Published:Updated:

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் சக்தி கொலு... ஏற்பாடுகள் தீவிரம்! #Video

Golu Dolls
Golu Dolls

பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, ‘சக்தி கொலு’ என்னும் பெயரில் அவர்களிடமிருந்து பொம்மைகள் வாங்கி கொலு அமைக்க உள்ளோம். பல்வேறு வகையான இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன. காலை, மாலை அனைத்து நாள்களும் பூஜைகள் நடைபெற உள்ளன.

நம் பாரத தேசம் எங்கும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் முக்கியமானது, நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் 9 நாள்களும் நவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்களில், வீடுகளில் கொலுவைத்து வழிபடுவது வழக்கம். சில ஆலயங்களிலும் கொலு வைக்கப்படுவதுண்டு.

Golu Dolls
Golu Dolls

துர்கையைப் போற்றி வழிபடும் இந்த நவராத்திரி நிகழ்ச்சி, இந்த வருடம் செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதன்முறையாக வடபழநி முருகன் கோயிலில், இந்த ஆண்டுமுதல் 'சக்திகொலு' என்ற பெயரில் கொலு வைக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடுசெய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்து கோயில் நிர்வாகி, சித்ராதேவியிடம் கேட்டபோது...

Golu Dolls
Golu Dolls

“நவராத்திரி நிகழ்ச்சியில், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, ‘சக்தி கொலு’ என்னும் பெயரில் அவர்களிடமிருந்து பொம்மைகள் வாங்கி கொலு அமைக்க உள்ளோம். பல்வேறு வகையான இசை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன. காலை, மாலை அனைத்து நாள்களும் பூஜைகள் நடைபெற உள்ளன.

இந்தப் புது முயற்சிக்கு, பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. கொலுவில், சுமார் 800 பொம்மைகள் வரை வைக்க திட்டமிட்டிருந்தோம், தற்போது 400 பொம்மைகளை பொதுமக்கள் அளித்துள்ளனர். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கொலு பொம்மைகளைைக் கொண்டுவந்து தருகிறார்கள்.

 Chithra Devi - EO
Chithra Devi - EO

கொலுவைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்துள்ளோம். நவராத்திரியின் ஒன்பது நாள்களும் அந்தந்த நாள்களுக்குரிய அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற உள்ளன” என்கிறார் சித்ராதேவி.

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் சக்தி கொலுவுக்கான ஏற்பாடுகள் குறித்து விளக்குகிறார் ஆலய நிர்வாக அதிகாரி சித்ராதேவி.

Posted by Sakthi Vikatan on Thursday, September 26, 2019

பொதுமக்கள், ஆர்வத்துடன் கொலு பொம்மைகளைக் கொடுத்து வருவதோடு, ஆலயத்தை கோலமிட்டு அலங்கரிக்கும் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திவருகின்றனர். பொம்மைகளைக் கொடுக்க வந்த சித்ரா பேசும்போது, “ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டில் மிகப்பெரிய அளவில் கொலு அமைப்போம்.

Golu Dolls
Golu Dolls

இப்போது எங்களின் கொலு பொம்மைகள் சிலவற்றை கோயில் நிர்வாகத்திடம் கொடுத்திருக்கிறோம். அந்த பொம்மைகளை பலர் வந்து தரிசிக்க உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் சித்ரா.

அடுத்த கட்டுரைக்கு