Published:Updated:

புதிர் புதிது! - 16

ரெ.சு.வெங்கடேஷ், ஓவியம்: தமிழ்

புதிர் புதிது! - 16

ரெ.சு.வெங்கடேஷ், ஓவியம்: தமிழ்

Published:Updated:

'தாத்தா, தாத்தா..! எனக்கு ஒரு செல்போன் வாங்கித் தாங்க, தாத்தா!' என்று கேட்டான் பேரன்.

புதிர் புதிது! - 16

'சரி, நான் கேட்கிற கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால், நீ கேட்டதை வாங்கித் தரேன். சரியா?' என்ற தாத்தா, ''புராண முனிவர் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?' என்று கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புராணங்களில் நிறைய முனிவர்கள் உண்டே...' என்று பேரன் திகைக்க, ''கீழேயுள்ள புதிருக்கான விடைகளைக் கண்டுபிடித்தால், புராண முனிவரையும் கண்டுபிடிக்கலாம்' என்றார் தாத்தா.

இதோ, தாத்தா போட்ட புதிர்...

அருகில் உள்ள படங்களைப் பாருங்கள். டச் ஸ்கிரீன் கொண்ட  செல்போன்களில், பாஸ்வேர்டு முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் லாக் பேட்டர்ன் இது. உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு கோட்டு வடிவத்தை, செல்போன்களின் ஸ்கிரீனில் பதிவு செய்தால் மட்டுமே அந்த செல்போனை பயன்படுத்த இயலும். முதலில் நீங்கள் ஒவ்வொரு செல்போனுக்கும் உரிய, எண்கள் அமைப்பிலான கோட்டு வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கீழ்க்காணும் குறிப்புகள் அந்தந்த செல்போனுக்கான எண்ணை அறிய உதவும்.

குறிப்புகள்:

1) திருவேங்கடம் சார்ந்த மலைகளின் எண்ணிக்கை.

2) அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் இடம்பெறும் வரிசை எண்.

3) 'ஹரியும் சிவனும் ..............................’ என்பார்கள்.

4) அண்டத்தை ஆளும் பூதங்களின் எண்ணிக்கை.

5) 'ஆண்டவன் கட்டளை ........’

என்ன, எண் வடிவங்களைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?

புதிர் புதிது! - 16

இனி அவற்றை அந்தந்த செல்போன்களில் அப்ளை செய்யுங்கள். நீங்கள் அப்ளை செய்திருக்கும் எண் வடிவங்களில் இடம்பெறும் எழுத்துக்களைக் கோத்தால், ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு வார்த்தை கிடைக்கும் (நீங்கள் கண்டுபிடிக்கும் வார்த்தை சரியானதா என்பதை அந்தந்த செல்போன் அருகிலேயே அடைப்புக்குள் தரப்பட்டிருக்கும் குறிப்புகளைக் கொண்டு அறியலாம்).

அந்த ஐந்து வார்த்தைகளையும் செல்போனுக்குக் கீழே இருக்கும் கட்டங்களில் நிரப்புங்கள். இனி, ஐந்து கட்டங்களிலும் வட்டத்துக்குள் சிக்கியிருக்கும் எழுத்துக்களை சேகரித்து ஒழுங்குபடுத்தினால், தாத்தா பேரனிடம் கேட்ட புராண முனிவரின் பெயர் கிடைக்கும்.

அதை கீழ்க்காணும் கட்டத்தில் நிரப்புங்கள்.

புதிர் புதிது! - 16

சிறப்புக் கேள்வி: புராண முனிவர் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவலை ஒரிரு வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

இந்த இரு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 4.11.14.

விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இமெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன், புதிர் புதிது - 16, 757, அண்ணா சாலை, சென்னை600 002.

புதிர் புதிது! - 16
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism