Published:Updated:

ரம்ஜான்: `நோன்பு திறப்பு', `நோன்பு துறப்பு' - எது சரி?

நோன்பு

``இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பார்கள். நோன்பைத் துறக்க மாட்டார்கள். நோன்பை எப்படித் துறக்க முடியும்? பொதுவாக `நோன்பு திறந்துடீங்களா?' என்பதைத்தான் `நோன்பு தொறந்துட்டீங்களா?' என்று பேச்சுவழக்கில் கேட்பார்கள்."

ரம்ஜான்: `நோன்பு திறப்பு', `நோன்பு துறப்பு' - எது சரி?

``இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பார்கள். நோன்பைத் துறக்க மாட்டார்கள். நோன்பை எப்படித் துறக்க முடியும்? பொதுவாக `நோன்பு திறந்துடீங்களா?' என்பதைத்தான் `நோன்பு தொறந்துட்டீங்களா?' என்று பேச்சுவழக்கில் கேட்பார்கள்."

Published:Updated:
நோன்பு

ரம்ஜான் சமயத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நிறைய நடப்பது வழக்கம். அதுவும் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சி என்றால் தங்கள் கட்சித் தலைவர்கள், பிரபலங்களை அழைத்து போஸ்டர் அடித்து அதகளப்படுத்திவிடுவார்கள். அண்மையில் பாஜக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடிக்கப்பட்டிருந்தது.

ரம்ஜான் நோன்பு
ரம்ஜான் நோன்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் ஒரு போஸ்டரில் `நோன்பு திறப்பு' என்றும், மற்றொரு போஸ்டரில் `நோன்பு துறப்பு' என்றும் அச்சிடப்பட்டிருந்தது. ஆக இஃப்தார் நோன்பு திறப்பா அல்லது துறப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பட்டிமன்றப் பேச்சாளர் பர்வீன் சுல்தானாவிடம் கேட்டோம். ``தமிழில் `திறப்பு' என்பதுதான் சரியான சொல். துறப்பு என்று ஒரு சொல் இல்லை. தமிழில் `துறவு' என்ற சொல்தான் இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பார்கள். நோன்பைத் துறக்க மாட்டார்கள். நோன்பை எப்படித் துறக்க முடியும்? பொதுவாக `நோன்பு திறந்துடீங்களா?' என்பதைத்தான் `நோன்பு தொறந்துட்டீங்களா?' என்று பேச்சுவழக்கில் கேட்பார்கள்.

தமிழ்மொழி என்பது எல்லாருக்கும் பொதுவானது. ஒரு சொல்லை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சில சொற்களை நாம் பழகு தமிழில் பேசும்போது அது ஒலி வடிவத்தில் மாறிவருமே தவிர எழுத்து வடிவத்தில் மாறாது.

பர்வீன் சுல்தானா
பர்வீன் சுல்தானா

என்னைப் பொருத்தவரை `துறப்பு' என்ற சொல் நோன்பு திறக்கும் நடைமுறைக்குப் பொருந்தாது. ஆனால் கலித்தொகையில் `துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்' என்றும், கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், மந்திரப் படலத்தில் `துறப்பெனும் தெப்பமே துணை செய்யாவிடின் பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க..." என்ற பாடலிலும் `துறப்பு' என்ற சொல் வரும். இவற்றில் `துறப்பு' என்பதற்கு திறவுகோல் (சாவி) என்பது பொருள். தமிழில் `துறப்பு' என்பதற்கு இப்படி ஒரு பொருள் உண்டு. தமிழ் தெரிந்த ஒரு பெண்ணாகச் சொல்கிறேன்... `துறப்பு' என்பதற்குப் பொருள் இதுதான்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism