Published:Updated:

அடுத்தவருக்காக செய்யும் பிரார்த்தனைக்கே பலன் அதிகம்!

150-வது திருவிளக்கு பூஜைதீபங்களால் ஜொலித்த திருவல்லிக்கேணிவி.ராம்ஜி

அடுத்தவருக்காக செய்யும் பிரார்த்தனைக்கே பலன் அதிகம்!

150-வது திருவிளக்கு பூஜைதீபங்களால் ஜொலித்த திருவல்லிக்கேணிவி.ராம்ஜி

Published:Updated:

''இதுவரை, நம்ம ஆண்டாள் சந்நிதில, எனக்குத் தெரிஞ்சு இப்படியொரு கூட்டத்தைப் பார்த்ததே இல்லப்பா...' என்று பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குத் தினமும் வருகிற திருவல்லிக்கேணிவாழ் அன்பர்கள் பலரும் வியப்பும் மலைப்புமாகப் பேசிக்கொண்டார்கள்.

அடுத்தவருக்காக செய்யும் பிரார்த்தனைக்கே பலன் அதிகம்!

 சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 30.10.14 வியாழக்கிழமை அன்று, சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நடைபெற்றது. சக்திவிகடனின் 150வது விளக்கு பூஜை இது. மொத்தம் 560 வாசகிகள் பதிவு செய்திருந்தனர். மேலும், 'நான் பதிவு பண்ணலை. இங்கே பேனரைப் பார்த்துதான் தெரியும் எனக்கு. இந்த விளக்கு பூஜையில் நானும் கலந்துக்கலாமா?' என்று கேட்டு வந்த வாசகியரை யும் புறக்கணிக்க மனமில்லை. அவர்களும் பூஜையில் அமர்ந்துகொள்ள... ஆண்டாள் சந்நிதிக்கு எதிரேயும் அருகேயும் என நிரம்பியிருந்த பெண்கள் கூட்டத்தைக் கண்டு, மலைத்துப் போனார்கள் அன்பர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விளக்கு பூஜை பற்றி வேதத்தில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று வேதம் அறிந்த சான்றோர்களைக் கேட்டேன். விளக்கு பூஜை குறித்துச் சொல்லப்படவில்லை, ஆனால் விளக்கு பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது என்றார்கள். விளக்கேற்றினால், நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்கிறது வேதம். தினமும் வீட்டில் விளக்கேற்றுங்கள்; இதுமாதிரியான விளக்குபூஜையிலும் கலந்துகொள்ளுங்கள். பாவங்கள் அகன்று, புண்ணியங்கள் பெருகிக்கொண்டே இருக்கும்'' என்று சிறப்பு விருந்தினர் டாக்டர் பூமா வேங்கடகிருஷ்ணன் பேச, மொத்த பெண்களும் கரவொலி எழுப்பினர்.

அடுத்தவருக்காக செய்யும் பிரார்த்தனைக்கே பலன் அதிகம்!

''விளக்கு என்பது இருளை விலக்குவது. இப்போது மின்சாரம் மூலமாக விதம்விதமான விளக்குகள் வந்தாலும்கூட, ஒரு குத்து விளக்கின் பிரகாசத்துக்கும், அந்தச் சுடர் தரும் அமைதிக்கும் ஈடாக முடியாது. எனவே, விளக்கேற்றுகிற ஒவ்வொரு நாளும், வாழ்க்கையில் சுபிட்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். திருமங்கை ஆழ்வார் முதல் பல அடியார்களும் ஆசார்யர்களும் விளக்கின் மேன்மையைப் பாடிப் பரவியிருக்கிறார்கள். காஞ்சி புரம் அருகில் உள்ள தூப்புல் எனப்படும் திருத்தண்கா எனும் திருத்தலம், வேதாந்த தேசிகர் அவதரித்த புண்ணியபூமி. இங்கே சேவை சாதிக்கும் பெருமாளின் திருநாமமே, 'விளக்கொளி தீபப் பெருமாள்’ என்பதுதான்.

பொதுவாகவே, நமக்காகச் செய்கிற வேண்டுதலைவிட, அடுத்தவர்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைக்கே பலன் அதிகம் என்பார்கள். குறிப்பாக, பிறருக்காகவே பிரார்த்தனை செய் என வலியுறுத்துகிறது வைஷ்ணவ சம்பிரதாயம். நாமும் மற்றவரின் நலனுக்காகவே பூஜை செய்வோம்; பிரார்த்திப்போம்' என்று பூமா வேங்கட கிருஷ்ணன் சொல்ல, உற்சாகமானார்கள் வாசகிகள்.

அதைத் தொடர்ந்து, பிரேமா கிருஷ்ணமோகன் என்பவரின் தலைமையில் இயங்கி வரும் செளந்தர்ய ரத்னமாலா இசைக்குழுவினர், விளக்குபூஜையை சிறப்புற நடத்தித் தந்தார்கள்.  

''சக்திவிகடனை ஆரம்பத்தில் இருந்தே படித்து வரும் வாசகர்கள் நாங்கள்.

அடுத்தவருக்காக செய்யும் பிரார்த்தனைக்கே பலன் அதிகம்!

150வது விளக்கு பூஜை பற்றிய அறிவிப்பைப் பார்த்ததும், சட்டென்று எங்கள் மனதில் நாமும் ஏதேனும் ஒருவகையில் இதில் பங்கு கொள்ளலாமே என்று தோன்றியது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில், இந்த 150வது விளக்கு பூஜையில் கலந்துகொள்ளும் பெண்கள் அனைவருக்கும் தலா ஒரு குபேர விளக்கு தருவதென்று தீர்மானித்தோம்!' என்று, சென்னை காட்டாங்குளத்தூரில் வசிக்கும் பாலகிருஷ்ணன் - லீலாவதி தம்பதி தெரிவித்தனர். அதன்படி அவர்களே பூஜைக்கு வந்து, வாசகியர் அனைவருக்கும் குபேர விளக்கைத் தந்து மகிழ்ந்தனர். இதில் நெக்குருகிப் போனார்கள் வாசகிகள்.

''எங்க ஊர்ல இதுவரை சக்திவிகடன் விளக்கு பூஜை நடத்தினதே இல்லை. 150வது விளக்கு பூஜைக்காகவே வந்து கலந்துக்கிட்டு, பார்த்தசாரதி பெருமாளை தரிசனம் பண்ணினதுல, பரிபூரண நிம்மதியும் சந்தோஷமும் எனக்கு!'' என்று சொல்லி நெகிழ்ந்த வாசகி சாந்தி, ஊட்டியில் இருந்து இதற்காகவே கிளம்பி வந்திருந்தார்.

''என் தம்பிக்கு நவம்பர் 9ம் தேதி கல்யாணம். இந்த நேரத்துல ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். ஆஸ்பத்திரில இருக்கான். சீக்கிரம் குணமாகி, நாங்க நினைச்சதுபோலவே சீரும் சிறப்புமா கல்யாணம் நடக்கணும். சக்திவிகடனோட விளக்கு பூஜை, சிறப்பு விருந்தினரின் கருத்துகள், இதோ... கையில் கிடைச்சிருக்கிற குபேர விளக்கு... இது எல்லாமே நல்லதே நடக்கும்னு ஒரு நம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுத்திருக்கு'' என்று வாசகி செல்வி, கண்ணீருடன் தெரிவித்தார்.  

பார்த்தசாரதி பெருமாளின் அருளால், வேண்டியதெல்லாம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism