடைத்த உத்தரவு!

ஒருநாள், அம்பாள் உபாசகரான மயிலாடி சுப்பையா ஸ்தபதி கனவில் தோன்றிய அம்பாள், பஞ்சலிங்கபுரம் மலையில் இருந்து கல் எடுத்து, கொட்டாரம் என்ற இடத்தில் வைத்து, சுவாமி மற்றும் அம்பாள் சிலைகளைச் செய்யுமாறு உத்தரவு கொடுத்தாள். எந்த ஊருக்கு என்று அந்த ஸ்தபதிக்குத் தெரியாது.

இந்த நிலையில் குலசையில் புற்றின் மேலாக ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்ய விரும்பிய மக்கள், மயிலாடி சுப்பையா ஸ்தபதியிடம் சென்றார்கள். அவர்களைப் பார்த்ததுமே அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ‘உங்கள் ஊருக்கான சிலைகள் தயாராக இருக்கின்றன. எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டார். இதோ, இப்போது நாம் தரிசிக்கும் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் திருவுருவங்கள் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது இப்படித்தான்!

பிரசித்தி பெற்ற தசரா திருவிழா இவ்வூரில் தொடங்கியது எப்படி, எப்போது... தெரியுமா?

‘சுமார் 50 வருஷத்துக்கு முன்பு இந்த ஊரில் இருந்த சேதுப்பிள்ளை என்பவரும், அவருடைய செட்டியார் நண்பர் ஒருவரும் சேர்ந்துதான் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவைத் தொடங்கி வைத்தார்களாம். ஆரம்பத்தில் சில நூறு பேருடன் தொடங்கிய தசரா விழா இன்றைக்கு பல லட்சம் பக்தர்கள் கூடும் விழாவாகக் கோலாகலமாக நடைபெறுகிறது.

லட்சோபலட்சம் மக்கள் வேண்டுதல் நிமித்தம் விரதம் இருந்து, வேஷம் கட்டி, காணிக்கை வசூலித்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக குலசைக்கு வருவார்கள். அம்பாளுக்கு காணிக்கையை நேர்ச்சையை செலுத்தி வழிபட்டுச் செல்வார்கள்.

குலசை தசரா
குலசை தசரா

வேஷம் கட்ட அம்மன் உத்தரவு அவசியமா?

மூன்று வருஷத்துக்குப் பிறகும் வேஷம் கட்டிக்கொண்டு வர விரும்பினால், அம்பாள் சந்நிதியில் பூப்போட்டு உத்தரவு கிடைத்த பிறகுதான், என்ன வேஷம் வருகிறதோ அந்த வேஷத்தில் அம்பாளை தரிசிக்க வரலாம்.

எல்லோரும் வேஷம் கட்டலாமா? விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்ன?

கல்யாண வரம், பிள்ளைப் பேறு, பிணிகள் நீங்கிட, கடன்கள் அகன்றிட, வழக்குகளில் வெற்றிபெற... இப்படி தங்களின் பிரச்னையை முத்தாரம்மனிடம் வேண்டுதலாய் வைப்பார்கள். வேண்டுதல் பலித்து, விட்டால், தங்கள் மனதில் என்ன வேஷம் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வேஷத்தில் தொடர்ந்து மூன்று வருஷம் தசரா அன்று அம்பிகையை வந்து தரிசித்து வணங்குவார்கள்.

காளி வேஷம் உட்பட எந்த வேஷமாக இருந்தாலும், காப்பு கட்டிக் கொண்டு, விரதம் இருந்து ஒரு தபஸ்வியைப் போலக் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். வேண்டுதல் எதுவும் இல்லாமல் இப்படி காப்பு கட்டி, விரதம் இருந்து வேஷம் கட்டிக்கொண்டு வரும் பக்தர்களும் இருக்கவே செய்கிறார்கள். சுற்றுப்புற கிராமங்களில் தசராக் குழுக்கள் அமைத்துக்கொண்டு இப்படி வேஷம் கட்டிக்கொண்டு வருவதும் உண்டு.

காளி வேஷம் தரித்து வருவதற்கு 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை!

நாமும் மனமுருக வேண்டுவோம் முத்தாரம்மனை அவள் அருளால் நம் வாழ்வு செழிக்கட்டும்; எதிர்காலம் சிறக்கட்டும்!