Published:Updated:

தீராதப்பிணிகளைத் தீர்த்து வைக்கும் ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

தன்வந்த்ரி
தன்வந்த்ரி

குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்க்கையை வரமாகப் பெற, 'ஸ்ரீ'தன்வந்த்ரி பகவானை வழிபட வேண்டும். அவரை வழிபடுவதால் தீராத பிணிகளும் தீரும்; எவ்வித நோய் பாதிப்புகளும் நம்மை அண்டாது என்கின்றன ஞானநூல்கள்.

யாகங்களும் ஹோமங்களும் மனிதர்களின் நல்வாழ்வுக்காக ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு தேவைக்குமென சிறப்பு ஹோமங்கள் தோன்றுவித்துக் குறிப்பிட்ட தெய்வங்களை துணைக்கழைத்து நலம் பெற்று வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். பொதுவாக, ஐந்து விதமான யக்ஞங்கள் செய்யப்பட வேண்டுமென சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவை பிரம்ம யக்ஞம்; தேவ யக்ஞம்; பித்ரு யக்ஞம்; அதிதி யக்ஞம்; பூத யக்ஞம் ஆகியன.

திருமண் திருப்பதி
திருமண் திருப்பதி

பிரம்ம யக்ஞம் என்றால் வேத பாராயணம் செய்வது, நாம ஜபம் செய்வது, இறைவனின் பாடல்களைப் பாடுவது... தேவ யக்ஞம் என்பது தேவர்களைக் குறித்து ஹோமங்கள் செய்வது... பித்ரு யக்ஞம் என்பது மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது... அதிதி யக்ஞம் என்பது வீடு தேடி வருபவர்களுக்கு உணவு தருவது... பூத யக்ஞம் என்பது காகம் உள்ளிட்ட சகல ஜீவராசிகளுக்கும் உணவு தருவது.

உடல் நலம் வேண்டி செய்யப்படும் தேவ யக்ஞமே ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம். மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழத் திருவுள்ளம் கொண்ட பகவான் விஷ்ணு எடுத்த அவதாரம்தான் தன்வந்த்ரி அவதாரம்! அவர் திருக்கரத்திலிருந்து பெற்ற அமிர்தத்தை உண்டதால்தான் தேவர்கள் அழியாத அமரத்துவத்தைப் பெற்றனர் என்கின்றன ஞானநூல்கள்.

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்

ஆயுர்வேதத்தின் சிருஷ்டிகர்த்தா ஸ்ரீதன்வந்த்ரி பகவான். நாள்பட்ட தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தீர்வு வேண்டி, ஸ்ரீதன்வந்த்ரி பகவானை மனதார வழிபட்டு பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் நிவாரணம் பெறலாம். இந்த ஹோம வைபவம், வரும் 27.9.2020 (புரட்டாசி - 11) ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழவுள்ளது. மகா தன்வந்த்ரி ஹோமம் நடைபெறவுள்ள இந்தத் திருநாள், பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதம் - ஏகாதசி திதி- திருவோண நட்சத்திரம் மற்றும் அமிர்தயோகம் கூடிய உன்னதமான திருநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாட்டு வைபவங்களுக்குப் பன்மடங்கு பலன் உண்டு என்பது நிச்சயம்.

ஏன் இந்த ஹோமத்தில் கலந்துகொள்ள வேண்டும்?

குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்க்கையை வரமாகப் பெற, 'ஸ்ரீ'தன்வந்த்ரி பகவானை வழிபட வேண்டும். அவரை வழிபடுவதால் தீராத பிணிகளும் தீரும்; எவ்வித நோய் பாதிப்புகளும் நம்மை அண்டாது என்கின்றன ஞானநூல்கள். அவ்வகையில், இன்றைக்கு உலக மக்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் விலகவும், பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம்பெறவும், வாசகர்கள் ஏவ்வித நோய்ப் பாதிப்புக்கும் ஆளாகாத வண்ணம் பூரண உடல் ஆரோக்கியம் பெறவும், வேறு பிணிகளால் வருந்துவோர் அவற்றிலிருந்து விரைவில் மீண்டு நலம் பெறவும் வேண்டியும் நடக்கவுள்ள இந்த யாகத்தில் கலந்து கொள்வதால் அச்சம் விலகி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது உண்மை.

ஹோமம்
ஹோமம்

இந்த ஹோமத்தின் சிறப்பு என்ன?

தேவ யக்ஞத்தில் மிக சிறப்பானது ஸ்ரீதன்வந்த்ரி மகாஹோமம். உடல் ஆரோக்கியத்துக்காகச் செய்யப்படும் இந்த ஹோமத்தால் ஆரோக்கியத்தின் கடவுளான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் மகிழ்ச்சி அடைந்து பூரண ஆரோக்கியத்தை அருளுவார் என்பது ஐதிகம். ஆன்மிக சேவையில் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக் கொள்ளும் உங்கள் சக்தி விகடன் - திருவடிசூலம் ஸ்ரீஆதி பரமேஸ்வரி ஸ்ரீகருமாரியம்மன் அறக்கட்டளை இணைந்து வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பூரண நலன் வேண்டி இந்த ஹோமத்தை நடத்தவுள்ளது. பிரத்தியேகமான ஹோம திரவியங்களும், விலை உயர்ந்த ஆகுதிகளும் கொண்டு முறைப்படி இந்த ஹோமம் நடைபெறவுள்ளது. முறைப்படி வேதம் பயின்ற சிரோன்மணிகளைக் கொண்டே இந்த ஹோமம் நடக்கவிருக்கிறது. எனவே விருப்பமுள்ள வாசகர்கள் உங்கள் குடும்ப நலன் வேண்டி இதில் கலந்து கொள்ளலாம். திருவடிசூலம் சப்த சைலஜ ஸ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேசத்தில், தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெறும் மகா தன்வந்த்ரி ஹோம வைபவத்துடன், ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீதன்வந்த்ரி பகவானுக்குத் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. அனைவரும் இதில் கலந்து கொண்டு பூரண ஆயுள் பெற்று வாழ வேண்டுகிறோம்.

எங்கு நடைபெறுகிறது?

சென்னை மகேந்திரா சிட்டியை அடுத்துள்ள செங்கல்பட்டு - திருவடிசூலம் சப்த சைலஜ ஶ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேசத்தில் (நடப்புச் சூழலில் உரிய விதிகளைப் பின்பற்றி) நிகழவுள்ள இந்த வழிபாடுகளில், வாசகர்கள் தங்கள் நலனுக்காகவும் பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களின் நன்மைக்காகவும் வேண்டிச் சங்கல்பித்து பலன் பெறலாம்.

நாள்: செப்டம்பர் 27, 2020 நேரம்: காலை 10.00 - 12.00

ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்
ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம்

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் (29.9.20 செவ்வாய் அன்று) வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

கீழ்க்காணும் சங்கல்ப முன்பதிவு படிவத்தில் பெயருக்கான இடத்தில் தங்களின் நட்சத்திரத்தையும் சேர்த்துக் குறிப்பிடவும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களையும் பெயர் என்ற சேர்த்துக் குறிப்பிடலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 73974 30999; 97909 90404.
அடுத்த கட்டுரைக்கு