Published:Updated:

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

Published:Updated:

? சக்தி விகடன் இதழில் 'இதோ எந்தன் தெய்வம்’ பகுதியில் காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மனுக்கு ஐந்து அர்ச்சனைகள், ஐந்து வார தரிசனம் குறித்து படித்து மகிழ்ந்தேன். காமாட்சியம்மன் கோயிலில் வலம் வந்து வணங்கும்போது, அம்மனை துதித்து வணங்கும் வகையில் 'ராகா சந்த்ர’ எனும் ஸ்தோத்திரத்தை சிறுவயதில் என் தாத்தா சொல்லிக் கொடுத்திருந்தார். இப்போது அந்த ஸ்தோத்திரம் மறந்துவிட்டது. வித்யை, ஐஸ்வரியம் எல்லாம் தரும் அந்த ஸ்தோத்திரத்தை சக்தி விகடனில் வெளியிடலாமே!

- அஞ்சனா ரவிக்குமார், செங்கல்பட்டு

வாசகி விரும்பிக் கேட்ட ஸ்ரீகாமாட்சியம்மன் ஸ்தோத்திரம்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகாசந்த்ர ஸமான காந்தி வதனா நாகாதிராஜஸ்துதா
மூகானாமபி குர்வதீ ஸுரதுநீ நீகாஸ வாக்வைபவம்
ஸ்ரீகாஞ்சீ நகரீவிஹாரரஸிகா ஸோகாபஹந்த்ரீஸ்தாம்
ஏகாபுண்ய பரம்பரா பசுபதேராகாரிணீ ராஜதே

ஹலோ சக்தி

கருத்து: பௌர்ணமி சந்திரனின் ஒளிக்கு சமமான முகத்தை உடையவளும், இந்திரனால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், ஊமைகளுக்கும்கூட கங்கா பிரவாகம் போன்று வாக்கை அளிப்பவளும், ஸ்ரீகாஞ்சி நகரில் விளையாடுவதில் விருப்பம் உள்ளவளும், பக்தர்களின் சோகத்தை போக்குகிறவளும் ஸ்ரீபரமசிவனின் புண்ணிய பரம்பரையாக வும் விளங்குபவள் ஸ்ரீகாமாக்ஷி. அந்த தேவியை வணங்குகிறேன்.

(இந்த ஸ்தோத்திரப் பாடலை முழுமையாக www.vikatan.com/sakthivikatan -ல் காணலாம்)

? காசியில் அன்னபூரணி போன்று, ஸ்ரீகாலபைரவரும் பிரசித்தி பெற்றவர். தீபாவளியன்று அன்னபூரணியை பூஜிப்பது போன்று பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் ஏதேனும் உண்டா?

- சி.ராமச்சந்திரன், சென்னை-32

பைரவ மூர்த்தி உலகத்தைக் கட்டிக்காக்கும் காவல் தெய்வமாக இருப்பதால் மகா உக்ர மூர்த்தியாக விளங்குகிறார். அவருடைய படைகளாக யோகினிகளும் வேதாளங்களும் உள்ளதாக ஞானநூல்கள் விளக்குகின்ற ஸ்ரீபைரவருடன் அவர்களுக்குப் பூஜையும் படையலும் இட்டு வழிபடுவார்கள். ஸ்ரீபைரவருக்குப் பெரும்படையல் எனப்படும் அன்னபாவாடம் இடுவது சிறப்பு வழிபாடாகப் போற்றப்படுகிறது. குறிப்பாகச் சித்திரை மாதம் பரணியிலும், ஐப்பசி மாதம் பரணியிலும் பைரவருக்குப் படையலிட்டு வழிபடுவது விசேஷம்.

கடந்த இதழில் ஞானமலை திருக்கோயில் குறித்த கட்டுரையில் இடம்பெற்றிருந்த முருகன் கொள்ளை அழகு. எம்பெருமான் வள்ளியுடன் அருளும் இந்தத் திருவடிவின் பெயர், சிறப்பை விவரித்தால் நன்றாக இருக்கும்.

- செ. சிதம்பரம், காரைக்குடி

வாசகரின் கேள்வி குறித்து, ஆன்மிக எழுத்தாளர் வலையப் பேட்டை கிருஷ்ணனிடம் கேட்டோம். அவர் தந்த விளக்கம் இங்கே: 'இந்தத் திருவடிவத்துக்கு குறமகள் தழுவிய குமரன்’ என்று திருப்பெயர். 'நீலச் சிகண்டியில் ஏறும் பிரான். எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான்...’ என்று கந்தரலங்காரம் சிறப்பிப்பதற்கு ஏற்ப அமைந்த அழகு கோலம் இது. 'த்ரயம்பகபுரம்’ திருப்புகழ் பாடலிலும் பொதுப்பாடல் ஒன்றிலும் இந்தத் திருவடிவைக் குறிக்கும் வரிகள் உண்டு. இங்ஙனம் வள்ளிக்குறத்தியுடன் அருளும் முருகப்பெருமானை வழிபட இல்லற ஒற்றுமை மேலோங்கும்; தாம்பத்யம் சிறக்கும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism