Published:Updated:

தமிழ்முறை... வேதமுறை... தஞ்சைக் கோயில் குடமுழுக்கு குறித்து ஆன்மிக அன்பர்கள் விளக்கம்!

பெரிய கோயில்
பெரிய கோயில்

`திருக்கோயிலில் வேத மரபினருக்கும் ஆகமத்துக்கும் திருமுறைகளும் தகுந்த இடத்தை ராஜராஜ சோழன் கொடுத்தான்.'

பெருவுடையார் எனும் திருநாமம் கொண்டு சிவனார் வீற்றிருக்கும் தலம், தஞ்சை பெரியகோயில். கட்டடக் கலைக்கும் ஆன்மிக மகிமைக்கும் பெயர்பெற்ற இந்தத் திருத்தலத்தில் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி 'குடமுழுக்கு விழா' நடைபெறவுள்ளது.

திருமுறைகளை மீட்டெடுத்துத் தந்த பெருமையை உடைய இந்தத் திருத்தலத்தின் குடமுழுக்கு விழா முழுவதும், தமிழ்முறைப்படி திருமுறைகள் பாடித்தான் நடத்தப்பட வேண்டும் எனப் பக்தர்களும் ஆன்மிக, திருமுறை மன்றத்தின் அடியார்களும் கோரிக்கை விடுத்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இதுதொடர்பாக, ஆன்மிக அன்பர்களிடம் விரிவாகப் பேசினோம்.

பெரிய கோயில்
பெரிய கோயில்
மாநாடு... நீதிமன்றத்தில் வழக்கு... விஸ்வரூபமெடுக்கும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரம்!

சைவம் குறித்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறவர், பேராசிரியர் சண்முகத்திருக்குமரனிடம் பேசினோம்.

"ஆகமவிதி என்பது பரிபூரண சக்தியை உள்ளடக்குவதற்கும், வெளிக்கொணர்வதற்குமான ஏற்பாடு. அத்தகைய விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், அதற்கு மொழி ஒரு தடையாய் இருந்துவிட முடியாது. காப்புக் கட்டுதல், மருந்து ஏற்றுதல், பாலாலயம் செய்தல், அஷ்டபந்தனம் என்றால் என்ன, தர்ப்பை எதற்குப் பயன்படுகிறது எனக் குடமுழுக்கின் அனைத்து விவரங்களையும் தமிழில் விளக்கும்போது, இன்னது நடக்கிறது என மக்களுக்கும் தெரியவரும்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்! - திருவிழாவுக்குத் தயாராகும் தஞ்சை பெரியகோயில்
சண்முகத் திருக்குமரன்
சண்முகத் திருக்குமரன்

தமிழை வளர்த்தெடுத்த மன்னனின் கோயிலில் தமிழ்முறைக் குடகுழுக்குதான் பொருத்தமானது. அதுவே ராஜராஜனின் விருப்பமாக இருக்கலாம். எந்த மொழியும் இழிவில்லை. மற்ற மொழிகளில் உள்ள யாவும் தமிழ் மொழியிலும் உண்டு.

தஞ்சைக் கோயில் குடமுழுக்கு கவுன்ட்டவுன்... ஆன்மிக அரசியலின் பின்னணி என்ன?

தமிழ், பக்திக்கான மொழி, சித்தர்கள் மொழி. தேவாரம் உயிர்த்தெழுந்த திருத்தலம் பெரிய கோயில். ஒளிமங்கிக் கிடந்த தமிழ்த் திருமுறைகளுக்கு ஒளிபாய்ச்சிய தலம். ஒளியைப் பாய்ச்சியவன் ராஜராஜன். துணையிருந்தவர் கருவூரார் எனும் சித்தர். இன்றும்கூட, உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய தமிழ்ப்பாடலான 'கொடிக்கவி'யைப் பாடித்தான் திருவிழாக் கொடியையே கோயிலில் ஏற்றுகின்றனர். இவ்வாறு இந்தத் தலம் எல்லா வகையிலுமே தமிழோடு தொடர்புடையது.

ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழன்

தெரிந்த மொழி, பழகிய மொழி, நெருக்கமான மொழி, தமிழ் மொழி. வெளிநாட்டவரான ஜி.யு.போப்கூட திருவாசகத்தில் திளைத்துக் கண்ணீர்விட்டு உருகினார். எனவே, பெரிய கோயிலைப் பொறுத்தவரை தமிழ்முறை குடமுழுக்குதான் ஏற்புடையது என்பது எனது கருத்து. திருமுறைகளை ஏற்றால், தமிழ்முறை குடமுழுக்கையும் ஏற்கத்தான் வேண்டும்.

`தஞ்சை சிட்டியே தெரியுது பாருங்க..!' -போலீஸ்காரரின் முகநூல் லைவால் கொதித்த பெரியகோயில் பக்தர்கள்

ஆலயத்து விளக்குகளுக்கான பொறுப்பை செல்வந்தர்களுக்குத் தந்தால் சரியாக இருக்குமா எனச் சிந்தித்த ராஜராஜன், அந்தப் பொறுப்பை எளியவர்களுக்குத் தந்தான். அவர்களுக்குப் பசுமாடுகள் உள்ளிட்ட செல்வங்களையும் உபயமாகக் கொடுத்தான். மக்களின் வீடுகளில் அடுப்பு எரியவும், மக்களுக்கான கோயிலில் விளக்கு எரியவும் வழிசெய்தவன் அந்த மாமன்னன். அப்படிப் பொதுவானதாக அவன் கட்டித் தந்த பெரிய கோயிலில் எளியோருக்கும் புரியும் வகையில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதே சிறப்பு" என்றார்.

பெரிய கோயில்
பெரிய கோயில்

தமிழ் முறைப்படி தமிழிசையின் மூலம் பல ஆலயங்களில் குடமுழுக்கு, திருமணம் ஆகியவற்றை நடத்தி வருகிறவர் 'கலைமாமணி' விருதுபெற்ற சுரேஷ் சிவன். 'திருநாவுக்கரசர் இசை ஆய்வு மையம்' நடத்தி வருகிற இவர், புதுக்கோட்டை அரசு இசைக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றுகிறார். அவரிடம் தமிழ்வழிக் குடமுழுக்கு முறை பற்றிக் கேட்டோம்.

`தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே இப்படி பேசலாமா?’- பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் பெ.மணியரசன்

"தீபாராதனையின்போது 'கற்பனை கடந்த சோதி' எனத் தொடங்கும் பெரியபுராணப் பதிகம் பாடப்படும். இதைப் போலவே விநாயகர் பூஜை, முருகர் வழிபாடு, கலசங்களை நீராட்டுதல் என ஒவ்வொன்றுக்கும் திருமுறைப் பாடல்கள் உள்ளன. தமிழகத்தின் பல இடங்களில் தமிழ்முறைத் திருமணங்கள் நிறையவே நடைபெற்று வருகின்றன. அதுபோன்று கோயில்களில் தமிழ்முறைப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

சுரேஷ் சிவன்
சுரேஷ் சிவன்
`பெரியகோயிலில் பரிகார பூஜை இல்லாமல் கும்பாபிஷேகமா?'- பழைய சம்பவங்களை நினைவுபடுத்தும் சிவனடியார்கள்!

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடந்தது, வடமொழியிலா தமிழ் மொழியிலா என்ற குறிப்பெதுவும் இல்லை. ஆனால், இந்தக் கோயிலில் பிரதோஷ நாள்கள் உள்ளிட்ட விசேஷங்களில் தமிழ் ஓதுவார்கள் பாடுவது இப்போதும் தொடர்கிறது. இறைவனுக்கு எல்லா மொழியுமே ஒன்றுதான். ஆந்திராவைக் கடந்தால் வடமாநிலங்களில் இறை விக்ரகங்களைத் தொட்டு வணங்கலாம்; அங்கே எந்த மொழி அர்ச்சனையும் கிடையாது. ஆனால், இங்கே அந்த நிலை இல்லை என்பதுதான் கவலை.

`2020 பிப்ரவரி 5-ல் கும்பாபிஷேகம்?' - தஞ்சை பெரிய கோயிலில் வேகமெடுக்கும் பணிகள்

இன்னொரு தகவல். பெருவுடையார் கோயில், தமிழக அறநிலையத்துறையின் கீழ் வராது. மத்தியத் தொல்லியல் துறையின் பொறுப்பில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. அதோடு, காலங்காலமாகக் கோயில் மராட்டிய மன்னர் பரம்பரையின் பொறுப்பு. சதய விழாவில்கூட அந்தப் பரம்பரையினருக்கு மரியாதை செய்யப்பட்டது. எனவே, கட்டாயமாகப் பெரியகோயிலில் தமிழ்முறைப்படி குடமுழுக்கு நடைபெறுகிற சாத்தியக்கூறுகளே இல்லை" என்றார்.

தமிழ்முறை... வேதமுறை... தஞ்சைக் கோயில் குடமுழுக்கு குறித்து ஆன்மிக அன்பர்கள் விளக்கம்!

சென்னை பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் ஒருவரிடம் பேசினோம். "பாரத பூமி, புண்ணிய பூமி. இங்கே கோயில்களில் எல்லாமே ஆகம விதிப்படிதான் நடக்கின்றன. இங்கே எல்லாமே ஆகம விதிப்படிதான் நடக்கிறது. இது நம் முன்னோர்கள் வகுத்த விதி. இதன்படி செய்தால்தான் நலம் கிடைக்கும்.

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக தேதியை அறிவிக்கத் தயங்கும் ஆட்சியாளர்கள்! - சென்டிமென்ட் காரணமா?

அர்ச்சகர் சொல்வது மாதிரிதான் சிற்பி தெய்வ விக்ரகத்தை வடிப்பார். விக்ரகம் செய்யும் முன் ஹோமம் செய்து சகல சம்பிரதாயங்களும் நடக்கும். இறைவனைச் செய்யவும் நிர்மாணிக்கவும் ஆகம சாஸ்திரங்களில் உள்ளன.

தமிழ்முறை... வேதமுறை... தஞ்சைக் கோயில் குடமுழுக்கு குறித்து ஆன்மிக அன்பர்கள் விளக்கம்!

சிவபெருமான் உடுக்கையின் இரண்டு பக்கமும் இருந்து எழுந்த மொழிகள்தான் தமிழும் சம்ஸ்கிருதமும். அதைப் பிரித்துப் பார்த்தல் பாவம். வேத மந்திரங்கள் இறைவனுக்கானது. நம்மை நோக்கி இறைவன் வர வேண்டுமென்றால், எந்த மொழியில் வேண்டுமானாலும் இறையை வணங்கலாம். இறையிடம் நாம் செல்வதற்கு வேதங்கள் தேவை. ஆழ்வார் பாசுரம்கூட, 'நமோ நாராயணா' என்றுதான் பெருமாளை சேவிக்கச் சொல்கிறது" என்றார்.

இதுகுறித்து ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி.சிவத்திடம் கேட்டோம்.

"வைதீகம் வேறு, ஆகமம் வேறு என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழுக்கு உரிய இடத்தைக் கொடுத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ராஜராஜன் அதைத்தான் செய்தான். வேத மரபினருக்கும் ஆகமத்துக்கும் திருமுறைகளும் தகுந்த இடத்தை அவன் கொடுத்தான்.

பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ்மொழியில் நடத்த வேண்டும்! - உண்ணாவிரதம் இருக்கும் சித்தர்கள்
சுகி.சிவம்
சுகி.சிவம்

தமிழில் வணங்கினாலும் கடவுள் செவி சாய்ப்பார். தாய்மொழிக்கு வசியப்படாத கடவுள் உண்டா என்ன? ஆனாலும், பிறமொழிகளையும் வெறுக்க வேண்டியதில்லையே. கடவுளுக்கு மொழி கிடையாது. அதே நேரத்தில் மரபையும் மீறக்கூடாது. வேத முறையையும் முழுமையாகப் புறந்தள்ளாமல் அதே நேரத்தில் திருமுறைகளுக்கும் இடம் கொடுத்து குடமுழுக்கை நடத்த வேண்டும். பெரிய கோயிலின் மரபு என்னவோ அதைப் பின்பற்றுவதுதான் நல்லது" என்றார்.

பின் செல்ல