Published:Updated:

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை எப்போது? வாட்ஸ்அப் செய்தி விளைவித்த குழப்பமும் சாஸ்திரிகள் வழிகாட்டலும்!

பொங்கல்
News
பொங்கல்

பொதுவாக ஒருவரின் பிறந்த நாள் என்றால் அது அந்த நாளையே குறிக்கும். அந்த நாளிலேயே கொண்டாடுவோம். ஒருவர் மாலையில் பிறந்தார் என்பதற்காக மறுநாள் கொண்டாடுவதில்லை.

ஒவ்வோர் ஆண்டும் தை முதல் நாளே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதை மகர சங்கராந்தி என்று நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்வர். சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில் சூரியன் மகர ராசியில் அடியெடுத்து வைக்கும் நாளில் அவரை வழிபாடு செய்வது வழக்கம். இந்த நாளில் உத்தராயணப் புண்ணியகாலமும் தொடங்குகிறது என்பதால் இன்று செய்யும் சூரிய வழிபாடு மிகவும் சிறப்புடையது என்பது நம்பிக்கை.

பொதுவாக உத்தராயண புண்ணியகாலம் என்பது தைமாதப் பிறப்பு அன்று நிகழும் என்பதால் அந்த நேரத்திலேயே வழிபாடுகள் செய்வதும் வழக்கம். இந்த ஆண்டு தை மாதம் ஜனவரி 14 -ம் தேதி பிற்பகல் வேளையில் பிறக்கிறது. இதனால் சிலர் மாலையில் பொங்கல் வைத்து வழிபட வேண்டாம் என்றும் மறுநாள் 15.1.2022 அன்று பொங்கல் வைக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்த வாட்ஸ் ஆப் தகவல் ஒன்றும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட வேண்டியது என்று என மகாமகோபாத்யாய ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்திரிகளிடம் கேட்டோம்.

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

”ஸ்ரீ குருப்யோ நமஹ; இந்த வருடம் பொங்கல் பண்டிகை குறித்துத் தேவையில்லாத வாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. ஒருவர் 14-ம் தேதி பொங்கல் என்று சொல்கிறார்கள். மற்றவர் 15-ம் தேதி பொங்கல் என்று சொல்கிறார்கள். காரணம் சில பஞ்சாங்கத்தில் தை மாதப் பிறப்பு பிற்பகலில் நிகழ்கிறது என்று போட்டிருக்கிறபடியால் மாலையில் பொங்கல் வைக்க முடியாது என்றும் சொல்கிறார்கள்.

உண்மையில் பொங்கல் பண்டிகை இரண்டு நாள்களுக்கு வரமுடியாது. ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட வேண்டியது. மாலையில் வருகிறது என்பதற்காக பண்டிகை மறுநாள் வருகிறது என்று சொல்லக்கூடாது. சூரிய உதயத்துக்குப் பின் மறைவதற்குள் எப்போது அந்த நேரம் வந்தாலும் அது அன்றுதான். மறுநாள் என்று சொல்லக் கூடாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நாளில் இரண்டு விதமான முக்கியத்துவங்கள் இருக்கின்றன. ஒன்று அந்த நாளில் செய்ய வேண்டிய புண்ணியகாலத் தர்ப்பணம். அதில் சந்தேகமே இல்லை. 14-ம் தேதிதான் அதைச் செய்ய வேண்டும். சூரியன் 14-ம் தேதியே மகரத்துக்குள் வந்துவிடுகிறார். அவரை மறுநாள்வரைக் காக்க வைத்துவிட்டுப் பின் பொங்கல் வைப்பது சரியல்ல. சூரியன் நித்தமும் நாம் தரிசிக்கும் கடவுள். அவர் இல்லாத நாள் என்று ஒன்று கிடையாது. அப்படியிருக்கையில் அவரை வணங்கி வழிபட வேண்டியது நம் கடமை. அவர் இல்லை என்றால் நமக்கு வாழ்க்கையே இல்லை. அப்படியிருக்கையில் அவர் மாலையில் அவர் மகர ராசிக்குள் வருகிறார் என்பதற்காக நாம் அந்த நாள் முழுக்க அதிகாலையில் அவரை வணங்காமலோ அல்லது பொங்கல் வைக்காமலோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரை வரவேற்கு விதமாக காலையிலேயே பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

சூரியபகவான்
சூரியபகவான்

பொதுவாக ஒருவரின் பிறந்த நாள் என்றால் அதுஅந்த நாளையே குறிக்கும். அந்த நாளிலேயே கொண்டாடுவோம். ஒருவர் மாலையில் பிறந்தார் என்பதற்காக மறுநாள் கொண்டாடுவதில்லை. அதுபோலத்தான் இதுவும். பொங்கல் பண்டிகையை 14-ம் தேதியே கொண்டாடி சூரியனை வரவேற்போம். அதில் எந்த சாஸ்திர விரோததுக்கும் இடமே இல்லை. எல்லாம் நன்றாகவே அமைந்திருக்கிறது. பொங்கல் நல்ல முறையில் வருகிறது. கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்” என்று சாஸ்திரிகள் விளக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால் பகல் 10.30 - 12க்குள் ராகு காலம் முடிந்துவிடும். அதைத் தொடர்ந்து வரும் அபிஜித் முகூர்த்தம் எனப்படும் உச்சிவேளையில் பொங்கல் பானை வைத்து வழிபடலாம். 12 மணி முதல் 1.30 மணிக்குள் வழிபாடுகள் செய்வது மிகவும் விசேஷம் என்கிறார்கள்.