Published:Updated:

`வைகுண்டத்தை தரிசித்த புண்ணியம் வேண்டுமா?'

கூடலழகர் கோயில் விமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கூடலழகர் கோயில் விமானம்!

ஶ்ரீகூடலழகர் தரிசனம் எஸ்.ராஜேஸ்வரி, விருதுநகர்

`வைகுண்டத்தை தரிசித்த புண்ணியம் வேண்டுமா?'

ஶ்ரீகூடலழகர் தரிசனம் எஸ்.ராஜேஸ்வரி, விருதுநகர்

Published:Updated:
கூடலழகர் கோயில் விமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கூடலழகர் கோயில் விமானம்!

மழைக் காலமான நான்கு மாதங்களுக்குத் தேவையான பதார்த்தங்களை, மற்ற மாதங்களில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவுக்கு வேண்டியதை பகலில் சம்பாதிக்க வேண்டும். முதுமைக்கு வேண்டியதை இளமையிலேயே சேர்க்க வேண்டும். மோட்சத்துக்கு வேண்டியதை இந்தப் பிறவியிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியோர்கள்!

`வைகுண்டத்தை தரிசித்த புண்ணியம் வேண்டுமா?'
`வைகுண்டத்தை தரிசித்த புண்ணியம் வேண்டுமா?'

மோட்சத்துக்காக நாம் சேமிக்க வேண்டியது புண்ணியத்தை அல்லவா? இதற்கு வழிகாட்டக் கூடியவன் புருஷோத்தமன் மட்டுமே. அந்த பரமபத நாயகன் பூலோகத்தில் நிரந்தரமாகக் குடிகொள்ள வேண்டும்; அர்ச்சாவதாரக் கோலத்தில்- விக்கிரகத் திருமேனியனாக பூலோக மனிதர்களுக்கு பெரும் புண்ணியத்தை வாரி வாரி வழங்க வேண்டும்.

இப்படியான விருப்பத்துடன் சனகாதி முனிவர்களில் ஒருவரான சனத்குமாரர் தவமிருந்து அருள்பெற்ற தலமே மதுரை அருள்மிகு கூடலழகர் திருக்கோயில். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நடைபயண தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

சனத்குமாரர் மட்டுமல்ல... யுகங்கள் கடந்து நிற்கும் இந்தத் திருக் கோயில் இறைவனை, சனகாதி முனிவர்கள் நால் வரும் இன்றும் வழிபடுவதாக ஐதீகம்.

இந்த ஆலயத்தில் அஷ்டாங்க விமானத்தின் கீழ்- தேவியருடன் அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் கூடலழகர். `பாதாதி கேசமாக இவரை தரிசிக்க... நமது கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். கூடலழகரை தரிசிக்கும் அந்தக் கணத்தில் பணம் - பதவி வேண்டாம்... சுக போகங்கள் எதுவும் வேண்டாம்... உம்மை தரிசிக்கும் இந்த பாக்கியமே போதும் என்று பரிதவிக்கும் மனசுக்கு, வேறு எதையும் கேட்கத் தோணாது. ஆனாலும் கேட்காமலேயே வரங்களை வாரி வழங்கும் வள்ளல் இவர்; பெயருக்கு ஏற்ப பேரழகரும்கூட!’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

கூடலழகர் கோயிலில் அஷ்டாங்க விமானம் சிறப்பு. உத்திரமேரூர், திருக்கோஷ்டியூர், மதுரை கூடலழகர் கோயில் ஆகிய மூன்று தலங்களிலும் அஷ்டாங்க விமானம் உள்ளது. அதிலும், வைகுண்டத்தில் அருளும் திருக்கோலத்திலேயே கூடலழகர் இங்கே அருள் புரிவதால், இந்தத் தலத்தை தரிசித்தால், வைகுண்டத்தை தரிசித்த பலன் கிடைக்குமாம்.

இதன் சிறப்பை பிரம்மாண்ட புராணத்தின் கதலீவன க்ஷேத்திர மகாத்மிய காண்டம், 12 அத்தியாயங்களில் விவரிக்கிறது. முப்பது முக்கோடி தேவர்களும் உறைந்திருக்கும் இந்த விமானத்தை வலம் வந்து கூடலழகரை வழிபட அனைத்து காரியங்களும் ஸித்திக்குமாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism