Published:Updated:

அம்பிகை வழிபாடு, நாக சதுர்த்தி, ஆண்டாள் ஜயந்தி... அருள் வழங்கும் ஆடிப்பூரம்!

கோதை ஆண்டாள்

ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் வரும் பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. காரணம் பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். எனவே, சுக்கிரனுக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில் வரும் ஆடிப்பூரம் மிகவும் தவறவிடக் கூடாதது.

அம்பிகை வழிபாடு, நாக சதுர்த்தி, ஆண்டாள் ஜயந்தி... அருள் வழங்கும் ஆடிப்பூரம்!

ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் வரும் பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. காரணம் பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். எனவே, சுக்கிரனுக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில் வரும் ஆடிப்பூரம் மிகவும் தவறவிடக் கூடாதது.

Published:Updated:
கோதை ஆண்டாள்

ஆடிப்பூரம் பல்வேறு சிறப்புகளை உடையது. அம்பாளின் அனுக்கிரகம் மிகுந்த நாள்களில் ஆடிப்பூரம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் விரதமிருந்து வழிபடுவது அவசியம். அதிலும் ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் வரும் பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. காரணம் பூர நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். எனவே, சுக்கிரனுக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில் வரும் ஆடிப்பூரம் மிகவும் தவறவிடக் கூடாதது.

வளைகாப்பு தாம்பூலம்
வளைகாப்பு தாம்பூலம்

ஆடிப்பூர விரதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடிப்பூரத்தன்று அம்பிகையை வழிபட விரும்புபவர்கள் காலையிலேயே எழுந்து நீராடி தூய உடை அணிந்து விரதம் இருந்து அம்பாளுக்கு உகந்த பால்பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். ஆலயம் சென்று தொழமுடியாத காரணத்தால் வீட்டிலேயே அம்பாள் படத்துக்கு மலர்கள் சாத்தி வழிபடலாம். அம்பாளுக்கு உரிய லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்து நெய் விளக்கேற்றி வழிபடலாம். இந்த நாளில் அன்னைக்கு வளையல் சமர்ப்பித்து வழிபடுவது வழக்கம். எனவே, அன்னைக்கு என்று புதிய வளையல்களை எடுத்துப் பூஜை அறையில் வைத்துப் பின் யாரேனும் சுமங்கலிகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் வழங்குவதன் மூலம் வீட்டில் இருக்கும் வறுமைகள் நீங்கும். மேலும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கட்டாயம் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண்டாள் நாச்சியார் அவதாரத் திருநாள்

ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்

ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |

ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்

கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||

வைணவத்தில் பெருமாளுக்கு மூன்று தேவியர் என்பது மரபு. இதை நம்மாழ்வார், `திருமகள், மண்மகள். ஆயர் மடமகள் என்றிவர் மூவர்’ என்று குறிப்பிடுகிறார். இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை, திருமகள் என்பவள் பெருமாளின் செல்வம், பூமிப் பிராட்டியோ அந்த செல்வத்தை வைக்கும் இடம், அந்தச் செல்வம் வைத்திருக்கும் பெட்டகத்தின் சாவியைக் கொண்டிருப்பவள் ஆயர் மடமகளான நப்பின்னை என்று ருசியாக வியாக்யானம் செய்கிறார். ஆனால், ஆண்டாள் நாச்சியாரோ இந்த மூன்றையும் தன் குணமாகக் கொண்டு மூவருமாகவே விளங்குகிறார் என்கிறார் வேதாந்த தேசிகர்.

வேதாந்த தேசிகர் எழுதியிருக்கும் ஸ்துதிகள் பலவற்றினுள் முக்கியமானவை தாயார் குறித்து அவர் எழுதியிருக்கும் ஸ்துதிகள். அவர் ஸ்ரீ ஸ்துதி, பூ ஸ்துதி, கோதா ஸ்துதி என்று மூன்று தாயாரின் மீதும் ஸ்துதிகள் செய்திருக்கிறார். என்றாலும் மூவரும் வேறு வேறு என்று எண்ணவில்லை. விஷ்ணு சித்தரின் குலம் விளங்கத் துளசி வனத்தில் கற்பக விருட்சம் போலத் தோன்றினாளாம் ஆண்டாள் நாச்சியார். அவள் கருணையால் திருமகளையும் பொறுமையில் பூமிப் பிராட்டியையும் ஸ்வரூப லட்சணத்தில் ஆயர் மடமகளாகவும் திகழ்கிறார் என்று போற்றுகிறார் தேசிகர்.

ஆடிப்பூரம்
ஆடிப்பூரம்

ஸ்ரீவில்லிப்புத்தூர், பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார், பெரியகுளம், பெரிய பெருமாள், பெரியவாச்சான்பிள்ளை என்று பல்வேறு பெரியவைகளுக்குப் புகழ்பெற்றது. அதன் காரணம் அங்கு ஆண்டாள் நாச்சியார் அவதாரம் செய்ததுதான். பூமிப் பிராட்டியின் அம்சம் கோதை நாச்சியார் என்பது மரபு.

இந்த உலகில் பரம்பொருளை உணர்த்தி நம்மை நல்வழிப்படுத்த வல்லவை வேதங்கள். அந்த வேதத்தின் சாரமானது கீதை. ஆனால், இவை இரண்டும் ஜீவாத்மாக்கள் முழுமையும் கற்றுக் கடைத்தேற பல ஜன்மங்கள் தேவைப்படலாம். பூமிப் பிராட்டி தன் பிள்ளைகளாகிய ஜீவர்களின் மீது அன்பும் பாசமும் கொண்டவர். எனவே, வேதங்கள் அனைத்தின் உட்பொருளையும் மக்களுக்கு உணர்த்தத் தானே அவதரித்து எளிய பாசுரங்கள் மூலம் விளக்கினாள். அதனால்தான் `வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்' என்று கொண்டாடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோதை என்றால் பூமாலை என்று பொருள். விஷ்ணுசித்தர் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்பவர். நிலத்தை உழுதபோது ஜனக மகாராஜனுக்கு சீதாப்பிராட்டி கிடைத்ததைப் போல, துளசிச்செடியின் கீழ் கோதை நாச்சியார் பெரியாழ்வாருக்கு கிடைத்தார். அவர் கிடைத்த அந்தத் தினம் ஆடிப் பூரம்.

இந்தப் பூவுலகில் அன்னை பூமிப் பிராட்டியே வந்து அவதரித்த நாள் என்பதால் இந்த நாள் மிகவும் உயர்ந்த ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த நாளுக்கு ஈடான புண்ணிய தினம் வேறு ஒன்றும் இல்லை என்கிறார் மணவாள மாமுனிகள்.

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த

திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு

உண்டோ மனமே உணர்ந்துபார் ஆண்டாளுக்கு

உண்டாகில் ஒப்புஇதற்கும் உண்டு.

ரங்கநாதர்
ரங்கநாதர்
srirangaminfo.com

ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் வழிபாடு செய்வது மிகவும் அவசியம். ஆலயம் சென்று தமிழ்த்தாயாகிய ஆண்டாளை வழிபட முடியாத சூழல் நிலவுவதால் வீட்டிலேயே அன்னை அருளிய தமிழ்ப் பாசுரங்களைப் பாராயணம் செய்வதன் மூலம் அருள்பெறலாம். குறிப்பாகத் திருமண வரம் வேண்டுபவர்கள் கட்டாயம் அன்னை அருளிய திருப்பாவைப் பாடல்களை ஆடிப்பூர நாளின் காலையில் எழுந்து பாராயணம் செய்ய வேண்டியது அவசியம்.

ஆடிப்பூர தினம் என்றில்லை, நாளுமே திருப்பாவைப் பாடல்களைப் பாராயணம் செய்வது நன்மை தரும். காரணம், அன்னையின் பாசுரங்களைப் பாராயணம் செய்வது வேத அத்யயனம் செய்வதற்கு ஈடாகும். பொதுவாகப் பெண்கள் வேத பாராயணம் செய்வதில்லை. அவர்களுக்காகவே வேதத்தின் சாரத்தை அன்னை பாசுரங்களாக அருளிச் செய்திருக்கிறார்.

நாக சதுர்த்தி
நாக சதுர்த்தி

நாக சதுர்த்தி

நாளை மற்றுமொரு சிறப்பாக நாக சதுர்த்தி வருகிறது. நாகர் வழிபாடு என்பது ஆதி வழிபாடுகளில் ஒன்று. பெண்கள் தங்களின் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் மேற்கொள்ளும் விரதம் இது. நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள். ஆனால், தற்போது அந்த வழிபாட்டையும் வீட்டிலேயே கடைப்பிடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் தவறாமல் அம்பிகையோடு நாகர் வழிபாட்டையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism