Published:Updated:

நவராத்திரி... 9 நாள்கள் விரதம் இருக்க இயலாதோர் என்ன செய்யலாம்?

சாரதா நவராத்திரி - இது, புரட்டாசி- ஐப்பசி மாதங்களில் வரும்; சரத் காலமாகிய புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது. இதை மகா நவராத்திரி, தேவி சரண் நவராத்திரி, சரத் நவராத்திரி ஆகிய பெயர்களாலும் புராண நூல்கள் போற்றுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அகில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன்மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருள்கடாட்சிக்கும் அற்புதமான காலம்தான் நவராத்திரி.

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

- என்று அம்பிகையின் அருமைபெருமைகளைப் போற்றுகிறது தேவி மஹாத்மியம். ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்பட்டதாகப் பழைய நூல்கள் தெரிவிக்கின்றன. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2n591NC

நவராத்திரி
நவராத்திரி

வசந்த நவராத்திரி - பங்குனி மாதத்தில், ஸ்ரீராம நவமியையொட்டி கொண்டாடப்படுவது; வசந்த காலத்தில் வரும்.

ஆஷாட நவராத்திரி - ஆடி மாதத்தில் வருவது.

மக நவராத்திரி - மாசி மாதம் வருவது.

ஆஷாட நவராத்திரியும் மக நவராத்திரியும் இப்போது அவ்வளவாகப் பழக்கத்தில் இல்லை என்பதாலும், அம்பிகை உபாசகர்கள் மட்டுமே அநேகமாக இவற்றைக் கடைப்பிடிப்பதாலும், இவை குப்த நவராத்திரிகள் (மறைவான நவராத்திரிகள்) எனப்படுகின்றன.

சாரதா நவராத்திரி - இது, புரட்டாசி- ஐப்பசி மாதங்களில் வரும்; சரத் காலமாகிய புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது. இதை மகா நவராத்திரி, தேவி சரண் நவராத்திரி, சரத் நவராத்திரி ஆகிய பெயர்களாலும் புராண நூல்கள் போற்றுகின்றன.

இந்தப் புண்ணிய காலத்தில், அம்பிகையின் திருக்கதைகளையும் அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் படித்தும் பாடியும் வழிபடுவது விசேஷம். மேலும் படிக்க... http://bit.ly/2n591NC

சாரதா நவராத்திரி - இது, புரட்டாசி- ஐப்பசி மாதங்களில் வரும்; சரத் காலமாகிய புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது.

ஒன்பது நாள்கள் விரதம் இருக்க இயலாதவர்கள்... சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாள்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் மட்டுமாவது, அம்பாளைப் பூஜித்து வழிபட்டு அருள்பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாளாம். அதனால் இந்த தினம் விசேஷமானது. இந்த அஷ்டமி தினத்தில் அம்பாளைத் தியானித்து வழிபட்டால், நம் கஷ்டங்கள் யாவும் விலகும்.

- புரட்டாசி அமாவாசையை அடுத்த பிரதமை தொடங்கி 9 நாள்கள் நவராத்திரி அனுஷ்டிக்கவேண்டும். பூஜா மண்டபம் அமைப்பது எப்படி? தினமும் மூன்று கால பூஜை செய்வது எப்படி? - சக்தி விகடன் இதழில் முழுமையாக விரிவாக வாசிக்க > வரமும் வாழ்வும் தரும் வழிபாடு! https://www.vikatan.com/spiritual/gods/worship-of-nine-days-navratri

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு